சிப் அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை: பிரதமர் மோடி அறிவிப்பு.!

பாஸ்போர்ட் முறையுடன் விசா வழங்கும் நடைமுறையையும் எளிமைப்படுத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம், மின்னணுவிசா-வில் அதிக நன்மை உள்ளது.

|

இப்போது அனைத்து பயன்பாடுகளிலும் புதிய தொழிலநுட்பம் வந்து விட்டது என்று தான் கூறவேண்டும். அதன்படி சிப் அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட் வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தப்பேசிய பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார்.

சிப் அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை.!

உத்தரிபிரதேச மாநிலம்,வாரணாசியில் 15-வது வெளிநாடு வாழ் இந்தியர்களை தின மாநாடு 3நாட்கள் நடைபெறுகிறது, இந்த மாநாட்டின் பொருள்,புதிய இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியல்களின் பங்களிப்பு என்பதாகும்.

பிரமர் நரேந்திர மோடி

பிரமர் நரேந்திர மோடி

மேலும் இந்த மாநாட்டை பிரமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார், சிறப்பு விருந்திரனர்களாக மொரீயஸ் பிரதமர்
பிரவிந்த ஜக்நாத்,அவரது மனைவி, வெளியுறவு மந்திர் சுஷ்மா சுவராஜ், பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள் யோகி ஆதித்யநாத் (உத்திரபிரதேசம்), மானோகர் லால் (அரியானா), திரிவேந்திர சிங் ரவத் (உத்தரகாண்ட்) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள்

வெளிநாடு வாழ் இந்தியர்கள்

இந்த மாநாட்டில் திளான வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துபேசியது என்வென்று பார்ப்போம்.

சிப் அடிப்படையிலான மின்னணு  பாஸ்போர்ட்

சிப் அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட்

பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்தது என்னவென்றால், இப்போது சிப் அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறறோம், இது அனைத்து இந்திய தூதரகங்களும், தூணை தூதரகங்களும் விரைவில் பாஸ்போர்ட் திட்டத்துடன் இணைக்கப்படும்.

ஒட்டுமொத்த நடைமுறை எளிதாகும்

ஒட்டுமொத்த நடைமுறை எளிதாகும்

மேலும் இது அனைவருக்கும் மையப்படுத்தப்பட்ட பாஸ்போர்ட் முறையை உறுதிப்படுத்தும், விசா, பியோ (இந்திய வம்சாவளி அடையாள அட்டை), ஓ.சி.ஐ (வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமை அட்டை) ஆகியவற்றை வெளிநாடு வாழ் இந்தியர்களின் சமூக பாதுகாப்பு முறையுடன் இணைப்போம், இதன் மூலம் ஒட்டுமொத்த நடைமுறை எளிதாகும்.

விசா

விசா

பாஸ்போர்ட் முறையுடன் விசா வழங்கும் நடைமுறையையும் எளிமைப்படுத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம், மின்னணு விசா-வில் அதிக நன்மை உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒவ்வொருவரும், அங்கு வாழ்கிற குடும்பங்கள் இந்தியா வந்து செல்வதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும. இது இந்தியாவில் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு உதவும்.

ராணுவ தளவாட உற்பத்தி துறை

ராணுவ தளவாட உற்பத்தி துறை

ராணுவ தளவாட உற்பத்தி துறை, இந்திய முதலீட்டாளர்களுக்கும், வெளிநாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்களுக்கும் மிகப்பெரிய
வாய்ப்பாக அமையும். மாறிவரும் இந்த இந்தியாவில், ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்கம் ஆகியவற்றில் நீங்கள் முக்கிய பங்காற்ற
முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி குடியரசு தின விழா

டெல்லி குடியரசு தின விழா

வெளிநாடு வாழ் இந்தியர்கள், பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளாவிலும், டெல்லியில் குடியரசு தின விழாவிலும் கலந்து கொள்ள வசதியாக, முதல் முறையாக இந்த மாநாடு தொடர்ந்து 3 நாள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Central-government-action-to-provide-electronic-passport: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X