Home
News

இப்படி ஒரு சூப்பர் மார்க்கெட் தான் வேணும்: கேஷியர் கிடையாது: எங்கு தெரியுமா?

புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக சில தொழிலநுட்பங்கள நமது தினசரி வேலைகளை மிகவும் எளிமையாக்குகிறது. விரைவில் இன்னும் அதிக தொழில்நுட்ப சாதனங்கள் வெளிவரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

பாய் நகரில் கேஷியர் இல்லாத

இந்நிலையில் துபாய் நகரில் கேஷியர் இல்லாத முற்றிலும் தானியங்கி முறையிலான சூப்பர் மார்க்கெட் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அதிநவீன அம்சங்களுடன் இந்த சூப்பர் மார்க்கெட் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் அமைந்துள்

அதாவது ஐக்கிய அரபு எமிரேட்சில் அமைந்துள்ள துபாய் மத்திய கிழக்கு பகுதியில் கேஷியர் இல்லாத முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் Carrefour (கேரிபோர்) எனும் சூப்பர் மார்க்கெட் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நாம் நினைக்கும் நொறுக்குத் தீனி, குளிர்பானம் உட்பட அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சூப்பர் மார்க்கெட்டில் Carrefour

மேலும் இந்த சூப்பர் மார்க்கெட்டில் Carrefour மொபைல் ஆப் வைத்திருப்பவர்கள் மட்டுமே பொருட்களை வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் கடை முழுவதும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சூப்பர் மார்க்கெட்.

வாடிக்கையாளர்கள் தங்கள் விரும்பும்

குறிப்பாக வாடிக்கையாளர்கள் தங்கள் விரும்பும் பொருட்களை எடுத்துக்கொண்டு கடையின் வாயிலுக்கு வந்ததும் அவர்களுடைய மொபைல்போனுக்கு பொருட்களின் பில் வந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு தொகையை டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

 கேஷியர், பணியாளர்கள் இல்லாத

இதுபோன்ற கேஷியர், பணியாளர்கள் இல்லாத கடைகள் மக்களிடம் அதிக வரவேற்பை பெறும் என கேரிபோர் நிறுவனதலைமை செயல் அதிகாரி ஹனிஸ் வெய்ஸ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அமேசான் நிறுவனமும் கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவில் இதேபோன்று ஒரு தானியங்கி சூப்பர் மார்க்கெட் ஒன்றை திறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேசான் நிறுவனம் இந்தியாவில்

அதேபோல் அமேசான் நிறுவனம் இந்தியாவில் இந்த ஆண்டு 35 நகரங்களில் 8000-க்கும் மேற்பட்ட நேரடி பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் நிறுவனத்தின் மனிதவளத் தலைவர் மேனா தீப்தி வர்மா அவர்கள் கூறியது என்னவென்றால், அமேசான்
தனது கார்ப்பரேட்,தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை மற்றும் செயல்பாட்டு தளங்களில் வேலை வாய்ப்புகளை
உருவாக்கியுள்ளதாகவும், பின்பு மெஷன் அப்ளிகேஷன் சயின்ஸ்,மனிதவள மேம்பாடு, நிதி போன்ற பல்வேறு துறைகளில் வேலைவாய்புகளை ஏற்படுத்துகிறோம் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்தியாவில்

குறிப்பாக வரும் 2025-க்குள் அமேசான் நிறுவனம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. பின்பு இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் 10 லட்சம் நேரடி மற்றும் முறைமுக வேலைகளை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது.

குறிப்பாக அமேசான் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் அமேசான் தளத்தில் தினசரி ஒரு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Carrerfour Rolled Out Its Fully Automated Supermarket Future In Dubai: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X