செல்கான் கேம்பஸ் க்யூ405 ரூ.3,199க்கு வெளியிடப்பட்டுள்ளது

Written By:

செல்கான் நிறுவனம் கேம்பஸ் வகையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. கேம்பஸ் வகை ஸ்மார்ட்போன்களில் புதிய மாடலான இந்த கருவி ஸ்னாப்டீல் தளத்தில் இன்று முதல் விற்பனைக்கு வர இருக்கின்றது. கருப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த கருவி இந்தியாவில் ரூ.3,199க்கு கிடைக்கின்றது.

செல்கான் கேம்பஸ் க்யூ405 ரூ.3,199க்கு வெளியிடப்பட்டுள்ளது

4 இன்ச் WVGA டிஸ்ப்ளே 800x480 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் SC7731 பிராசஸர் 512 எம்பி ரேம் 4ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றதோடு ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது.

கேமராவை பொருத்த வரை 3.2 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 1.3 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதோடு 3ஜி, வை-பை 802.11 b/g/n, ஜிபிஎஸ், மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன.

 

English summary
Celkon has just launched its latest smartphone, the Campus Q405. This will be the latest in its Campus series of smartphones.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot