தொடரும் ஆணவக்கொலைகள்: சிசிடிவி கேமரா உதவியுடன் கொலைகாரன் கைது.! பதறவைக்கும் காட்சிகள்.!

  நாட்டில் நடக்கும் பல குற்றச் செயல்களுக்கு சாட்சியாய் இருப்பது சிசிடிவி கேமராகள் தான். காவல் துறை உங்களுக்கு நண்பன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு வாக்கியம். தொழிநுட்ப காலத்தில் காவல் துறையின் நண்பன் யார் என்ற கேள்விக்கு பதில் சிசிடிவி கேமராகள் என்பதே இன்றைய நிலை.

  சிசிடிவி கேமராகள் மட்டும் இல்லை என்றால் இன்னும் பல வழக்குகள் இழுவியில் தான் இருந்திருக்கும். சிசிடிவி யின் உதவியுடன் மட்டுமே பல வழக்குகளுக்கு எளிதில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  இளம் காதல் தம்பதி

  தெலுங்கானா நெல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் காதல் தம்பதியினர் ப்ரனய் மற்றும் அம்ருதா. இவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில் இருந்து பல ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கின்றனர். இவர்கள் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஜனவரியில் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஆத்திரம் அடைந்த அம்ருதா குடும்பம்

  அண்மையில் அம்ருதா கர்ப்பமானார், ப்ரனய் குடும்பத்தினர் இந்தச் செய்தி கேட்டுக் காதல் தம்பதியினரை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அம்ருதாவின் குடும்பத்தினர் இந்தச் செய்தியை கேட்டு ஆத்திரம் அடைந்து இரு காதல் தம்பதியினரையும் மிரட்டி அனுப்பிவிட்டனர்.

  செப்டம்பர் 14

  கர்ப்பமான அம்ருதா செப்டம்பர் 14 ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்குச் சென்ற பொது அவர் கண்முன்னே ப்ரனய் மர்ம நபரால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தெலுங்கானாவையே உலுக்கியது, இன்னும் இந்தியாவில் ஆணவக்கொலைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

  கைது

  கொலை செய்யப்பட்ட ப்ரனய் இன் மனைவி அம்ருதா இந்தக் கொலைக்கு முழு காரணம் தனது தந்தை மாருதி ராவ் மற்றும் மாமா தான் என்று காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அம்ருதா கொடுத்த வழக்கின் கீழ், அம்ருதாவின் தந்தை, மாமா மற்றும் மற்றொரு நபர் உட்பட 3 பேரைக் கைது செய்துள்ளது. இவர்கள் மீது கொலை முயற்சி, கொலை, கொலைக்கு உடந்தையாக , ஆணவக்கொலை எனப் பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

  அபிராமி முதல் தஷ்வந்த் வரை கொலை குற்றவாளியாக அம்பலமானது இப்படி தான்.!

  இன்று திரும்பும் இடங்கள் எல்லாம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தான் நடக்கின்றன. கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் ஈடுபடுகின்றனர் என்றால் தான் அதிர்ச்சியூட்டும் விசியமாக இருக்கின்றது.

  தெருக்களிலோ, இல்லை வீட்டிலோ நடக்கும் கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களும் கண்டுபிடிக்க உதவிய தொழில் நுட்பம் சிசிடிவி கேமரா தான். சிசிடிவிகள் இல்லை என்றால் இன்று குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுவார்கள். கொலையில் முடியும் குற்றங்கள் பெரும்பாலும் கள்ளக்காதல், வழிப்பறிகளும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த குற்றங்களுக்கு பாலின பாகுபாடு கிடையாது என்பது தான் இன்றைய நிலமை. மின்சார போக்குவரத்திற்கான சாலை வரைபடம் & திட்ட விபரங்களை அறிவிக்கும் பிரதமர் மோடி.! டிசைன் இதுதான்.!

  குற்றங்கள் நடப்பதற்கு காரணம்:

  இன்று பெரும்பாலும் கூட்டுக் குடும்ப முறை குறைந்து, தனி குடும்ப முறை அதிகரித்தன் விளைவு தான். முன்பு எல்லாம் பெரியோர்களின் சொல்கேட்டு நடப்பார்கள். இன்று அப்படி இல்லை. தற்போது, பணம் என்னும் மாய வளையில் சிக்கியிருப்பதாலும், சமூக கவர்ச்சிகளும் தான் குற்றங்களுக்கு அடிப்படையாக நிற்கின்றன. இதில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ளது.

  பறிபோகும் உயிர்கள்:

  ஒருதலை காதல், காதல், கள்ளக்காதல், வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களால் சாதாரணமாக அரங்கேறுகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் ஏதாவது இடையூறு ஏற்பட்டால், சமந்தப்பட்ட நபர்களை கொலை செய்து விடுகின்றனர். இந்த குற்றங்களை கண்டுபிடிக்க உதவிய சிசிடிவி கேமராவில் பதிவான குற்றவாளிகளின் சம்பவங்கள் குறித்தும் காணலாம்.

  ஸ்வாதி கொலை:

  சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி வெட்டி மென்பொறியாளர் ஸ்வாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த பி.இ. பட்டதாரி ராம்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஸ்வாதியை கொலை செய்து விட்டு ரயில் நிலையம் அருகே தப்பியோடியதும். முன்னதாக ஸ்வாதியை கொலை செய்யும் முன் பின்தொடர்ந்ததும் சிசிடிவி கேமரா காட்சிளை வைத்தே இந்த வழக்கு நடந்து வநதது.

  சிறுமி கொலை:

  சென்னை மவுலி வாக்கம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த பாபு என்பவரின் மகள் ஹாசினி. வீட்டிற்கு வெளியே விளையாடிய போது மாயமானார். அப்போது, அதே குடியிருப்பில் வசித்த மென்பொறியாளர் தஷ்வந்த் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, கொலை செய்துள்ளார். பிறகு, கை பையில் போட்டு வெளியே எடுத்து சென்ற போது, அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதை வைத்து போலீசார் அவரை உறுதி செய்தனர்.

  வக்கீல் முருகன் கொலை:

  சென்னை சூளைமேடு ஆத்ரேயபுரத்தை சேர்ந்தவர் வக்கீல் முருகன் (44). கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

  அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை கள்ளக்காதலால் நடந்தது என்று தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் மனைவி லோககேஷினி (35), கள்ள காதலன் வியாசர்பாடியை சண்முகநாதன் உட்பட 6 பேர் குற்றவாளிகள் கைது ஆகினர்.

  சசிக்குமார் கொலை:

  கோவையில், கடந்த 2016ம் ஆண்டு இந்து முன்னணியை சேர்ந்த சசிக்குமார். கவுண்டம்பாளையம் பகுதியில் வெட்டி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். கவுண்டர்மில்ஸ் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

  சசிக்குமார் கொலை:

  சென்னை குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). மனைவி அபிராமி (25). குழந்தைகள் அஜய் (7), கார்னிகா (4). பிரியாணி கடை ஊழியர் சுந்தரம். இவர்களுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

  கள்ளகாதலுக்கு இடையூராக இருந்த கணவன், மகன், மகள் ஆகியோரை கொல்ல பாலில் தூக்க மாத்திரை கலந்து ஆகஸ்ட் 30ம் தேதி இரவு கொடுத்தார். இதில் மகள் இறந்து போனார். விஜய் கண்விழித்து அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். தலையணியில் அமுக்கி மகனையும் கொலை செய்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது தான் விஜய்க்கு தெரிந்து. கள்ளக்காதலுக்காக மனைவி கொலை செய்து விட்டு தப்பியது.

  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு ஸ்கூட்டியில் தப்பி சென்றதும். அங்கு முகத்தில் கட்டியிருந்த துப்பாட்டாவை விலக்கியதும். பிறகு நாகர்கோயில் பஸ்சில் ஏறியதும். உடனடியாக அங்கு சென்ற போலீசார் அபிராமியை மடக்கி பிடித்தனர்.

  திமுக நிர்வாகி: மொபைல் குத்துச் சண்டை வீரர்.! வைரல் வீடியோ.!

  என்னதான் ஆச்சு நம் நாட்டிற்கு, மாதம் மாதம் மல்யுத்த வீரர்களும், குத்துச் சண்டை வீரர்களும் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றனர். அதுவும் திமுக வில் மட்டும் அதிக குத்து சண்டை வீரர்கள் உருவாகிவருவது இந்த ஆண்டின் சிறப்பு போல? பாவம் தலைவர்.

  இவர்களை எல்லாம் அடையாளம் காட்டுவதற்காவே சமூக வலைத்தளங்களும் சிசிடிவி கேமராக்களும் 24 மணிநேரமும் அயராது உழைத்து வருகிறது.

  யுவராஜ் பிரியாணி குத்துச் சண்டை வீரர்

  அண்மையில் யுவராஜ் குத்துச் சண்டை வீரர் பிரியாணிக்காக பிரபலம் அடைந்து வலைத்தளம் முழுக்க அவர் புகழ் பறந்தது யாரும் மறந்திருக்க மாட்டோம். இன்னமும் கூட அவரின் வீர சாகச குத்துச் சண்டை மூவ்-கள் வலைத்தளங்களில் வைரல் ஆகா பரவிக்கொண்டுதான் இருக்கிறது.

  மொபைல் குத்துச்சண்டை வீரர்

  இந்த நிலையில் அடுத்த குத்துச்சண்டை வீரர் தனது சாகச மூவ்-களை ஒரு மொபைல் கடை உரிமையாளிரிடம் காட்டி அவரின் அன்பையும், பரிசையும் மூஞ்சியில் வாங்கியுள்ளார். இந்தக் குத்து சண்டை வீரரின் சிஷ்யன் மட்டும் என்ன சளைத்தவரா, ஆட்டத்தைத் துவக்கி வைத்தவரே அவர் தான். குரு 8 ஆடி கொடுத்தால் சிஷ்யன் 16 அடி கொடுப்பான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

  திருவண்ணாமலை கணேஷ் & ரகுபதி

  திருவண்ணாமலையில் குத்து சண்டை வீரர் ரகுபதி (29) மற்றும் குட்டி குத்துச் சண்டை வீரர் கணேஷ் (26) என்பவருடன் தானிப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள மணிவண்ணன் என்பவரின் செல்போன் கடைக்கு சென்றுள்ளார். பழுதான செல்போனை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று ரகுபதி கேட்டுக்கொண்டிருக்கும் போதே குட்டி குத்துச் சண்டை வீரர்க்கு வீரம் பீறிக்கொண்டு வர குரு டென்ஷன் ஆகிக் கடை உரிமையாளரிடம் தன் சாகசத்தைக் காட்ட துவங்கிவிட்டார்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  cctv footage of pranay murder in miryalaguda : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more