கேனான் இந்தியா அறிமுகம் செய்துள்ள ஸ்டைலிஷான வயர்லெஸ் லேசர் பிரசண்டர்கள்

By Siva
|

கேனான் நிறுவனம் புகைப்பட கருவிகள் மற்றும் பிசினஸ் உபகரணங்கள் தயாரிப்பதில் முன்னணி நிறுவனம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது கேனான் நிறுவனம் புதியதாக வயர்லெஸ் லேசன் பிரசெண்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த தயாரிப்பும் மற்ற தயாரிப்புகள் போல் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேனான் இந்தியா அறிமுகம் செய்துள்ள ஸ்டைலிஷான வயர்லெஸ் லேசர் பிரசண்டர்கள

ரிமோட் போன்ற கருவியான இந்த வயர்லெஸ் லேசர் பிரசண்டர்களை கேனான் நிறுவனம் நான்கு வித மாடல்களில் வெளியிட்டுள்ளது. அவை PR1000-R, PR500-R, PR100-R and PR10-G ஆகிய மாடல்கள் ஆகும். எளிதில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உருவாகியுள்ல இந்த வயர்லெஸ் பிரசண்டர்கள், பிரசண்டேசஷன் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது.

சிறிய கான்ஃபரன்ஸ் அறை முதல் பெரிய ஆடிட்டோரியம் வரையில் எங்கு பிரசண்டேஷன் செய்தாலும் இந்த லேசர் வயர்லெஸ் பிரசண்டர்கள் பெரும் உதவியாகவும் எளிதில் கையாளும் வகையிலும் இருக்கும் என்று கேனான் வாக்குறுதி அளிக்கின்றது.

சியோமி ரெட்மி4 vs சியோமி ரெட்மி4 பிரைம் vs சியோமி ரெட்மி4ஏ இவற்றுள் சிறந்தது எது?

கேனான் இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஓ கஜூடடா கோபாயாஷி இந்த புதிய அறிமுகம் குறித்து கூறியபோது, 'கடந்த இரண்டு தலைமுறையாக கேனான் இந்தியா நிறுவனம் தனது தயாரிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களை திருப்தி அடைய செய்து வருகிறது.

எங்கள் வாடிக்கையாளர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை காரணமாக இந்த தரமான லேசர் வயர்லெஸ் பிரசண்டர்களையும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் நம்புகிறோம். இந்த உபகரணத்தின் ஆச்சரியத்தையும், சிறந்த அனுபவமும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்' என்று கூறியுள்ளார்.

இந்த உபகரணத்தின் வெற்றியை பொறுத்து மேலும் இதேபோன்ற புதிய முயற்சிகளை கேனான் இந்தியா மேற்கொள்ளும் என்று உறுதி கூறுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

கேனான் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் எடி உடகாவா அவர்கள் கூறும்போது, 'இந்திய சந்தையில் எந்த ஒரு பொருள் அறிமுகமானாலும் அதுகுறித்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. வாடிக்கையாளர்களின் மனம் திருப்தி அடையும் வகையில் தரமான தயாரிப்புகளை கொடுத்து வரும் கேனான் இந்தியாவின் இந்த புதிய தயாரிப்பான லேசர் வயர்லெஸ் பிரசண்டர்களும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கின்றோம்.

கேனான் இந்தியான் உதவி இயக்குனர் சுகுமாறன் அவர்கள் கூறியபோது, 'எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய லேசர் வயர்லெஸ் பிரசண்டர்களை வழங்குவதில் பெருமை அடைகிறோம். டிசைன் மற்றும் சூப்பர் டெக்னிக்கலில் அமைந்துள்ள இந்த தயாரிப்பு நிச்சயம் வாடிக்கையாளர்களை திருப்தி செய்யும் என்பதில் சந்தேகமில்லை' என்று கூறியுள்ளார்

இனி இந்த புதிய லேசர் வயர்லெஸ் பிரசண்டரில் அப்படி என்னதான் இருக்கின்றது என்பதை பார்ப்போம்

என்ன சிறப்பு?

என்ன சிறப்பு?

இந்த லேசர் பிரசண்டர் உபகரணம் பவர்பாயிண்ட் மற்றும் கீநோட் ஆகியவைகளுக்கு இணக்கமானதாக இருக்கும். யூஎஸ்பி பிளக் மற்றும் ரீசிவரி இருந்து வயர்லெஸ் ஸ்லைட் ஆபரேஷனுக்கு இந்த லேசர் பிரசண்டர் உதவும்.

இந்த உபகரணத்திற்கு வேறு எந்தவித செட் அப் பிராசஸ் தேவையில்லை. ஜஸ்ட் பிளக் செய்து பிளே செய்தால் போதும். மேலும் PR1000-R வகை பிரசண்டர் முந்தைய ஸ்லைட் மற்றும் அடுத்த ஸ்லைட் செல்வதற்கும் ஆப்சன் உள்ளது.

இந்த புதிய வசதியும் இதில் உண்டு:

இந்த புதிய வசதியும் இதில் உண்டு:

அருமையான டிசைன் மற்றும் கவர்ச்சியான செயல்பாடுகள் மட்டுமின்றி இந்த லேசர் வயர்லெஸ் பிரசண்டர்களில் சிகப்பு மற்றும் பச்சை நிற லேசர் பாயிண்டர்கள் உள்ளது.

இது பிரசண்டேஷன் செய்யும் போது ஒரு குறிப்பிட்ட சார்ட் அல்லது அட்டவணையை சுட்டிக்காட்ட வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த லேசர் பாயிண்டர்கள் 100 அடி தூரத்தில் இருந்தாலும் வேலை செய்யும் என்பதும் இதன் தனிச்சிறப்பு

PR100-R and PR500-R என்ற இரண்டு மாடல்களில் மற்ற மாடல்களை விட இருமடங்கு லேசர் பாயிண்டர்களை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேரமும் காண்பிக்கும்:

நேரமும் காண்பிக்கும்:

PR10-G மற்றும் PR-100R ஆகிய மாடல்களில் எல்சிடி ஸ்மார்ட் டைமர் இருப்பதால் பிரசண்டேஷன் செய்பவர் எவ்வளவு நேரம் பிரசண்டேஷன் செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதில் உள்ள டைமர் டிஸ்ப்ளேவில் நேரம் காண்பிக்கும். மேலும் ஒரு குறிப்பிட்ட நேரம் கடந்தவுடன் பிரசண்டரை அலர்ட் செய்ய இதில் வைப்ரேட்டிங் வசதியும் உள்ளது என்பது இதில் உள்ள ஒரு கூடுதல் சிறப்பு ஆகும்

எங்கு கிடைக்கும்? எவ்வளவு விலை?

எங்கு கிடைக்கும்? எவ்வளவு விலை?

நான்கு மாடல்களான இந்த லேசர் பிரசண்டர் விலை என்னவென்று தற்போது பார்ப்போம். PR1000-R, PR500-R, PR100-R மற்றும் PR 10-G ஆகிய மாடல்கள் இந்திய ரூபாயான 3995, 4495, 5,695 மற்றும் 6,995 ஆகிய விலையில் அனைத்து கேனான் ஷோரூம்களிலும் கிடைக்கும். மேலும் இந்த நான்கு வகை மாடல்களுக்கும் ஒரு வருட வாரண்டி இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
The new laser presenters PR1000-R, PR500-R, PR100-R and PR 10-G are priced at INR 3995, 4495, 5,695 and 6,995 respectively.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X