'வெள்ளி-செவ்வாய்-சந்திரன்' மூன்றும் ஒரே வானில் நெருங்கும் காட்சி.. வெறும் கண்களால் இதை பார்க்கலாமா?

|

ஸ்கைவாட்சர்களுக்கு இன்று ஒரு நட்சத்திர விருந்து காத்துக்கொண்டிருக்கிறது. சமீபத்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் அறிவிப்பின் படி, வீனஸ் (வெள்ளி), மார்ஸ் (செவ்வாய்) மற்றும் மூன் (சந்திரன்) ஆகிய மூன்றும் திங்கள் மற்றும் செவ்வாய் இரவுகளில் வானத்தில் மிக அருகில் ஒரே நேர்கோட்டில் அமைந்து காட்சியளிக்கவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திகைப்பூட்டும் காட்சியை நீங்கள் வெறும் கண்களால் இன்று இரவு பார்க்கலாம்.

வானில் தோன்றும் திகைப்பூட்டும் அதிசய நிகழ்வுகள்

வானில் தோன்றும் திகைப்பூட்டும் அதிசய நிகழ்வுகள்

ஆண்டு தோறும் சூரிய கிரகண நிகழ்வுகளும், சந்திரன் சார்த்த பிங்க் மூன், ரெட் மூன் போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துகொண்டே தான் இருக்கின்றன, அப்படி வானில் ஏராளமான அதிசயங்கள் நமது கண்களுக்குத் தென்படாமல் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இதில் சில நிகழ்வுகளை மட்டும் நம்மால் வெறும் கண்களால் பார்த்து ரசிக்க முடியும். அப்படியான ஒரு திகைப்பூட்டும் நிகழ்வைத் தான் நாம் இன்று இரவு ரசிக்கவிருக்கிறோம்.

'வெள்ளி-செவ்வாய்-சந்திரன்' மூன்றும் ஒரே வானில் நெருங்கும் காட்சி

'வெள்ளி-செவ்வாய்-சந்திரன்' மூன்றும் ஒரே வானில் நெருங்கும் காட்சி

தற்போது செவ்வாய் கோளும் வெள்ளி கோளும் ஒன்றை ஒன்று நெருங்கி சந்திரனுக்குக் கைகுலுக்குவது போலக் காட்சி அளிக்கும் இந்த நிகழ்வை இன்று நீங்கள் வெறும் கண்களால் காண முடியும். இந்த அரிய வானியல் நிகழ்வை இன்று நீங்கள் மேற்கு வானில் பார்வையிட முடியும். இந்த அற்புதக் காட்சியை மேகங்களின் இடையூறு இல்லாத இடங்களில் மக்கள் கண்டுகளிக்கலாம் என்று விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு வந்த ஏலியன்ஸ்: நாசா லைவ் வீடியோவில் சிக்கிய ஆதாரம்- வட்டமடிக்கும் 10 யுஎஃப்ஓ?பூமிக்கு வந்த ஏலியன்ஸ்: நாசா லைவ் வீடியோவில் சிக்கிய ஆதாரம்- வட்டமடிக்கும் 10 யுஎஃப்ஓ?

இரண்டு கோள்களுக்கு இடையே வெறும் 0.5 டிகிரி இடைவெளியா?

இரண்டு கோள்களுக்கு இடையே வெறும் 0.5 டிகிரி இடைவெளியா?

நாம் பூமியில் இருந்து இந்த நிகழ்வைப் பார்க்கும் போது, சந்திரனுடன் ஒரே வானில் நெருக்கமாக நெருங்கி வரும் இந்த இரண்டு கோள்களுக்கு இடையே வெறும் 0.5 டிகிரி இடைவெளிதான் இருப்பது போல் காட்சியளிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், உண்மையில் இந்த இரண்டு கோள்களும் பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய், வெள்ளி கோள்களுக்கு சுமார் நான்கு டிகிரி தொலைவில் சந்திரனின் பிறை தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13க்கு பின்னர் இரண்டு கோள்களும் விலகும் காட்சி

ஜூலை 13க்கு பின்னர் இரண்டு கோள்களும் விலகும் காட்சி

மேற்கு இரவு வானில் தென்படும் இந்தக் காட்சியை மக்கள் தொலைநோக்கி போன்று எந்தவிதக் கருவியும் இல்லாமல் வெறும் கண்களால் கூட பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜூலை 13 ஆம் தேதி மட்டும் இந்த இரண்டு கோள்களும் மிக நெருக்கத்தில் ஒன்றுடன் ஒன்று இணைவது போன்ற காட்சியை மக்கள் காண முடியும் என்றும், இதற்குப் பின்னர் தொடர்ந்து வரும் நாட்களில் இரண்டு கோள்களும் விலகிச் செல்வதையும் மக்கள் பார்த்து ரசிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

128 ஜிபி ஸ்டோரேஜ்..4 கேமரா..6000mah பேட்டரி.. இவ்வளவு மலிவா ஒரு சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க முடியாது..128 ஜிபி ஸ்டோரேஜ்..4 கேமரா..6000mah பேட்டரி.. இவ்வளவு மலிவா ஒரு சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க முடியாது..

நட்சத்திர நள்ளிரவு வானில் தோன்றும் அற்புதம்

நட்சத்திர நள்ளிரவு வானில் தோன்றும் அற்புதம்

இதை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்ப்பது எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும், இந்த நிகழ்வை இன்னும் நுணுக்கத்துடன் நெருக்கமாகப் பார்க்க விரும்பும் மக்கள் தொலைநோக்கியைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு வானில் இந்த நிகழ்வைக் கண்டு ரசித்துவிட்டு உங்களின் அனுபவம் எப்படி இருந்தது என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Catch Venus Mars and Moon Close Together In The Night Sky Today : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X