Home
News

வைகிங் ஏரோவ் டிசைனில் iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max.. உலகத்தில 99 பேருக்கு மட்டுமே விற்பனை..

கேவியர் (Caviar) என்ற துபாயின் ஒரு ஆடம்பர பிராண்டானது, அரிய பொருட்கள் மற்றும் தனித்துவமான வடிவங்களைப் பயன்படுத்தி கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் வடிவமைப்புகளை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறது. இது இப்போது புது வகை ஐபோனை உருவாக்கியுள்ளது.

இந்த பிராண்ட் சமீபத்தில் ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) சாதனங்களை வைகிங் கலாச்சாரத்தின் பாரம்பரிய ஏர்ரோவ் (arrow) போன்ற வடிவமைப்புடன் உருவாக்கியுள்ளது. இந்த புதிய வைகிங் சீரிஸ் வடிவமைப்பு சாதனைகளை கேவியர் நிறுவனம் அதன் கேவியர் வெர்சஸ் கலெக்ஷனில் சேர்த்துள்ளது.

வைகிங் ஏரோவ் டிசைனில் iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max..

கேவியர் வெர்சஸ் காலெக்ஷன் (Caviar Versus Collection):
இந்த புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐபோன் 15 ப்ரோ சாதனம் மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் சாதனம் 9,000 டாலர் மதிப்பிலான ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் வைக்கிங் சேகரிப்பில் உள்ள தனிச்சிறப்பு வாய்ந்தது. இது 850-1000 கி.பி.க்கு முந்தைய பழங்கால வைக்கிங் அம்புக்குறி துண்டுடன் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்களின் நிறத்தை ஒத்திருக்கும் பாலி கார்பனால் (poly carbon) செய்யப்பட்ட சேஸ், ஹெல்மெட்டின் வடிவத்தின் தோற்றத்தைக் கொடுக்கும் 24K தங்க பிரேம்களுடன் மேம்படுத்தப்பட்டு, போனுக்கு ஒரு ஆடம்பரமான தொடுதலைச் சேர்க்கிறது. கேவியர் (Caviar) இன் ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) தொடரில் விண்ட்ஸ்ட்ராம் (Windstorm), வெர்டான்ட் (Verdant) மற்றும் நார்ட் (Nord) போன்ற பிற மாடல்களுடன் இந்த போன் வருகிறது.

இதில் உள்ள ஒவ்வொறு மாடலும் தனித்துவமான வண்ணம் மற்றும் வடிவமைப்பு கூறுகளுடன் வருகிறது. இந்த மாடல்கள் நான்கு சேஸ் வண்ணங்களில் கிடைக்கின்றன. இதில் ப்ளூ (நோர்ட்), கிரீன் (வெர்டன்ட்), பிளாக் (காற்றுப்புயல்), மற்றும் கிரே (வைக்கிங்) வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான விருப்பங்களை வழங்குகிறது.

24K கோல்டு பிரேம் உடன் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள்:

Apple-ன் சொந்த iPhone 15 Pro பிரகாசமான வண்ணங்களை வழங்கவில்லை என்றாலும், கேவியர் இந்த இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில் ப்ளூ மற்றும் க்ரீன் நிறங்களில் தனிப்பயன் சேஸ்ஸை அறிமுகப்படுத்துகிறது. இந்தத் தொடர் சிறந்த 24K தங்கம் மற்றும் டைட்டானியம் போன்ற பிரீமியம் பொருட்களைப் பயன்படுத்துகிறது.

இது டார்க் க்ரீன், ப்ளூ மற்றும் க்ரேய் நிறங்களில் பாலி கலவைகளைப் பயன்படுத்துவது சாதனங்களுக்கு நுட்பமான தோற்றத்தை சேர்க்கிறது. இதன் விலை வாரியாக, iPhone 15 Pro Windstorm-க்கான சேகரிப்பு 6,860 டாலரில் தொடங்குகிறது. வைகிங் மாடலின் விலை 9,000 டாலர் ஆகும். வெர்டன்ட் மற்றும் நார்ட் மாடல்கள் விண்ட்ஸ்டார்முக்கு இணையான விலையில் உள்ளன.

இந்த மாடல்கள் ஒவ்வொன்றும் வரையறுக்கப்பட்ட பதிப்பின் ஒரு பகுதியாகும். வைக்கிங்கிற்கு 17 யூனிட்கள் மட்டுமே கிடைக்கின்றன. அதேபோல் வெர்டன்ட் மாடல் ஐபோன் 15 ப்ரோ, நோர்ட் மற்றும் விண்ட்ஸ்டார்ம் மாடல்களுக்கு 99 யூனிட்கள் மட்டுமே உள்ளன. கேவியர் நிறுவனம் ஐபோன் 15 தொடருக்கான UFO சேகரிப்பையும் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் சாதனங்கள் குறைந்த யூனிட் உடன் மட்டுமே உள்ளதால் முடிந்த வரை விரைவாக ஆர்டர் செய்துகொள்ளுங்கள். இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் வழியாக ஆர்டர் செய்யதுக்கொள்ளுங்கள்..

More from GizBot

Best Mobiles in India

English summary
Caviar Launches Viking Arrow Encrusted iPhone 15 Pro and iPhone 15 Pro Max
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X