இது விளம்பரத்துக்காக பண்ணது: 5ஜி சேவை குறித்து பிரபல நடிகை தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கண்டனம்!

|

நடிகை ஜூகி சாவ்லா தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜேஆர் மிதா முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், இந்த வழக்கானது விளம்பரத்துக்காக தொடரப்பட்டது என நீதிபதி கூறினார். மேலும் மனுதாரர் சந்தேகங்களை அரசிடம் அணுகி அதில் உரிய பதில் கிடைக்காதபட்சத்தில் நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது 5ஜி

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது 5ஜி

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது 5ஜி தொழில்நுட்பம் தான். அதாவது ஜந்தாம் தலைமுறைக்காக அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5ஜி எனப்படும். இது 4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான
தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது. அண்மையில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசின்தொலைத்தொடர்புத் துறை அனுமதி அளித்தது.

5ஜி தொழில்நுட்பத்துக்கு எதிராக வழக்கு

5ஜி தொழில்நுட்பத்துக்கு எதிராக வழக்கு

இந்நிலையில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக நடிகை ஜூஹி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதாவது 5ஜி தொழில்நுட்பத்தில் வெளியிடப்படும் கதிர்வீச்சு, மக்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்கும் என்று கூறினா ஜூஹி சாவ்லா.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள்

தொழில்நுட்ப முன்னேற்றங்கள்

குறிப்பாக இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நான் தொழில்நுட்ப முன்னேறங்களை செயல்படுத்துவதற்கு எதிரானவர் அல்ல. ஆனால் தொலைத்தொடர்பு சேவைக்கான சாதனங்களைப் பயன்படுத்தும்போது நாங்கள் தொடர் குழப்பத்தில் இருக்கிறோம் என்று கூறினார்.

செல் டவர்களிடமிருந்து வெளியேறும் கதிர்வீச்சு

செல் டவர்களிடமிருந்து வெளியேறும் கதிர்வீச்சு

மேலும் செல் டவர்களிடமிருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் மக்களின் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும் என்பதை நம்புவதற்குப் போதுமான ஆதாரங்களை கிடைத்துள்ளன என்று நடிகை ஜூஹி சாவ்லா கூறினார். அதேபோல் மனிதர்கள் மட்டுமல்லாமல், பூச்சிகள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்தும் இந்த கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் என்று கூறினார். மேலும் இதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவே முடியாது என்றும் ஜூஹி சாவ்லா தெரிவித்தார்.

வெற்றிகரமான தொழில்நுட்பமாக இருக்கும்

வெற்றிகரமான தொழில்நுட்பமாக இருக்கும்

குறிப்பாக 5ஜி தொழில்நுட்பம் வெற்றிகரமாகக் களமிறக்க, பூமியைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையில் அதிக சாட்டிலைட்கள் அமைக்கப்பட வேண்டும். இப்படி செய்வதால் பூமியின் இயல்பு நிலையையும் மாற்றுகிறது. உண்மையில் சொல்லப்போனால் மைக்ரோவேவ் சிக்னல்கலால் பூமி சூடடைந்து, பெருமளவிலான வானிலை மாற்றத்தைச் உருவாக்க போகிறது. அதுமட்டுமின்றி அதிகளவிலான இயற்கை சீற்றத்தை பூமி சந்திக்க நேரிடும்.

Best Mobiles in India

English summary
Case Filed for media publicity: Actress Juhi Chawla Case Against 5G

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X