Home
News

ஆதார் விபரத்தை வைத்து உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா? உண்மை என்ன? இதோ!

ஆதார் அடையாள அட்டை விபரங்களை பல இடங்களில் நாம் ஜெராக்ஸ் எடுக்கிறோம். அடையாள விபரங்களுக்காக நம்முடைய ஆதார் விபரங்களை பல இடங்களில் பகிர்ந்துகொள்கிறோம். 12-இலக்க ஆதார் எண்ணை வைத்து, வங்கி-கணக்கை ஹேக் செய்ய முடியுமா? முடியாதா? என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆல் வழங்கப்பட முக்கிய ஆவணம் தான் ஆதார் என்பதாகும். இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த அடையாள அட்டை 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண்ணுடன் வருகிறது. உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்புகளில் ஆதாரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆதார் அணைத்து இந்திய குடிமக்களுக்கும் மிக முக்கியமான ஆவணமாகும்.

ஆதார் விபரத்தை வைத்து உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

வங்கி, சிம் கார்டு, அலுவலக தொடர்பான சான்று என்று பல இடங்களில் முக்கிய ஆவணமாக செயல்படுகிறது. ஏன் ஆதார் மிக முக்கியமான அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது? காரணம், இது மக்களின் கைரேகை விபரம், கருவிழி ஸ்கேன் மற்றும் தனிப்பட்ட பயனரின் புகைப்படம் என்று பல விபரங்களை உள்ளடக்கியுள்ளது. மக்களின் பயோமெட்ரிக் தகவல்களை இந்த ஆதார் அட்டை கொண்டுள்ளது.

வங்கி கணக்கு தொடங்க, அரசாங்கத் திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கு விண்ணப்பிக்க மற்றும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய உள்ளிட்ட பல விஷயங்களுக்கு ஆதார் எண்ணை மக்கள் இப்போது பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், மக்கள் மத்தியில் ஒரு பெரும் அச்சம் வேகமாக பரவி வருகிறது. முன்பின் தெரியாத மூன்றாம் நபர்களிடம் ஆதார் எண் விபரங்கள் கிடைத்தால், அதனுடன் தொடர்புடைய வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

வாங்கி கணக்கில் இருக்கும் பணத்தை ஆதார் விபரத்தை வைத்து திருட முடியுமா? என்ற சந்தேகமும், கவலையும் நம்மில் பலருக்கு இருக்கிறது. UIDAI இன் அதிகாரப்பூர்வ தகவல்படி, உங்கள் ஆதார் நம்பரை தெரிந்த கொண்ட ஒருவரால், உங்களது வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியாது என்பதே உண்மையாகும். ஆதார் எண் விபரங்களை வைத்து, வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆதார் விபரத்தை வைத்து உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

இன்னும் எளிமையாக புரிய வேண்டுமென்றால், உங்கள் ஏடிஎம் கார்டு நம்பரை மட்டும் வைத்துக்கொண்டு, யாராலும் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் எடுக்க முடியாது. அதற்கு PIN நம்பர், OTP போன்ற விபரங்களை நாம் உள்ளிட்ட வேண்டும். அதேபோல தான், உங்கள் ஆதார் எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு, மூன்றாம் நபரால் உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியாது என்று UIDAI தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

உண்மையை இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால், இதுவரை, ஆதார் காரணமாக ஒரு நிதி இழப்பு கூட ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் எந்த பயமும் இன்றி, பாதுகாப்பாக இருக்கலாம் என்பதே UIDAI கூறும் கருத்தாகும். என்ன தான் உங்கள் ஆதார் விபரங்கள், வங்கி கணக்கு, PAN கணக்கு என்று பல இடங்களில் இணைக்கப்பட்டிருந்தாலும், ஆதார் தகவல்களை மட்டும் வைத்து எந்த தகவலையும் யாரும் திருட முடியாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Can your bank account be hacked with Aadhaar details What is the truth Here it is
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X