Home
News

வேற லெவல் அம்சத்துடன் ஸ்டைலாய் வெளிவந்த Canon PowerShot V10! இந்த கேமரால என்ன இருக்கு?

Canon PowerShot V10 என்ற புதிய கேமரா சாதனத்தை கேனான் நிறுவனம் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பவர்ஷாட் வி-லாகர்ஸ் மற்றும் கண்டன்ட் கிரியேட்டர்களுக்கு உகந்த சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

கேனான் பவர்ஷாட் வி10 (Canon PowerShot V10) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஜூன் 2023 முதல் இந்தியாவில் வாங்க கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சிறிய கேமராவின் விலை இந்தியாவில் ரூ.40,000-க்குள் உள்ளது. இந்த புதிய கேனான் பவர்ஷாட் வி10 (Canon PowerShot V10) வெளியீட்டின் மூலம், கேனான் காம்பாக்ட் கேமரா பிரிவை புதுப்பித்துள்ளது.

வேற லெவல் அம்சத்துடன் ஸ்டைலாய் வெளிவந்த Canon PowerShot V10!

இந்த புதிய கேனான் பவர்ஷாட் வி10 கேமரா மூன்று மைக்ரோஃபோன்கள், ஒரு ஃபிளிப் டிஸ்ப்ளே, ஒரு உள்ளிழுக்கும் ஸ்டாண்ட், 1-இன்ச் CMOS சென்சார் மற்றும் 4K ரெக்கார்டிங் திறன்களைக் கொண்டுள்ளது. கேனான் பவர்ஷாட் வி10 சாதனம் இந்தியாவில் சரியாக ரூ.39,995 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேனான் ஸ்டோர்ஸ் மற்றும் அனைத்து முன்னணி சில்லறை விற்பனையாளர்களிலும் (ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன்) இல் இந்த கேமரா வாங்க கிடைக்கும்.

இந்த புதிய கேனான் கேமரா பிளாக் மற்றும் சைட் நிறத்தில் வாங்க கிடைக்கிறது. Canon PowerShot V10 என்பது வெறும் 63.4mm x 90.0mm x 34.3mm மற்றும் 211 கிராம் எடையுடைய சிறிய கேமராவாகும். இது பழைய ஃபிளிப் வீடியோ கேமராக்களை நினைவூட்டுகிறது. ஃபிளிப் டிஸ்ப்ளே மற்றும் உள்ளிழுக்கும் ஸ்டாண்ட் உடன் கச்சிதமான சைஸில் உருவாக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேர வீடியோ அல்லது குறுகிய வடிவ உள்ளடக்கத்தை உருவாக்க இது ஏற்ற சாதனமாக வெளிவந்துள்ளது. கேமராவில் 1 இன்ச் வகை சென்சார் உள்ளது. இது நிலையான 19mm சமமான f/2.8 லென்ஸைக் கொண்டுள்ளது. இது மூவி ரெக்கார்டிங்கிற்கு 13.MP பிக்சல்களை எடுத்துக்கொள்கிறது. அதேநேரத்தில், புகைப்படங்களுக்கு 15.1MP பிக்சல்களை எடுத்துக்கொள்கிறது. இந்த கேமராவால் 4K வீடியோக்கள் 30 fps வரை ரெக்கார்டு செய்ய முடியும்.

வேற லெவல் அம்சத்துடன் ஸ்டைலாய் வெளிவந்த Canon PowerShot V10!

இதன் லென்ஸ் தெளிவான வண்ணங்களை குறைந்த இரைச்சல் உடன் கிளிக் செய்கிறது. இந்த கேமரா லென்ஸில் ஃபேஸ் ட்ராக்கிங் ஆட்டோஃபோகஸ், குறிப்பிட்ட ஃப்ரேம் ஆட்டோஃபோகஸ், மூவி டிஜிட்டல் இமேஜ் ஸ்டெபிலைசர் மற்றும் ஒரு மணிநேரம் வரை வீடியோ ரெக்கார்டிங் போன்ற அம்சங்கள் நிரம்பியுள்ளன. இதில் மூன்று பெரிய டையாமீட்டர் கொண்ட மைக்ரோஃபோன் உள்ளது. இது தெளிவான மற்றும் உயர்தர ஆடியோவை நாய்ஸ் கேன்சலேஷன் உடன் வழங்குகிறது.

கேனான் கேமராவில் 14 வண்ண பில்டர்கள் உள்ளது. மூவி ஆட்டோ ND ஃபில்டர் மற்றும் 14 வகையான ஆஸ்பெக்ட் ரேட்ஸியோ மார்க்கர்ஸ் போன்றவை உள்ளது. கூடுதலாக, கேனான் பவர்ஷாட் வி10 கேமரா இணைப்பு பயன்பாட்டின் மூலம் பேஸ்புக் அல்லது யூடியூப்பில் நேரடி லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. கேனான் ஆப்ஸ் மூலம் கேமராவில் உள்ள வீடியோக்கள் மற்றும் ஸ்டில் படங்களை உங்கள் ஸ்மார்ட்போனிற்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.

இணைப்பு வாரியாக, Canon PowerShot V10 ஆனது Wi-Fi (IEEE802.11b/g/n), புளூடூத் LE 4.2, HDMI மைக்ரோ, 3.5mm ஸ்டீரியோ மினி ஜாக் மற்றும் மெமரி கார்ட் ஸ்லாட்டை கொண்டுள்ளது. இது சார்ஜ் செய்வதற்கான USB டைப்-சி போர்ட்டுடன் வருகிறது. இது கேமராவை போர்ட்டபிள் வெப் கேமராவாகப் பயன்படுத்த பிளக்-அண்ட்-ப்ளே USB இணைப்பாகவும் செயல்படுகிறது. வி-லாகர்களுக்கு இந்த சாதனம் சிறந்த தேர்வாக அமைகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Canon PowerShot V10 Launched in India At Rs 39995 Know The Specifications and Other Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X