கஷ்டத்தில் தவித்த மாணவி: திடீரென வந்த பார்சல்- ஆடுகள நடிகை அதிரடி!

|

பியூசி படிப்பில் 94% மதிப்பெண் பெற்று ஆன்லைன் வகுப்புக்கு சாதனமின்றி தவித்த மாணவிக்கு நடிகை டாப்ஸி உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு

நாடு முழுவதும் ஊரடங்கு

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்களின் படிப்புகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்

இருப்பினும் ஏணைய பள்ளி, கல்லூரிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். சில பகுதிகளில் இதற்கு எதிர்ப்பும் எழுந்தும் வருகிறது. காரணம், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் எனவும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்கள் இல்லாத மாணவர்கள் எப்படி வகுப்பில் கலந்து கொள்வார்கள் எனவும் கேள்விகள் எழுந்து வருகிறது.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்

ஆன்லைன் வகுப்புகளுக்கான கட்டுபாடுகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மழலையர் பள்ளிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஒரு நாளில் 30 நிமிடங்களுக்குள் மட்டுமே நடத்த வேண்டும். 1 - 8 வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 2 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் 9 முதல் 12 வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 4 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவி மூலமாகத்தான் பாடத்திட்டம்

டிவி மூலமாகத்தான் பாடத்திட்டம்

தமிழகத்தை பொருத்தவரை குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படாது என்றும் டிவி மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் ஒரு சேனல் என்றும் 5 தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.

பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது

பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது

பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகளை நடத்த மாநில அரசுகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் இல்லாமல் சிரமப்பட்டுள்ளார். இவர் பியூசி தேர்வில் 94 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

2 மணிநேரமா குறுகுறுனு பார்க்குறாரே: ஒரே வீடியோவில் வேர்ல்ட் பேமஸ்- 2 மில்லியன் பார்வையாளர்கள்!

ஆன்லைன் வகுப்பில் பாடம் படிக்க ஸ்மார்ட்போன்

ஆன்லைன் வகுப்பில் பாடம் படிக்க ஸ்மார்ட்போன்

மருத்துவராக வேண்டும் என்று லட்சியத்தோடு இருந்த இவர் ஏற்கனவே வீட்டில் இருந்த பல்வேறு பொருட்களை விற்று அவரது தந்தை படிக்க வைத்துள்ளார். தற்போது ஆன்லைன் வகுப்பில் பாடம் படிக்க ஸ்மார்ட்போன் இன்றி சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்த செய்தி பரவலாக வெளிவர நடிகை டாப்ஸி இதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவி

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவி

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவியின் வீட்டுக்கு பார்சல் ஒன்று வந்துள்ளது. அதை திறந்த பார்த்தபோது ஐபோன் இருந்துள்ளது. நடிகை டாப்ஸி பன்னு அனுப்பிய ஐபோன்தான் அது. பார்சலை பார்த்த மாணவி மகிழ்ச்சியில் திகைத்துள்ளார்.

டாப்ஸி மேடம் அனுப்பிய போன்

டாப்ஸி மேடம் அனுப்பிய போன்

இதுகுறித்து பேசிய மாணவி, டாப்ஸி மேடம் அனுப்பிய போன் தனக்கு கிடைத்தது. இதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. தான் கடினமாக நீட் தேர்வுக்கு படித்து அதிக மதிப்பெண் எடுப்பேன். தங்களது ஆசிர்வாதம் தனக்கு தேவை என தெரிவித்தார்.

பெண்கள் அதிகளவு படிக்க வேண்டும்

பெண்கள் அதிகளவு படிக்க வேண்டும்

இதுகுறித்து நடிகை டாப்ஸி கூறுகையில், பெண்கள் அதிகளவு படிக்க வேண்டும் அனைத்து குழந்தையும் படிக்க வேண்டும். அதிக மருத்துவர்கள் தேவை. நாட்டிற்கான சிறந்த எதிர்காலத்திற்கு ஒரு சிறிய பங்களிப்பு இது என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டாப்ஸியின் செயலுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
CarWashers Daughter Getting a Iphone For Online Class From Actress Taapsee

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X