Home
News

அம்பானி வீடு அருகே வெடிபொருளுடன் கார்: "இது டிரைலர்" என எச்சரிக்கை- என்ன நடந்தது?

உலக அளவில், மிக சக்திவாய்ந்த வணிகர்களில் ஒருவரானவர் முகேஷ் அம்பானி. இவரது அன்டிலியா வீடு உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த குடியிருப்புகளில் ஒன்றாகும். இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டுக்கு அருகே ஸ்கார்பியோ கார் 2.6 கிலோ எடையுள்ள 20 ஜெலட்டின் குச்சிகளோடு நிறுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலி பதிவு எண்ணோடு ஸ்கார்பியோ கார்

போலி பதிவு எண்ணோடு ஸ்கார்பியோ கார்

இதுகுறித்த போலீஸார் விசாரணையில், போலி பதிவு எண்ணோடு ஸ்கார்பியோ கார் ஆன்டிலாவுக்கு அருகே உள்ள மைக்கேல் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நான்கு வாகன போலி எண் தகடுகளை போலீஸார் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இந்த வாகனம் எண் அம்பானிக்கு பாதுகாப்பு வழங்கிய இசட் பிளஸ் பிரிவில் ஒரு பகுதியாக இருந்துள்ளது.

ஜெலட்டின் குச்சிகளுடன் இருந்த கார்

ஜெலட்டின் குச்சிகளுடன் இருந்த கார்

ஸ்கார்பியோ காரில் ஜெலட்டின் குச்சிகள் மட்டுமின்றி அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான மும்பை இந்தியன்ஸ் அணி பொறிக்கப்பட்டிருந்த பை ஒன்றும் இருந்துள்ளது. அந்த பையில், இது ஒரு டிரைலர் மட்டும்தான் அடுத்தமுறை உங்கள் குடும்பத்தினருக்கு வீசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிகளை சரிசெய்க, குட் நைட் என்ற தகவல் கிடைத்துள்ளது.

வேண்டுமென்றே தவறாக எழுதப்பட்ட எழுத்துக்கள்

வேண்டுமென்றே தவறாக எழுதப்பட்ட எழுத்துக்கள்

இது தலைநகரங்கள் மற்றும் சிறிய எழுத்துகள், ரோமானிய இந்தி மற்றும் தவறான எழுத்துப்பிழைகள் கலவையோடு ஒரு கணினியில் இருந்து அச்சிடப்பட்டுள்ளது எனவும் இந்த முறை தங்கள் அடையாளத்தை மறைக்க வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

திருடப்பட்ட ஸ்கார்பியோ கார்

திருடப்பட்ட ஸ்கார்பியோ கார்

இன்ஜின் சேஸ் எண் அடிப்படையில் வாகன உரிமையாளரை போலீஸார் விசாரித்தனர். அதில் தானே குடியிருப்பை சேர்ந்த அவர் ஸ்கார்பியோ தன்னுடையது என்பது உறுதிப்படுத்தியதோடு அந்த பதிவு எண் தன்னுடியைது இல்லை எனவும் பிப்.,17 வாகனம் திருடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

போலீஸார் தீவிர விசாரணை

ஸ்கார்பியோ வாகனத்தை திருடியது யார் என்பதை கண்டுபிடிக்க போலீஸார் முயற்சித்து வருகின்றனர். இதுகுறித்து விசாரிக்க போலீஸார் தரப்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் முழுதாக திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கலாம் என போலீஸார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

விலையுயர்ந்த குடியிருப்புகளில் ஒன்றான அன்டிலியா

விலையுயர்ந்த குடியிருப்புகளில் ஒன்றான அன்டிலியா

அன்டிலியா உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த குடியிருப்புகளில் ஒன்றாகும். 4,00,000 சதுர அடி கொண்ட இந்த வீடு தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ளது. அன்டிலியா வீடு 173.13 மீட்டர் உயரம் கொண்டது. மொத்தம் 27 தளங்களை கொண்டது. ஒவ்வொரு தளங்களும், சாதாராண வீட்டின் மூன்று தளங்களுக்கு ஒப்பான உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்ட வடிவமைப்போடு இருக்கும் அன்டிலியா

பிரமாண்ட வடிவமைப்போடு இருக்கும் அன்டிலியா

இந்த பிரம்மாண்டமான இல்லத்தை பராமரிக்க உதவியாக 600 ஊழியர்கள் உள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகள்/ காவலர்கள் மற்றும் பிற உதவியாளர்கள் ஓய்வெடுக்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட அறை உள்ளது. இந்த கட்டிடத்தில் மட்டும் 9 லிஃப்ட்கள் உள்ளது. விருந்தினர்களுக்கும் அம்பானி குடும்ப உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக லிஃப்ட்கள் உள்ளன. குறிப்பாக அம்பானியின் இந்த வீடு ரிக்டர் 8வரையிலான நிலநடுக்கத்தை உறுதியோடு தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Car Found Near Ambani Home With Gelatin Sticks and Addressed Note to Ambani Family
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X