மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் முறையாக வீட்டில் இருப்பவர்களின் மொபைல்போன் விபரங்கள் சேகரிப்பு.!

|

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு முக்கிய சாதனமாக மொபைல்போன் உள்ளது, இந்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் முறையாக வீட்டில் இருப்பவர்களின் மொபைல் போன், வங்கி கணக்கு விபரங்கள் கேட்டகப்பட
உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீட்டில் இருப்பவர்களின்மொபைல்போன் விபரங்கள்

2021-ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இதில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது முதல் முறையாக வீட்டில் எத்தனை
பேர் ஸ்மார்ட்போன் வைத்துள்ளார்கள், டிடிஎச் அல்லது கேபிள் இணைப்பு, இன்டர்நெட் வசதி, வீட்டில் இருப்பவர்களின் வங்கி கணக்கு எண்கள், சொந்த வீடு, மொபைல் எண் உட்பட விபரங்கள் கேட்கப்பட உள்ளது.

அதே சமயம் ஜாதஜ பற்றிய விபரங்கள் கேட்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட சமூக பொருளாதார அடிப்படையிலான ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீட்டில் இருப்பவர்களின்மொபைல்போன் விபரங்கள்

2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒரே ஜாதியில் ஒரே பெயர் கொண்ட பலர் உள்ளதால் அவரை பற்றிய விபரங்கள் எழுத்து பிழைகளை சரி செய்ய சமூக நீதி அமைச்சகம் தற்போது வரை கடுமையாக போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீட்டில் இருப்பவர்களின்மொபைல்போன் விபரங்கள்

எனவே 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்தப்பட உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில் 34அளவுகளின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த மக்கள்தொகையில் மூன்றாம் பாலினத்தவர்களின் விபரமும் சேர்க்கப்பட உள்ளது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்காக கிட்டதட்ட 31 லட்சம் ஊழியர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.

Best Mobiles in India

English summary
Census 2021 added smartphone user details and bank details to the new list : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X