Home
News

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. Nothing Phone 3 க்கு முதல் மரியாதை.. Carl Pei சொன்ன தகவல்!

பிரீமியம் விலைப்பிரிவின் கீழ் நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கசப்பான உண்மை என்னவென்றால் - நத்திங் போன் 3 ஆனது நத்திங் நிறுவனத்திற்கு மட்டுமே பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக தெரிகிறது; கஸ்டமர்களுக்கு அல்ல!

ஏனென்றால் நத்திங் போன் 3 மாடலில் உள்ள அதே ஸ்னாப்டிராகன் 8ஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப்செட் உடன் வரும் சில ஸ்மார்ட்போன்கள் நத்திங் போன் 3 மாடலின் "பாதி விலைக்கு" வாங்க கிடைக்கின்றன. அறியாதோர்க்கு நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.79,999 ஆகும்.

Nothing Phone 3 க்கு முதல் மரியாதை.. Carl Pei சொன்ன தகவல்!

இதற்கிடையில் தான் நத்திங் சிஇஓ-வான கார்ல் பெய் - ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.5 உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்விலேயே - நத்திங் ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 16 அப்டேட் எப்போது அறிமுகமாகும் என்கிற விவரங்களும் அறிவிக்கப்பட்டன.

கூகுள் நிறுவனம் ஆனது ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டமின் அடுத்த வெர்ஷன் ஆன ஆண்ட்ராய்டு 16-ஐ கடந்த மாதம் கூகிள் வெளியிட்டது. ஆனால் இந்த அப்டேட் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே ஸ்டேபிள் பில்ட்-ஐ பெற்றுள்ளன. இருப்பினும் நத்திங் ஸ்மார்ட்போன்களுக்கும் விரைவில் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வரக்கூடும் என்பதை நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

நத்திங் ஓஎஸ் 4.0 அப்டேட்டின் வெளியீட்டு தேதி: நத்திங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் - நத்திங் போன் 3 பற்றிய விவரங்களை தொகுத்த தலைமை நிர்வாக அதிகாரி ஆன கார்ல் பெய் "இந்த ஸ்மார்ட்போன் நத்திங் ஓஎஸ் 3.5 உடன் வருகிறது. இது இந்த இலையுதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நத்திங் ஓஎஸ் 4.0 அப்டேட்டை பெறும் என்று கூறியுள்ளார்

ஆக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனிற்கு வருகிற 2025 செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலத்திற்குள் நத்திங் ஓஎஸ் 4.0 அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டை பெறும் நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாகவும் - நத்திங் போன் 3 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி கூகுள் வெளியிட்டுள்ள ஆண்ட்ராய்டு 16-ன் ஸ்டேபிள் பில்ட் இப்போதைக்கு பிக்சல் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கிடைக்கின்றன. மற்ற நிறுவனங்கள் இன்னுமும் பீட்டா ஃபார்ம்வேரை சோதித்து வருகின்றன. கார்ல் பெயின் நத்திங் ஓஎஸ் 4.0-ன் அறிவிப்பானது விரைவில் நத்திங் நிறுவனமும் கூகுள் உடன் சேரும் என்பதை குறிக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான நத்திங் 4.0 ஓஎஸ்-ல் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம் என்கிற விவரங்கள் இல்லை. ஆனால் ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டின் முக்கிய அம்சங்களை நாங்கள் அறிவோம். அதில் ரியல்டைம் அப்டேட்ஸ் மற்றும் க்ளீன் ஆன நோட்டிபிகேஷன்ஸ் (Real-time updates and cleaner notifications), காது கேட்கும் கருவிகளை பயன்படுத்தும் பயனர்களுக்கான தெளிவான கால்கள் (Clearer calls for hearing aid users) ஆகியவைகள் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களாக உள்ளன

மேலும் மேம்பட்ட பாதுகாப்பு (Advanced Protection) - பெரிய ஸ்க்ரீன்களில் இன்னும் சிற்ப்பான மல்டி டாஸ்கிங் (Better multitasking on big screens) மற்றும் எச்டிஆர் ஸ்க்ரீன்ஷாட்ஸ் ஆதரவு (HDR screenshots),அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு (Adaptive refresh rates) ஆகிய அம்சங்களும் ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டில் உள்ளன.

என்னென்ன கூகுள் பிக்சல் டிவைஸ்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் கிடைக்கும்? கூகுள் பிக்சல் 6, கூகுள் பிக்சல் 6 ப்ரோ, கூகுள் பிக்சல் 6ஏ, கூகுள் பிக்சல் 7, கூகுள் பிக்சல் 7 ப்ரோ, கூகுள் பிக்சல் 7ஏ, கூகுள் பிக்சல் 8, கூகுள் பிக்சல் 8 ப்ரோ, கூகுள் பிக்சல் 8ஏ, கூகுள் பிக்சல் 9, கூகுள் பிக்சல் 9 ப்ரோ, கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல், கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட், கூகுள் பிக்சல் 9ஏ, கூகுள் பிக்சல் ஃபோல்ட்

மேற்கண்ட பட்டியலில் உங்களுடைய கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் மற்றும் போல்டபிள் போன் இருந்தால், உங்களுக்கு ஓடிஏ (OTA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஓவர்-தி-ஏர் டவுன்லோட் (Over-the-air download) மூலம் கூகுளின் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் கிடைக்கும்

More from GizBot

Best Mobiles in India

English summary
Carl Pei Confirmed Android 16 Based Nothing OS 4 0 Update Release Between September to November 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X