மீண்டும் மீண்டுமா.. Google குரோமில் வந்தது புதிய பிரச்சனை.. மறக்காம இதை செஞ்சிடுங்க.. ஏன்?
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் (Smartphone), மொபைல் போன் (Mobile Phone), லேப்டாப் (Laptop) மற்றும் கம்ப்யூட்டர் (Computer) போன்ற சாதனங்களில் கூகுள் குரோம் வெப் பிரவுசரை (Google Chrome Web Browser) அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக அனைத்து முக்கிய தகவல்களையும் இந்த பிரவுசர் மூலம் எளிமையாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்நிலையில் கூகுள் குரோம் பிரவுசரில் ஒரு சிக்கல் வந்துள்ளது. அதாவது கூகுள் குரோம் பிரவுசரை (Google Chrome) பலர் பயன்படுத்தி வந்தாலும், அதனைப் பெரும்பாலானோர் சரியாக அப்டேட் செய்வதில்லை. குறிப்பாக இதனை யாரும் கவனிப்பதும் இல்லை. இதனால் தான் தற்போது பிரச்சனை ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கணினி எமர்ஜென்சி குழு (CERT-In) ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டது.

அதில் கூகுள் குரோமின் பழைய வெர்சனில் பயனர்களின் தகவல்கள் திருடுபோகும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது சில தொழில்நுட்ப ஓட்டைகள் உள்ளதால் அதனைப் பயன்படுத்தி இணையவழி சைபர் கிரைம் விஷமிகள் பயனர்களின் தகவல்களைத் திருட அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பிரச்சனை விண்டோஸ், லினக்ஸ், மேக் உள்ளிட பயன்பாட்டாளர்களுக்கு உள்ளதாம்.
எனேவ லினக்ஸ்-க்கான 131.0.6778.69க்கு முந்தைய குரோம் வெர்சன்கள், Windows மற்றும் Mac ஆகியவற்றில் 131.0.6778.69/.70 முந்தைய குரோம் வெர்சன்களை உபயோகிப்பவர்கள் அதனை அப்டேட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கூகுள் (Google) நிறுவனத்திற்கு இந்த கூகுள் குரோம் பிரவுசர் மூலம் ஏற்கனவே ஒரு பிரச்சனை வந்துள்ளது. அதாவது அதாவது கூகுள் நிறுவனம் சட்டவிரோதமாகத் தேடல் சந்தையை குரோம் பிரவுசர் மூலம் ஏகபோகமாக்கியது என கடந்த மாதம் அமெரிக்க நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். இதனால் கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த நீதிபதியின் மூலமாகவே கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை செய்ய சொல்ல வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் சட்ட சிக்கல்களை எல்லாம் கடந்து இந்த விவகாரத்தில் தீவரமான நடவடிக்கையை அரசு தரப்பு மேற்கொள்ள முயல்வதாகக் கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் சுந்தர் பிச்சை (Sundar Pichai) தலைமையிலான கூகுள் நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது கூகுள் குரோம் பிரச்சனை சுந்தர் பிச்சை-க்கு மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. குறிப்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து, கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவையின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தார் சுந்தர் பிச்சை.
தற்போது குரோம் பிரவுசரை வைத்திருப்பது கூகுளின் விளம்பர வணிகத்திற்கு முக்கியமானது. அதாவது இந்த பிரவுசர் தான் அந்த நிறுவனத்திற்கு அதிக லாபம் கொடுக்கிறது. எனவே தான் இந்த குரோம் பிரவுசரில் அவ்வப்போது புதிய அம்சங்களையும் கொண்டுவருகிறது கூகுள் நிறுவனம்.மேலும் கூகுள் குரோம் உலகின் மிகவும் பிரபலமான பிரவுசராக இருக்கும் காரணத்தால் அமெரிக்காவில் மட்டும் சுமார் 61% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications