டிச.1 முதல் SIM கார்டு வாங்க புது விதி.. மீறினால் 10 லட்சம் அபராதம் அல்லது சிறை.. இந்த 5 விஷயம் கட்டாயம்..
டிசம்பர் 1ம் தேதி முதல் இந்தியாவில் சிம் கார்டு (SIM card) வாங்க புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனைவே நடைமுறையில் இருந்து விதிமுறைகளை இனி பிணிப்பற்றப்போவதில்லை என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் புதிய விதிகளை தெரிந்துகொள்வது சிறப்பானது.
மொபைல் ஃபோனைப் (mobile phone) பயன்படுத்தும் பல கோடி இந்திய மக்களில் நீங்களும் ஒருவர் என்றால், கண்டிப்பாக இந்த பதிவை முழுமையாக படித்துவிடுங்கள். காரணம், இப்போது இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் எப்போதாவது நீங்கள் புதிய சிம் கார்டை (new SIM card) வாங்க வேண்டிய சூழ்நிலை உருவானால், கட்டாயம் இந்த புதிய சிம் கார்டு விதிகளை அறிந்திருப்பது நல்லது.

டிசம்பர் 1 முதல் சிம் கார்டு விதிகளில் (new SIM card rules from December 1st) வரவிருக்கும் மாற்றங்கள் குறித்த தகவலை இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. முதலில் அக்டோபர் 1-ஆம் தேதி இந்த புதிய சிம் கார்டு விதிகள் அமலாக்கப்படுவதாக இருந்தது. ஆனால், அரசாங்கம் இரண்டு மாதங்களுக்கு இதை ஒத்திவைத்தது.
புதிய சிம் கார்டு விதிகள் (new SIM card rules):
இந்த புதிய சிம் கார்டு விதிகள் (new SIM card rules) பொதுமக்களுக்கு மட்டுமின்றி, சிம் விற்பனையாளர்களுக்கு (SIM card seller) பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் புதிய சிம் வாங்க திட்டமிட்டிருந்தாலோ (buy a new SIM) அல்லது சிம் கார்டு விற்பனையாளராக இருந்தாலோ டிசம்பர் 1ம் தேதி முதல் நீங்களும் இந்தப் புதிய விதிகளை தான் பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி சிம்கள் (fake SIM) சம்பந்தப்பட்ட மோசடிகள் அதிகரித்துவிட்டது. இந்த மோசடிகளை எதிர்த்து, சிம் கார்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் புதிய விதிகளை தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunication) அறிமுகப்படுத்துகிறது. இந்த விதிமுறைகள், அதிகரித்து வரும் மோசடி வழக்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில் டிசம்பர் 1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறினால் என்னவாகும்?
போலி சிம்கள் மூலம் நடக்கும் மோசடிகளின் (scams) தீவிரத்தை கருத்தில் கொண்டு, இந்த விதிகளை அமல்படுத்துவதில் மத்திய அரசு (Central Government) கடுமையாக உள்ளது. விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் (Penalties) மற்றும் சிறைத்தண்டனை (imprisonment) உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சரி, இந்த புதிய விதிகளின் கீழ் என்ன முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.
1. SIM டீலர் வெரிஃபிகேஷன் (SIM Dealer Verification):
அனைத்து சிம் கார்டு டீலர்களும் கட்டாய சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும். சிம்களை விற்பனை செய்வதற்கான பதிவு இப்போது ஒரு முன்நிபந்தனையாக உள்ளது. போலீஸ் சரிபார்ப்புக்கு டெலிகாம் ஆபரேட்டர்கள் பொறுப்பு. இணங்கத் தவறினால் ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
2. மக்கள்தொகை தரவு சேகரிப்பு (Demographic Data Collection):
வாடிக்கையாளர்களின் தற்போதைய எண்களுக்கு சிம் கார்டுகளை வாங்கினால், ஆதார் ஸ்கேனிங் மற்றும் மக்கள்தொகை தரவு சேகரிப்பு ஆகியவை கட்டாயமாகிறது.
3. பல்க் சிம் கார்டு ஆர்டர் (Bulk SIM Card Issuance):
புதிய விதிகள் மொத்தமாக சிம் கார்டுகளை வழங்குவதைக் கட்டுப்படுத்துகிறது. வணிக இணைப்பு மூலம் மட்டுமே தனிநபர்கள் சிம் கார்டுகளை மொத்தமாகப் பெற முடியும். இருப்பினும், பயனர்கள் முன்பு போலவே ஒரு ஐடியில் 9 சிம் கார்டுகளைப் பெறலாம்.
4. SIM கார்டு டீ-ஆக்டிவேஷன் ரூல்ஸ் (SIM Card Deactivation Rule):
புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு, சிம் கார்டுகள் மொத்தமாக வழங்கப்படாது. சிம் கார்டை டீ-ஆக்டிவேட் செய்யப்பட்ட 90 நாட்களுக்குப் பிறகு தான், அந்த எண்ணை மற்றொரு நபருக்கு வழங்க முடியும்.
5. அபராதம் (Penalties):
புதிய விதிகளுக்கு இணங்க சிம் விற்பனையாளர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மீறினால் ரூ. 10 லட்சம் வரை அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.


Click it and Unblock the Notifications