BSNL க்கு கிடைத்த "பெத்த" அமௌன்ட்; 1.64 லட்சம் கோடிப்பு! என்ன சமாச்சாரம்?

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவங்களுக்கு போட்டியாக மலிவு விலையில் பல திட்டங்களை வைத்துள்ளது. ஆனால் இந்நிறுவனத்தின் பெரிய குறை என்னவென்றால் 4ஜி சேவை வழங்காதது தான். ஆனால் இனிமேல் அந்த குறை இருக்காது.

 பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இப்போது விடிவு காலம் வந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். தற்போது இந்நிறுவனத்திற்கு ஒரு "பெத்த" அமௌன்ட்அதாவது ஒரு பெரிய தொகை கிடைத்துள்ளது. இதன் மூலம் என்னென்ன நடக்கும் என்பதை நாம் இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

மெசஞ்சர் ஆப் யூஸ் பண்றிங்களா? எந்தச் சூழ்நிலையிலும் இதை செய்யாதிங்க- மார்க் ஜூக்கர்பெர்க் எச்சரிக்கை!மெசஞ்சர் ஆப் யூஸ் பண்றிங்களா? எந்தச் சூழ்நிலையிலும் இதை செய்யாதிங்க- மார்க் ஜூக்கர்பெர்க் எச்சரிக்கை!

ஊரகப் பகுதிகளுக்கு 4ஜி சேவை

ஊரகப் பகுதிகளுக்கு 4ஜி சேவை

பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்தவும் அதன் சேவைகளை விரிவுப்படுத்தவும், ஊரகப் பகுதிகளுக்கு 4ஜி சேவைகளை முழுமையாக கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்யவும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

குறிப்பாக நேற்று (புதின்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணா முதல் சிம்ரன் வரை- உங்க பெயரும் லிஸ்டில் இருக்கலாம்: வீக்கான பாஸ்வேர்ட்கள் பட்டியல் வெளியீடு!கிருஷ்ணா முதல் சிம்ரன் வரை- உங்க பெயரும் லிஸ்டில் இருக்கலாம்: வீக்கான பாஸ்வேர்ட்கள் பட்டியல் வெளியீடு!

ஆரோக்கியமான போட்டி

ஆரோக்கியமான போட்டி

எனவே இனிவரும் காலங்களில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுடன் போட்டியிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இனிவரும் ஆரோக்கியமான போட்டியால் பயனர்களுக்கு சிறப்பான சேவை கிடைக்கும் எனவும், தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படிகட்டணங்களை உயர்த்துவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாதம் வெறும் ரூ.125 விலையில் 12 'OTT சந்தா' வாங்கலாமா? ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?மாதம் வெறும் ரூ.125 விலையில் 12 'OTT சந்தா' வாங்கலாமா? ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

 1.64 லட்சம் கோடிப்பு

1.64 லட்சம் கோடிப்பு

இனி பிஎஸ்என்எல்-ஐ நிதி ரீதியாக லாபகரமாக மாற்ற, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ரூ.1.64 லட்சம் கோடி மதிப்பிலான மறுசீரமைப்புத் திட்டத்துக்கு இன்று ஒப்புதல் அளித்தது.

எனவே இந்த நிதி ஒதுக்கீடு மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய முதலீடுகளை மேற்கொண்டு ஃபைபர் ஆப்டிக் தொழில்நுட்பம் மூலம் 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளை நாட்டில் பல பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு கொண்டு சேர்க்க இயலும்.

காலாவதியாகும் ஐஎஸ்எஸ்- பசிபிக் கடலில் மூழகப் போகும் சர்வதேச விண்வெளி மையம்: 2030-ல் நாசாவின் திட்டம்!காலாவதியாகும் ஐஎஸ்எஸ்- பசிபிக் கடலில் மூழகப் போகும் சர்வதேச விண்வெளி மையம்: 2030-ல் நாசாவின் திட்டம்!

 குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள்

ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு போதிய நிதி கிடைக்கவில்லை எனவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தவில்லை என பல குற்றச்சாட்டுகள்
இருந்த நிலையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாற்றம் ஏற்பட்டு கூடுதல் வலு சேர்க்கப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

டெலிகிராம் புதிய அப்டேட்: அட்டகாசமான அம்சங்களுடன் வெளியான வெர்ஷன் 8.5! முழு விவரம்.!டெலிகிராம் புதிய அப்டேட்: அட்டகாசமான அம்சங்களுடன் வெளியான வெர்ஷன் 8.5! முழு விவரம்.!

பாரத் பிராட்பேண்ட் நிகாம்

பாரத் பிராட்பேண்ட் நிகாம்

தற்போது பிஎஸ்என்எல் சேவைகளை மேம்படுத்துவதற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, அதன் இருப்புநிலை குறைப்பு மற்றும் பாரத் பிராட்பேண்ட் நிகாம் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைப்பதன் மூலம் பைபர் நெட்வொர்க்கை அதிகரித்தல், புதிய மூலதனம் போன்ற மறுசீரமைப்புகள் மூலம் பிஎஸ்என்எல் சேவைகள் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

27,000,000 எம்ஏஎச் பவர் பேங்கை கையால் உருவாக்கிய இளைஞர்- ஒரே நேரத்தில் 5000 ஃபோன்களை சார்ஜ் செய்யலாம்!27,000,000 எம்ஏஎச் பவர் பேங்கை கையால் உருவாக்கிய இளைஞர்- ஒரே நேரத்தில் 5000 ஃபோன்களை சார்ஜ் செய்யலாம்!

24,680 கிராமங்கள்

24,680 கிராமங்கள்

தற்போது 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதை முழுமையாக வழங்குவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள சுமார் 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதுதவிர 2ஜி, 3ஜி மொபைல் சேவை வசதி மட்டும் உள்ள சுமார் 6,279 கிராமங்கள் 4ஜி மொபைல் சேவை பெரும் கிராமங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

டொயோட்டா உருவாக்கிய லூனார் லேண்ட் குரூஸர்.. இது வெறும் வாகனம் மட்டுமில்லை.. வேற பயனும் இருக்கு..டொயோட்டா உருவாக்கிய லூனார் லேண்ட் குரூஸர்.. இது வெறும் வாகனம் மட்டுமில்லை.. வேற பயனும் இருக்கு..

பிஎஸ்என்எல் மற்றும் தனியார் நிறுவனங்கள்

பிஎஸ்என்எல் மற்றும் தனியார் நிறுவனங்கள்

இனி வரும் காலங்களில் பிஎஸ்என்எல் மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிவேக தொலைத்தொடர்பு வசதிகளை அளிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. மேலும் இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

டாப் 10: 2022-ன் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதுதான்- கண்ணிமைக்கும் நேரம்தான் ஹைப்பர் சார்ஜ்!டாப் 10: 2022-ன் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதுதான்- கண்ணிமைக்கும் நேரம்தான் ஹைப்பர் சார்ஜ்!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்க தயாராகி வரும் நிலையில், மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளன. அதாவது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கூடிய விரைவில் 5ஜி சேவையை கொண்டுவர உள்ளன.

தற்போது இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் முதல் நாளில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Central government approves Rs 1.64 lakh crore revival package for BSNL: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X