புது நத்திங் லேப்டாப் விரைவில் அறிமுகம்! Nothing-ன் ஆட்டம் இனி வேற மாதிரி இருக்க போகுது!
நத்திங் (Nothing) நிறுவனம், மிக விரைவில் அதன் முதல் லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நத்திங் போர்ட்போலியோவில் புதிதாக சேர்க்கப்படவுள்ள நத்திங் லேப்டாப் (Nothing Laptop) பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.
உலகம் முழுவதும், பெஸ்ட்-இன்-கிளாஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் ஹெட்செட்களை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக நத்திங் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நத்திங் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் நிபந்தனைகளை ஒவ்வொன்றின் பின் ஒன்றாக முழுமையாக பூர்த்தி செய்து வருகிறது. நத்திங் ஃபோன் 1 (Nothing Phone 1) மற்றும் நத்திங் ஃபோன் 2 (Nothing Phone 2) இரண்டும் அதற்கான தெளிவான உதாரணங்கள் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் சாதனங்கள் மில்லியன் கணக்கான ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, நத்திங் நிறுவனத்தின் டிரான்ஸ்பரென்ட் டிசைன் உலக ஸ்மார்ட்போன் மற்றும் இயர்பட்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்பது கவனிக்கத்தக்கது. சமீபத்தில் வெளியான ஆதாரங்களின் படி, நத்திங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (Nothing CEO) கார்ல் பெய் (Carl Pei) லேப்டாப் சந்தையில் நுழைவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக, நத்திங் ரசிகர்கள் பலர் மிகுந்த உற்சாகத்துடன், வரவிருக்கும் புதிய நத்திங் லேப்டாப் இன் அம்சங்கள் மற்றும் விலைகளை இணையத்தில் தேடி வருகின்றனர். தலைமை நிர்வாக அதிகாரி கொடுத்த சிறிய துணுக்கின் படி, நிறுவனம் விரைவில் அதன் முதல் லேப்டாப் சாதனத்தை அறிமுகப்படுத்தும் என்பதை மட்டுமே அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், கூடுதல் விவரங்கள் மற்றும் அம்சங்களை பற்றி அவர் வேறெதுவும் கூறவில்லை.
நத்திங் (Nothing) நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் லேப்டாப்களின் படத்தையும் பகிர்ந்துள்ளது. ஒரு வேளை, வரவிருக்கும் புதிய நத்திங் லேப்டாப் சாதனம் இந்த புகைப்படத்தில் இருப்பது போல இருக்க அதிக வாய்ப்புள்ளது. நிறுவனத்தின் இடுகையில் வெளியிடப்பட்ட படங்களில் நத்திங் லேப்டாப் பின் சாம்பல் மற்றும் வெள்ளை வண்ணங்களை நீங்கள் தெளிவாகக் காணலாம்.

இருப்பினும், இது என்ன அம்சங்கள் கொண்டிருக்கும், இது பட்ஜெட் விலையில் வெளிவருமா? இது இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படுமா? இதன் வெளியீட்டு தேதி என்ன? என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், தற்போது நிறுவனத்திடம் இருந்து புதிதாக நத்திங் லேப்டாப் என்ற சாதனம் வெளிவரும் என்பது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நத்திங் லேப்டாப்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் அதன் பயனர்களிடமிருந்து பெரியளவில் பாராட்டுகளை பெறும் என்று நாம் ஊகிக்க முடியும். ஏனென்றால், நத்திங் ஃபோன் 1 மற்றும் நத்திங் ஃபோன் 2 ஆகியவை எப்படி சிறந்த வடிவமைப்புகள் மற்றும் அம்சங்களுக்காக தங்கள் பயனர்களிடமிருந்து அன்பையும் பாராட்டையும் பெற்றன என்பதை நாம் இதற்கு முன் பார்த்துள்ளோம். நிறுவனம் தொடர்ந்து அதன் சாதனங்களை எப்படி மேம்படுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
நத்திங் லேப்டாப்களின் விலை பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை. ஆனால், இது இந்திய மதிப்பில் ரூ.50,000-திற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய நத்திங் லேப்டாப் தொடர்பான அப்டேட்கள் மிக விரைவில் நத்திங் இன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களை எட்டும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








