Home
News

செல்போன்,லேப்டாப்பில் அழித்த பாலியல் வீடியோ மீட்பு களத்தில் சிபிஐ-முக்கிய புள்ளிகள் சிக்குகிறார்கள்!

மேலும், செல்போன், லேப்டாப்பில் அழித்த வீடியோக்களை மீட்பு எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து அரசியல் வாதிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினரும் ஈடுபட்டதால், போலீசா

பொள்ளாச்சியல் பேஸ்புக் மூலம் பழகி இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் என சுமார் 400 பேரை மிரட்டி பாலியல் வல்லுறவு கொண்டு, அதை வீடியோவாக எடுத்து வைத்து, பணம், நகைகளை பறித்த வழக்கில், இதுவரை சுமார் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பாலியல் கும்பலால் 1500க்கும் மேற்பட்ட வல்லுறவு வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சம்பவம் சுமார் 7 ஆண்டாக நடந்து வந்துள்ளது. பாலியல் வழக்கில் பணம் பறித்த கும்பல் பயன்படுத்திய செல்போன், லேப்டாப்களிலும் ஏராளமான வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

செல்போன், லேப்டாப்பில் அழித்த பாலியல் வீடியோ மீட்பு: களத்தில் சிபிஐ.!

மேலும், செல்போன், லேப்டாப்பில் அழித்த வீடியோக்களை மீட்பு எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து அரசியல் வாதிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினரும் ஈடுபட்டதால், போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாறியது.

திருநாவுக்கரசு நண்பர்கள் சதீஸ், வசந்தகுமார், சபரிராஜன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டமும் பாயந்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளதால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் முக்கிய புள்ளிகளும் சிக்குகிறார்கள்?

பேஸ்புக் காதல் வலை:

பேஸ்புக் காதல் வலை:

பேஸ்புக்கில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், திருமணமான பெண்கள் என பேஸ்புக் மூலம் இவர்கள் காதல் வலை வீசியுள்ளனர். மேலும், அவர்களுடன் பாலியல் ரீதியாகவும் சேட்டிங் செய்துள்ளனர். பெண்கள் தங்களை நம்பும் வகையிலும், இனிக்க இனிக்க பேசி வசியமும் செய்துள்ளனர்.

 பைனான்ஸ் பெண்களுக்கு வலை:

பைனான்ஸ் பெண்களுக்கு வலை:

இந்த கும்பல் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பைனான்ஸ் செய்தும் வந்துள்ளனர். மேலும், பணம் கொடுத்து விட்டு வட்டி வசூலிக்கும் போதும், அவர்களில் வீட்டில் இருக்கும் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டவர்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்துள்ளனர். மேலும் அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் போது, வீடியோ எடுத்தும் அவர்களை மிரட்டி பல முறை உல்லாசம் அனுபவித்துள்ளனர். மேலும், தேவைப்படும் போதும் பணம் வசூலித்துள்ளனர்.

சென்னை பெண் டாக்டருக்கு மிரட்டல்:

சென்னை பெண் டாக்டருக்கு மிரட்டல்:

பேஸ்புக்கில் பேக் அக்கவுண் ஓப் செய்து, திருநாவுக்கரசு சேட் செய்து, பாலியல் லீலைகள் குறித்தும் சென்னை பெண் டாக்டருக்கும் சேட்டு செய்துள்ளனர். அப்போது, ஒரு பெண்ணை போலவே பேசி வந்துள்ளார். இதை உண்மையென நம்பி அந்த டாக்டரும் அனைத்து அந்தரங்களையும் கொட்டியுள்ளார். பிறகு, அவரை மிரட்டி பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள சின்னப்பம்பாளையம் வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் உறவு கொண்டுள்ளனர். அதையும் இந்த 4 பேர் கும்பல் வீடியோ எடுத்துள்ளனர்.

ஜோதிநகரை சேர்ந்த கல்லூரி மாணவி:

ஜோதிநகரை சேர்ந்த கல்லூரி மாணவி:

பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி காரில் கடத்தி செல்லும் போது, பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கியிருக்கின்றனர். அப்போது, காரில் இருந்த திருநாவுகரசு மற்றும் அவரசு கூட்டாளிகள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

அப்போது, அந்த மாணவி சத்தமிட்டுள்ளார். கழுத்திலிருந்த தங்கச்சங்கலியை மட்டும் கழற்றிவிட்டு, காரில் இழுந்து நடுரேத்தில் விட்டு தப்பிவிட்டனர். அங்கு பொது மக்களும் கூட்டம் கூடியதால், பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மாணவியில் சகோதாரர்கள் அவர்களை விரட்டி பிடித்த போது, பல்வேறு ஆதாரங்கள் வெளியே வந்தன. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 1500 பாலியல் வீடியோக்கள்:

1500 பாலியல் வீடியோக்கள்:

இதுவரை இந்த கும்பல் 1500 பாலியல் வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளனர். இதை வைத்தும் பல்வேறு முறை அந்த பெண்களுடன் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர். இதையும் மீண்டும் செல்போன்களில் காட்சிகளை பதிவு செய்துள்ளனர். மேலும், சுமார் 400 பெண்களுடன் அவர்கள் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர்.

செல்போன், லேப்டாப்களில் பாலியல் காட்சி:

செல்போன், லேப்டாப்களில் பாலியல் காட்சி:

இவர்கள் பதிவு செய்ததை காட்சிகளை லேப்டாப், செல்போன் பதிவும் செய்து கொண்டுள்ளனர். இந்த காட்சிகளை இவர்கள் ஒருவருக்கொருவர் சேர் செய்து கொண்டுள்ளனர். அதில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பாலியல் வல்லுறவு காட்சிகளும் இருந்துள்ளது.

ஏராளமான காட்சிகள் அழிப்பு

ஏராளமான காட்சிகள் அழிப்பு

: கடந்த ஆண்டாக பல்வேறு பெண்களுடன் அவர்கள் மிரட்டி பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர். 1500க்கும் மேற்பட்ட வீடியோகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் ஏராளமான வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் வலுக்கின்றனது. அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் சுமார் 400 பெண்களுக்கு மேல் இருக்கலாம். சுமார் 2 ஆயிரம் வீடியோக்களும் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

சிபிசிஐடியிருந்து சிபிஐக்கு மாற்றம்:

சிபிசிஐடியிருந்து சிபிஐக்கு மாற்றம்:

கடந்த சில தினங்களாக பார் நாகராஜ் நிர்வாணமாக பெண்களுடன் இருக்கும் காட்சி தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்களில் வலம் வந்தன. பார் நாகராஜ் இருக்கும் பல்வேறு காட்சிகளும் இருக்கின்றது. இதை பார் நாகராஜ் மறுத்து வருகின்றார். இந்நிலையில், பல வீடியோக்கள் பார் நாகராஜ் இருப்பது அழிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஐபிக்களின் மகன்களுக்கும் பங்கு இருப்பதாக கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராட்டம் பூதாகரமாக கிளம்பியதால், தற்போது தமிழக அரசு உடனடியாக சிபிஐக்கு வழக்கை மாற்றியுள்ளனர்.

செல்போன், லேப்டாப் ஆய்வு:

செல்போன், லேப்டாப் ஆய்வு:

திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட உயர்மதிப்புள்ள செல்போன்கள், லேப்டாப்களை போலீசார் ஆய்வு சோதனை செய்த போது, அதில் சுமார் 10 வீடியோக்களை வரையே கிடைத்துள்ளது.
மேலும், ஏராளமான பெண்களை மிரட்டி பாலியல் வல்லுறவு கொண்டு அதை வீடியோ எடுத்துள்ளனர். பிறகு பணம் வசூலித்த பிறகு அதை அழித்துள்ளனர். ஏராளமான வீடியோக்கள் இருப்பதால் மீட்டு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் அதிகாரிகள்.

சிபிஐ வசம் வழக்கு:

சிபிஐ வசம் வழக்கு:

தற்போது வழக்கு சிபிஐ வசம் வழக்கு சென்றியிருப்பதால், முக்கிய புள்ளிகள் குறித்தும் இந்த வழக்கு விசாரணையில் வெளியே வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வழக்கின் உண்மை முகம் கிழித்து தொங்கவிடப்படும் என்றும் கூறப்படுகின்றது. இதில் யார் யாருக்கு தொடர்பிருக்கின்றது. மேலும், அழிக்கப்பட்டுள்ள வீடியோக்களை மீட்க செல்போன், லேப்டாப்களை ஆய்வு செய்து, ரெக்கவர் பைல் எடுக்கப்படுகின்றது. இதனால் பல்வேறு உண்மைகள் வெளியாகும் என்று ஏராளமானோர் இருக்கின்றனர்.

அதிர வைக்கும் வீடியோ வெளியாகும்:

அதிர வைக்கும் வீடியோ வெளியாகும்:

வீடியோக்களை மீட்கப்படும் பட்சத்தில் இதில், முக்கிய புள்ளிகள் குறித்தும் வெளிவரும் என்று கூறப்படுகின்றது. இதில் முக்கிய புள்ளிகளின் வீடியோவும் இருக்க கூடும் என்று ஒருசிலர் சமூக வலைதளங்களிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Cellphone Sexual Video Recovery which erased the laptop: CPI on the field : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X