செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்துப் பேசிய இளைஞர்: நேர்ந்த விபரீதம்-இது நமக்கொரு பாடம்.!
சாலைப் பயணத்தின் போது செல்போன்களை பேசிக் கொண்டே சிலர் மிகப் பெரிய விபத்தை ஏற்படுத்திவிடுகின்றனர், குறிப்பாக செல்போன்களை பேசிக்கொண்டே சாலைப் பயணத்தில் மற்றவர்களுக்கும் பல இடையூறுகளைச் செய்கின்றனர் என்று தான் கூறவேண்டும்.

இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்
இந்நிலையில் இருசக்கர வாகனத்தின் சென்றபோது ஹெல்மெட்டுக்குள் இருந்த செல்போன் வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். தற்சமயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குத் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

புளியரிசி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்
கிருஷ்ணகிரி மாவட்டம் புளியரிசி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், சொந்த வேலை காரணமாக ஓசூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

செல்போன் அழைப்பு வந்துள்ளது
ஓசூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது அந்த இளைஞருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது, பைக்கை நிறுத்திவிட்டு தன்னுடைய செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்துப் பேசிக் கொண்டே சென்றார். எதிர்பாராத விதமாக அந்த
செல்போன் பெருத்த சத்தத்துடன் வெடித்தது.

கீழே விழுந்தவருக்கு உதவி செய்தனர்
செல்போன் வெடித்ததில் அவருடைய கை, முகம், தலை, காது, மூக்கு ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது, இதனால் நிலை தடுமாறி அந்த இளைஞர் கீழே விழுந்தார். இதைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள், வண்டியை நிறுத்திவிட்டு கீழே விழுந்தவருக்கு உதவி செய்தனர்.

காவல்துறைக்குத் தகவல்
அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினரும் உதவி செய்தனர், பின்பு இந்த சம்பவம் குறித்து மக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர், உடனே விபத்து நடத்தப் பகுதிக்கு சூளகிரி போலீசார் வருகை தந்தனர். விபத்தால் பாதிக்கப்பட்ட ஆறுமுகம் என்ற இளைஞரை மீட்ட காவலர்கள் உடனே மருத்துவமணையில் அனுமதித்தனர்.

விவோ போனை ஹெல்மெட்டிற்குள் வைத்து பேசியது தெரியவந்தது
மருத்தவமணையில் ஆறுமுகத்திற்குப் படுகாயம் ஏற்பட்ட பகுதிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் மேற்கொண்ட முதல் விசாரணையில் ஆறுமுகம் விவோ போனை ஹெல்மெட்டிற்குள் வைத்து பேசியது தெரியவந்தது.

எதற்காக வெடித்தது?
விவோபோன் எதற்காக வெடித்தது என்பது தொடர்பான தகவல் இன்னும் வெளிவரவில்லை, எனினும் போனின் உடைந்த
பாகங்கள் தொழில்நுட்ப பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பத குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications