Home
News

CBSE அதிரடி முடிவு.. 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு AI சப்ஜெக்ட்.. பறந்த Circular!

செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விவசாயம் (Agriculture), மருத்துவம (Medical ), கல்வி (Education), தொழில்நுட்பம் (Technology), விளையாட்டு (Sports) உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் தலையீடு இருக்கிறது. அந்த வகையில், பள்ளி மாணவர்களிடையே செயற்கை நுண்ணறிவின் தாக்கம் விரைவில் சென்றடைய இருக்கிறது.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் வருகை பல்வேறு துறைகளில் மிகப் பெரும் மாற்றங்களுக்கு தொடக்கமாக அமைந்துள்ளது. இந்த ஏஐ (AI) தொழில்நுட்பம் அடுத்த சில ஆண்டுகளில் ஒவ்வொருவரது வீட்டிலும் ஏஐ அசிஸ்டென்டாக (AI Assistant) இருந்தால் கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

CBSE அதிரடி முடிவு.. 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு AI சப்ஜெக்ட்!

ஒருகாலத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமிங் (Computer Programming) எழுவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. சாப்ட்வேர் இன்ஜினியரிங் (Software Engineering) துறையில் படித்து முடித்து பணியில் சேருவோருக்கு மற்ற எல்லாத்துறைகளிலும் கிடைப்பதைவிட அதிகமான சம்பளம் கொடுக்கப்பட்டது. ஏனென்றால், கம்ப்யூட்டர் புரோகிராம் கோடிங் எழுதுவது அவ்வளவு சிக்கலாக இருக்கும்.

இந்த கோடிங்கை இப்போது ஏஐ சாட்போட்கள் (AI Chatbots) மிக எளிதாக சில நிமிடங்களில் எழுதி விடுகிறது. அதுவும் ஒரு பைசா செலவில்லாமல் யாருக்கு வேண்டுமென்றாலும் எழுதி கொடுக்கிறது. அண்மையில், வெளியான சாட்ஜிபிடி சாட்போடில் (ChatGpt Chatbot) பலர் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை எளிதாக பெற்றுக் கொள்கின்றனர். அப்படி, சிறந்த பல்கலைகழகங்களில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு சாட்போட்களையே பயன்படுத்துகின்றனர்.

இப்படி வெகு சில மாதங்களில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence). இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உருமாறிவரும் செயற்கை நுண்ணறிவை பள்ளி பாடங்களில் சேர்க்க சிபிஎஸ்இ (CBSE) திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

அதில் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்த பாடத்திட்டங்கள் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே முதலில் அறிமுகப்படுத்தப்படும். ஆனால், இந்த சுற்றறிக்கை 6 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

வரும் கல்வியாண்டு முதலே சிபிஎஸ்இயில் படிக்கும் 6 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல தொழில்நுட்ப பாடங்களை கற்றுக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. அந்த வகையில், கோடிங் (Coding), டேட்டா சயின்ஸ் (Data Science), அக்மெண்டெட் ரியாலிட்டி (Augmented Reality) உள்ளிட்ட 31 புதிய பாடங்களை சேர்க்க உள்ளதாக அந்த சுற்றறிக்கையில் சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-இன் படி இந்த புதிய பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படுவதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
CBSE has sent a circular to school heads on Class 6 students to learn coding and AI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X