விண்டோஸ் போனில் வெளியானது கேன்டி க்ரஷ் சாகா

Posted By:

ஆன்டிராய்டு, ஐஓஎஸ் வரவுகளை தொடர்ந்து விண்டோஸ் போன்களுக்கும் கேன்டி க்ரஷ் சாகா வெளியிடப்பட்டுள்ளது. உலகில் அதிகம் பேர் விளையாடும் விளையாட்டாக இருக்கும் கேன்டி க்ரஷ் சாகா பேஸ்புக்கில் இரண்டறை ஆண்டுகளாக இருந்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது. விண்டோஸ் 8.1 மூலம் இயங்கும் மைக்ரோசாப்ட் போன்களுக்கு இலவசமாக கிடைக்கின்றது கேன்டி க்ரஷ் சாகா.

விண்டோஸ் போனில் வெளியானது கேன்டி க்ரஷ் சாகா

வழக்கம் போல டவுன்லோடு செய்து விளையாடும் வரை எந்த பணமும் செலுத்த தேவையில்லை, விளையட ஆரம்பித்து அதில் கூடுதல் சலுகைகளை பெற பணம் செலுத்த வேண்டி இருக்கும். விண்டோஸ் போனில் பணம் செலுத்த செட்டிங்ஸ் மெனுவில் இருக்கும் வேலட் பின் அம்சம் பயன்படுத்தலாம்.

விண்டோஸ் போனில் வெளியானது கேன்டி க்ரஷ் சாகா

கேன்டி க்ரஷ் விளையாட்டின் நோக்கமானாது அனைத்து கேன்டிகளையும் காலியாக்குவது தான், ஒரே மாதிரி இருக்கும் இரு கேன்டிகளுடன் மூன்றாவது கேன்டியை இனைத்தால் மூன்று கேன்டி மறைந்து விடும். விண்டோஸ் போன் கேன்டி க்ரஷ் சாகாவில் மொத்தம் 50 மெயின் லெவல் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் போன் பயன்படத்துவோர் விண்டோஸ்போன் ஸ்டோர் சென்று கேன்டி க்ரஷ் சாகாவை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

English summary
Candy Crush Saga has all set for Windows Phone. One of the world’s most played games right now, Candy Crush Saga has landed on the Windows Phone Store for free.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot