விரைவில் ஆன்லைன் டெலிவரி இப்படிதான்- உருவானது கேஸி ரோபோ: 5 கிலோமீட்டர் தூரத்தை 53 நிமிடத்தில் ஓடி அசத்தல்!

|

உலகில் இயந்திரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது, குறிப்பாக இந்த தேவைகளை பூர்த்தி செய்ய ரோபோக்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

அடுத்தடுத்த கட்டம் முன்னேற்றம்

அடுத்தடுத்த கட்டம் முன்னேற்றம்

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டம் நம்மை முன்னோக்கி அழைத்து செல்கிறது. விரைவில் அறிமுகமாக இருக்கும் 5ஜி நம்மை பல கட்டம் முன்னோக்கி எடுத்து செல்ல இருக்கிறது. மறுபுறம் தொழில்நுட்பங்களில் ரோபோக்கள் பங்களிப்பு வளர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி வெளிப்புற நிலப்பரப்பில் ஓடும் கற்றலை மேற்கொள்ளும் முதல் ரோபோவின் காட்சி வெளியாகியுள்ளது.

53 நிமிடங்களில் ஐந்து கிலோ மீட்டர் பயணம்

53 நிமிடங்களில் ஐந்து கிலோ மீட்டர் பயணம்

இந்த ரோபோவானது ஒரேகான் மாநில பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி வெற்றிகரமாக ஓடியது. இந்த ரோபோவானது 53 நிமிடங்களில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்தது. இந்த ரோபோவுக்கு கேஸி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோவானது ஓரிகான் மாநில பலகலைக்கழகம் மற்றும் ரோபோடிக் நிறுவனம் இணைந்து உருவாக்கியது.

கேஸி ரோபோ

கேஸி ரோபோ

கேஸி ரோபோவுக்கு ஒருமுறை மட்டுமே சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இது 5 கிலோமீட்டர் ஓடியுள்ளது. இந்த ரோபோவானது 5 கிலோமீட்டர் தூரத்தை 53 நிமிடங்களில் கடந்தது. இருப்பினும் இந்த ரோபோ ஓடும்போது சாதனம் வெப்பமானதன் காரணமாகவும், வளைவுகளிலும் அதே வேகத்தில் திரும்பியதன் காரணத்தாலும் ரோபோ இரண்டுமுறை கீழே விழுந்தது. கேஸி ரோபோ திட்டமிட்டபடி இலக்கை அடைந்தது.

நடப்பதற்கும் ஓடுவதற்கும் கற்றுக்கொள்வது இதுவே முதல்முறை

ஒரு ரோபோ நடப்பதற்கும் ஓடுவதற்கும் கற்றுக்கொள்வது இதுவே முதல்முறையாகும். வெற்றிகரமாக மனித நிலப்பரப்பில் ரோபோ தடம்பதித்து ஓடி டாஸ்க்கை நிறைவு செய்துள்ளது. ஹர்ஸ்ட் மற்றும் பொறியாளர்கள் குழு அமெரிக்க பாதுகாப்புத் துறையின் 1 மில்லியன் டாலர் மானியத்தின் உதவியுடன் 16 மாத காலத்தில் கேசியை உருவாக்கியுள்ளது. ரோபோ பல்கலைக்கழகத்தின் டைனமிக் ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடன் OSU ஸ்பின்ஆஃப் நிறுவனமும் இணைந்து தயாரித்தது.

பை பெடல் எனப்படும் அதன் கால்களின் மூலம் ஓடுகிறது

பை பெடல் எனப்படும் அதன் கால்களின் மூலம் ஓடுகிறது

கேஸி ரோபோ பை பெடல் எனப்படும் அதன் கால்களின் மூலம் ஓடுகிறது. இந்த ரோபோவானது பொருட்களை டெலிவரி செய்வதற்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு உதவும் வகையிலும் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோபோ கட்டுப்பாட்டு அணுகுமுறைகளின் நிபுணத்துவத்தை புதிய இயந்திர கற்றல் கருவி எடுத்துரைக்கிறது. இந்த வகையான முழுமையான அணுகுமுரை விலங்கு போன்ற செயல்திறனை அளிக்கும் இது நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமானது. கேசி மிகவும் திறமையான ரோபோ ஆகும். காரணம் இது அந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வன்பொருள் அமைப்பு ரோபோவால் என்ன செய்யமுடியும் என்பதை தெளிவுப்படுத்தியது.

ரோபோ உதவியுடன் எழுந்து நடக்க சாதனம்

ரோபோ உதவியுடன் எழுந்து நடக்க சாதனம்

அதேபோல் இப்போது உள்ள ஒரு சில புதிய தொழில்நுட்பங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் பிரான்ஸ்-ல் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் முடங்கி இருந்த 16 வயது மகனை ரோபோ உதவியுடன் எழுந்து நடக்க செய்துள்ளார் அவரது தந்தை. வெளிவந்த தகவலின்படி, பிரான்ஸ்-ல் ஆஸ்கார் எனும் 16 வயது சிறுவனின் அன்பு கோரிக்கைக்கு இணங்க அவரது தந்தை பிரத்யேக ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் ரோபோவை உருவாக்கியுள்ளார் அந்த 16 வயது சிறுவனின் தந்தை ஜீன் லூயிஸ்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Cassie Robot Running Five Kilometers Distance Within 53 minutes on a Single Charge

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X