இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு.! மத்திய அரசு அறிவிப்பு.!

|

அண்மையில் வெளிவந்த தகவலின்படி இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலத்தை ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் வரும் ஜனவரி 14-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது.

பதவிக்காலத்தை 2022 ஆம்

இந்த நிலையில் அவரின் பதவிக்காலத்தை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மத்திய அரசும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தில் முதல் பட்டதாரி

சிவன் அவருடைய குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆவார். சிவன் அவர்களின் இரண்டு சகோதரிகளும், சகோதரர் ஒருவரும் வறுமையின் காரணமாக உயர்கல்வியை கூட படிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பின்பு கல்லூரியில் படித்த போது அவரது தந்தைக்கு விவசாயம் செய்ய உதவியதாகவும், அதன் காரணமாகவே அவரது தந்தை அருகில் உள்ள கல்லூரியில் சேர்த்துவிட்டதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்.

ஸ்னாப்டிராகன் 875 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ்.!ஸ்னாப்டிராகன் 875 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ்.!

இளங்களை அறிவியல் கணிதவியல் படிப்பில்

சிவன் இளங்களை அறிவியல் கணிதவியல் படிப்பில் 100சதவிகிதம் மதிப்பெண் பெற்றதால் மனம் மாறிய அவரது தந்தை மேற்படிப்பு படிக்க அனுமதித்துள்ளார். 1982-ம் ஆண்டு இஸ்ரோவின் சிவனுக்கு வேலை கிடைத்தது, அதுமுதல் கிட்டத்தட்ட 37 ஆண்டுகாலம் இஸ்ரோவில் பணியாற்றிய சிவன் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, க்ரையோஜெனிக் எஞ்சின் உருவாக்கம், மீண்டும் பயன்படுத்தும் வகையிலான செயற்கைகோள் ஏவும் வாகனம் ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்.

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்

மேலும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக கடந்த ஜனவரி 2018-ம் நியமனம் செய்யப்பட்ட சிவன் இஸ்ரோவின் அனைத்துவிதமான ராக்கெட் ஏவும் நிகழ்ச்சிகளிலும் பங்குவகித்தவர் என்பதால் "ராக்கெட் மேன்" என்று அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளியில் படிக்கும்போது அணிந்துகொள்ள செருப்பு கூட இல்லை என்றும்,

நான் பள்ளியில் படிக்கும்போது அணிந்துகொள்ள செருப்பு கூட இல்லை என்றும், தான் முதலில் பேண்ட் அணிந்தது தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்த பின்புதான் என்று ஒருமுறை சிவன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் சாராபாய் விருது,

கே.சிவன் 1999-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விருது, 2017-ம் ஆண்டு இஸ்ரோ விருது, 2012-ம் ஆண்டில் டாக்டர் பிரயன் ராய் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Central government has Extended the Tenure of ISRO Chief Sivan!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X