மைக்ரோசாப்ட் டிஜிட்டல் வினாத்தாள்: 4000 சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மீது சோதனை முயற்சி.!

சமீபத்தில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(சி.பி.எஸ்.இ.) நடத்திய பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளின் வினாத்தாள்கள், தேர்வு நடைபெறுவதற்கு முன்னரே வெளியில் கசிந்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது

By Sharath
|

சமீபத்தில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(சி.பி.எஸ்.இ.) நடத்திய பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளின் வினாத்தாள்கள், தேர்வு நடைபெறுவதற்கு முன்னரே வெளியில் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடைபெற்று மூன்று மாதங்கள் மேல் ஆகிவிட்ட நிலையில், புதிய தொழிநுட்பத்துடன் கூடிய வெளியில் கசியாத டிஜிட்டல் கேள்வித் தாள்களை சி.பி.எஸ்.இ உருவாக்கத் திட்டமிட்டது.

டிஜிட்டல் வினாத்தாள்: 4000 சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மீது சோதனை முயற்சி.!

இதன்படி நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(சி.பி.எஸ்.இ), இந்திய மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான வினாத்தாள்களை டிஜிட்டல் என்க்ரிப்ட் முறைப்படி உருவாக்கியுள்ளது. வினாத்தாள் பாதுகாப்பு மற்றும் தடையற்ற விநியோகத்தைச் சரியாக வழிநடத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

4,000 மாணவர்கள் மற்றும் 487 தேர்ச்சி மையங்கள்

4,000 மாணவர்கள் மற்றும் 487 தேர்ச்சி மையங்கள்

அன்மையில் நடத்தப்பட்ட 10 ஆம் வகுப்பு கம்பார்ட்மெண்டல் தேர்வில், இந்த புதிய முயற்சி சோதித்து பார்க்கப்பட்டது. சுமார் 487 தேர்ச்சி மையங்களில் 4,000 மாணவர்களுடன் இந்தத் தீர்வு வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது என சி.பி.எஸ்.இ தெரிவித்திருக்குகிறது.

விண்டோஸ் 10 மற்றும் ஆஃபீஸ் 365 செயலி

விண்டோஸ் 10 மற்றும் ஆஃபீஸ் 365 செயலி

தேர்வுக்கான கட்டுப்பாட்டாளர் இந்த முழு செயல்பாட்டையும் கண்காணிக்க பிரேத்தியேகமாக செயல்படும் செயலி, விண்டோஸ் 10 மற்றும் ஆஃபீஸ் 365 மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த செயலாக்கமும் உட்சநிலை என்க்ரிப்ட் பாதுகாப்புடன் கூடிய இரண்டு அடுக்கு அங்கீகார கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. தேர்வு ஆரம்பமாகும் 30 நிமிடங்களுக்கு முன்னரே வினாத்தாள்களை டவுன்லோட் செய்ய அனுமதிக்கிறது.

பிரத்தியேக அடையாள குறியீடு

பிரத்தியேக அடையாள குறியீடு

இதை விடச் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு வினாத்தாளிற்கும் பிரத்தியேக அடையாள குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் தனித் தனி அடையாள குறியீடுகள் வழங்கப்படுகிறது.

நடவடிக்கை எடுக்கபடும்

நடவடிக்கை எடுக்கபடும்

இதன் மூலம் இனி வினாத்தாள்கள் ஒருவேளைத் தேர்வுக்கு முன்னேற வெளியிடப்பட்டால், அந்த அடையாள குறியீட்டை கொண்டு எந்தத் தேர்வு மையத்திலிருந்து வெளியிடப்பட்டது என்று எளிதில் அறிந்து நடவடிக்கை எடுக்க வசதியாய் இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
CBSE teams up with Microsoft to digitally encrypt question papers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X