பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

|

நமது சூரியக் குடும்பத்தில் இருக்கும் 9 கிரகங்களில் நம்முடைய பூமி கிரகமானது பல சிறப்புகளை உள்ளடக்கிய கிரகமாகத் திகழ்கிறது. நமக்கு இதுவரை தெரிந்த தகவலின் படி, இந்த பிரபஞ்சத்தில் உயிர்களை ஆதரிக்கும் ஒரு உயிர் உள்ள கிரகமாகப் பூமி செயல்பட்டு வருகிறது. நாம் வசிக்கும் இந்த பூமியானது, 71% நீரால் சூழப்பட்டுள்ளது மற்றும் 29% நிலப்பரப்பால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் எல்லாம் நாம் அறிந்த ஒன்றே, நம்முடைய பூமியில் எவ்வளவு சதவீதம் அடர்ந்த காடுகளால் மூடப்பட்டுள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

பூமி எவ்வளவு சதவீதம் காடுகளால் மூடப்பட்டுள்ளது?

பூமி எவ்வளவு சதவீதம் காடுகளால் மூடப்பட்டுள்ளது?

நம்முடைய பூமி கிரகமானது 31% அடர்ந்த காட்டுப் பகுதிகளால் பச்சை போர்வை போர்த்தி உள்ளது. பூமியில் உள்ள காடுகளில், மிகவும் இருண்ட மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதியாக அமேசான் காடு திகழ்கிறது. அதேபோல், மிகப்பெரிய காட்டுப் பகுதி ரஷ்யாவில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய காடு, மத்தியப்பிரதேசத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப் பல வகையான காடுகள் நமது பூமியில் இருந்தாலும், இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்படாத, மனிதனின் மூச்சுக்காற்று கூட புகாத ஒரு புதிய காட்டுப் பகுதியைச் சீனாவின் குகை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு

தென் சீனாவில் உள்ள குகை ஆய்வாளர்கள் சமீபத்தில் ஒரு மூழ்கும் குழியின் அடிப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில், மனிதனால் இதுவரை கண்டுபிடிக்கப்படாத பழங்கால காடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த காடு பூமியின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 192 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதவது, சுமார் 630 அடி ஆழமான குழிக்குள் இந்த காடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மூன்று கால்பந்து மைதானங்கள் நீளமுள்ள அளவில் பறந்து விரிந்துள்ளது.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

மனிதனின் கால் தடம் பதியாத புதிய காடு கண்டுபிடிப்பு

மனிதனின் கால் தடம் பதியாத வகையில், சுமார் 630 அடி ஆழமான குழிக்குள் இந்த பழங்கால காடு பத்திரமாகப் பதுக்கப்பட்டிருக்கிறது. இந்த பழமையான காட்டில் உள்ள மரங்கள் 40 மீட்டர் உயரம் வரை உயர்ந்து வளர்ந்துள்ளது என்று குகை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, இங்குள்ள மரங்கள் 130 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது. இந்த இராட்சஸ குழிக்குள் அமைந்திருக்கும் பகுதியை ஆய்வாளர்கள் சிங்க்ஹோல் என்று அழைக்கிறார்கள். உள்ளூரில் உள்ள 30 ராட்சத சிங்க்ஹோல்களில் இதுவும் ஒன்று என்று சீன அரசு கூறியுள்ளது.

WhatsApp இல் லொகேஷன் பகிர்வது எப்படி? லைவ் மற்றும் கரண்ட் லொகேஷன் ஷேரிங் என்றால் என்ன?WhatsApp இல் லொகேஷன் பகிர்வது எப்படி? லைவ் மற்றும் கரண்ட் லொகேஷன் ஷேரிங் என்றால் என்ன?

"பரலோக குழி" அல்லது 'ஹெவன்லி பிட்' பகுதிக்குள் பழங்கால காடு

உள்ளூர் மொழியில், சிங்க்ஹோல்களை மக்கள் "டியான்கெங்" என்று அழைக்கப்படுகின்றனர். இது தோராயமாக "பரலோக குழி" அல்லது 'ஹெவன்லி பிட்' என்று அழைக்கப்படுகிறது. இந்த பரலோக குழி, 306 மீட்டர் நீளமும், 150 மீட்டர் அகலமும், 192 மீட்டர் ஆழமும் கொண்ட இராட்சஸ அளவிலான பள்ளமாகக் காட்சியளிக்கிறது. இருக்கும் சிங்க்ஹோல்களில் இந்த சின்க்ஹோல் தான் இந்த மாவட்டத்தில் மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. உண்மையில், இந்த பழங்கால காட்டுப் பகுதி ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..

சிங்க்ஹோல் காடு பற்றி நமக்கு என்ன தெரியும்?

சிங்க்ஹோல் காடு பற்றி நமக்கு என்ன தெரியும்?

தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள லேயே கவுண்டியில் உள்ள பிங்கே கிராமத்திற்கு வெளியே குகை ஆய்வாளர்களால் இந்த மூழ்கிக் குழி கண்டுபிடிக்கப்பட்டது. மே 6 அன்று, ஆய்வாளர்கள் குழியின் அடிவாரத்தைத் தொட்டு, பழங்கால மரங்கள் மற்றும் தாவரங்களைக் கண்டுபிடித்தனர் என்று குவாங்சி செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இதுவரை காணப்படாத பழங்கால மரங்கள் மற்றும் தாவரங்களின் சரணாலயமாக இந்த இடம் காட்சி அளித்துள்ளது.

இந்த 10 தப்பான சார்ஜிங் பழக்கம் உங்களுக்கும் இருக்கிறதா? நிலைமை மோசமாவதற்குள் உடனே மாற்றுங்கள்..இந்த 10 தப்பான சார்ஜிங் பழக்கம் உங்களுக்கும் இருக்கிறதா? நிலைமை மோசமாவதற்குள் உடனே மாற்றுங்கள்..

இதுவரை அறியப்படாத புதிய இனங்கள் மற்றும் உயிர்களின் சரணாலயமா இந்த இடம்

இதுவரை அறியப்படாத புதிய இனங்கள் மற்றும் உயிர்களின் சரணாலயமா இந்த இடம்

மாநில செய்தி நிறுவனமான சின்ஹுவாவுடன் உரையாடியபோது, ​​சீன புவியியல் ஆய்வின் கார்ஸ்ட் புவியியல் நிறுவனத்தில் மூத்த பொறியாளர் ஜாங் யுவான்ஹாய், மூழ்கும் குழி அதன் சுவர்களில் மூன்று குகைகள் மற்றும் கீழே நன்கு பாதுகாக்கப்பட்ட பழமையான காடுகளைக் கொண்டுள்ளது என்று கூறினார். "இதுவரை அறிவியலால் அறிவிக்கப்படாத அல்லது விவரிக்கப்படாத இனங்கள் மற்றும் புதிய உயிர்கள் இந்தக் குகைகளில் காணப்படுகின்றன என்பதை அறிந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்," என்று சென் லிக்சின் கூறினார்.

செவ்வாயில் 'பூ' போன்ற உருவம்.. உண்மையில் இது பூ தானா? விளக்கம் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்..செவ்வாயில் 'பூ' போன்ற உருவம்.. உண்மையில் இது பூ தானா? விளக்கம் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்..

மூழ்கும் குகைகள் மற்றும் இருண்ட குகைகளும் கண்டுபிடிப்பு

மூழ்கும் குகைகள் மற்றும் இருண்ட குகைகளும் கண்டுபிடிப்பு

இது சிங்க்ஹோலின் அடிவாரத்தை அடையப் பல மணிநேரம் ஆனது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிங்க்ஹோல் மூலம் உருவாகும் நிலப்பரப்பு, கார்ஸ்ட் நிலப்பரப்பு என்று அழைக்கப்படுகிறது. கார்ஸ்ட் நிலப்பரப்பு பாறை நிலத்தடி நீரில் கரையும் போது உருவாகிறது. இது போன்ற பகுதிகளில் தொடர்ச்சியான மூழ்கும் குகைகள் மற்றும் குகைகள் இருப்பதை இது குறிக்கிறது. இந்த குறிப்பிட்ட குகை அரிதானது, இருப்பினும், அதன் ஆழத்துடன் கூட, மரங்களின் வளர்ச்சியை அனுமதிக்க போதுமான வெளிச்சம் இருந்துள்ளது என்பதே ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Cave Explorers Found Ancient Forest At The Bottom Of A Giant Heavenly Pit Sinkhole In China : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X