Just In
- 5 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 6 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 6 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 7 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- News
அந்த வீட்டுல என்னமோ நடக்குது.. ரெய்டில் காத்திருந்த ஷாக்.. வசமாக சிக்கிய அதிமுக மகளிரணி ‘புள்ளி’!
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
நிலவில் நிலம் வாங்க முடியுமா? ஒரு ஏக்கர் என்ன விலை? இது சட்டப்பூர்வமானதா? - தெளிவான விளக்கம்
சந்திரனில் நிலம் வாங்க முடியுமா? என்ற கேள்வி இப்பொழுது பல இந்தியர்களின் மனதில் எழுந்துள்ளது. சந்திரனில் நிலம் எப்படி வாங்குவது? நிலவில் நிலம் வாங்க யாரை அணுகலாம்? இதற்கான சாத்தியம் இருக்கிறதா? என்று பல கேள்விகள் கூகிள் சர்ச் தளத்தில் சமீபத்தில் சர்ச் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒருவகையில் முக்கிய காரணம் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தான்.

நிலவில் நிலம் வாங்க முடியுமா?
சுஷாந்த் சிங் ராஜ்புத் நிலவில் நிலம் வைத்திருக்கிறார் என்ற செய்திக்குப் பின்னர், பலரும் தங்களுக்குத் தாங்களே நிலவில் நிலம் வாங்க விரும்புகிறார்கள். ஆனால், உண்மையில் இது சாத்தியமா? நிலவில் நம்மளால் நிலம் வாங்க முடியுமா? நிலவில் ஒரு ஏக்கர் நிலம் இப்பொழுது என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது? இது சட்டப்பூர்வமானதா? நிலவில் நிலம் வாங்க யாரை அணுகலாம்? என்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் இந்த பதிவில் உள்ளது, இறுதிவரை படியுங்கள்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு நிலவில் நிலம் உள்ளதா?
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் திடீர் மறைவு நாட்டை பெரும் பேச்சில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மரணம் குறித்துப் பல கதைகள் வெளிவருகையில், அவர் ஒரு இயற்கை மேதை என்றும் குவாண்டம் பிசிக்ஸ், ஸ்டோயிசம், அஸ்ட்ரோலஜி மற்றும் பலவற்றைப் பற்றிய அறிவைக் கொண்ட புத்திசாலி என்றும் பல செய்திகள் வெளியாகியது. அண்மையில் வந்த ஒரு செய்தியில் அவருக்கு நிலவில் நிலம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

சுஷாந்த் சிங் நிலவில் எப்படி நிலம் வாங்கினார்?
இந்தியர் ஒருவர் நிலவில் நிலம் வாங்கிய செய்திக்குப் பின்னர், சந்திரனில் நிலம் வாங்க முடியுமா? என்பது தொடர்பான தேடல் கூகிளில் அதிகரித்துள்ளது. ஒரு தனி நபர் நிலவில் நிலம் வாங்க முடியுமா? இதற்குச் சட்டம் அனுமதிக்குமா? இது சாத்தியமானதா என்று விரிவாகப் பார்க்கலாம். முதலில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நிலவில் எப்படி நிலம் வாங்கினார் என்று தெரிந்துகொள்ளுங்கள். ஆன்லைன் வலைத்தளம் மூலம் தான் சுஷாந்த் சிங் நிலவில் நிலம் வாங்கியிருக்கிறார்.

The Lunar Registry வலைத்தளம்
நிலவில் உள்ள நிலப்பரப்பை 15 முக்கிய தளங்களாகப் பிரித்து இந்த வலைத்தளம் விற்பனை செய்து வருகிறது. 'The Lunar Registry' என்று அழைக்கப்படும் இந்த வலைத்தளத்தின் மூலம் தான் சுஷாந்த் சிங் நிலவு நிலத்தை வாங்கியுள்ளார்.

டார்க் சைடு ஆஃப் தி மூன்னில் நிலம் வாங்கிய சுஷாந்த்
நிலவில் பிரிக்கப்பட்டுள்ள 15 தளங்களில் மொஸ்கோவியன்ஸ் (MOSCOVIENSE) என்று அழைக்கப்படும் நிலவின் இருண்ட பகுதியில் தான் சுஷாந்த் சிங் நிலம் வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதி 'டார்க் சைடு ஆஃப் தி மூன்' (Dark Side Of The Moon) என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு ஏக்கர் நிலவு நிலம் என்ன விலை?
இந்த தளத்தில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை 32.95 டாலர்களாம், அதாவது இந்திய மதிப்பின்படி பார்த்தால் ஒரு ஏக்கர் நிலவு நிலத்தின் விலை வெறும் ரூ.2509.72 மட்டுமே. இந்த MOSCOVIENSE தளத்தில் ஒரு தனி நபர் ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக 10 ஏக்கர் நிலம் மட்டுமே வாங்க முடியும். அதற்கும் மேல் அதிகப்படியான இடத்தை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் வலைத்தளத்தின் நிறுவனத்தைத் தான் அணுக வேண்டும் என்று வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவு நிலத்தின் வரைபடம் மற்றும் பத்திரம்
நீங்கள் வாங்கும் நிலவு நிலத்தின் வரைபடம் மற்றும் பத்திரம் உங்களுக்கு ஆதாரமாக வேண்டும் என்றால், அதை இந்த நிறுவனம் உங்களுக்கு சிடி வடிவில் கொரியர் செய்கிறது. இந்த ஆதர சிடி உங்களுக்கு வேண்டுமென்றால் அதற்கென்று தனியாக நீங்கள் 8.95 டாலர் செலுத்திட வேண்டும். இந்த தகவலைக் கேட்டதும் உங்களுக்கும் நிலவில் நிலம் வாங்கலாம் என்ற எண்ணம் உருவாகியிருக்கும். அவசரப்பட வேண்டாம், இறுதி வரை படியுங்கள்.

நிலவில் நிலம் வாங்குவது ஒரு கவலைக்குரிய விஷயம்
நிலவில் நிலம் இந்த வழியில் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொண்டோம். இது சட்டப்பூர்வமானதா என்ற கேள்விக்கான பதிலை இப்பொழுது பார்க்கலாம். சந்திரனில் ஒரு நிலத்தை சொந்தமாக வைத்திருப்பது என்பது ஒரு கவலைக்குரிய விஷயமாகும், ஏனென்றால் நிலவின் நிலத்தை யாரும் விற்பதோ அல்லது வாங்குவதோ சட்டவிரோதமான செயலாகக் கருதப்படுகிறது. இதற்கென்று ஒரு தனி சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'வெளி விண்வெளி ஒப்பந்தம்' என்ன சொல்கிறது?
நிலவு நிலத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாதென்று கூறி, 1967 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகிய மூன்று பெரிய நாடுகள் ஒன்று சேர்ந்து 'வெளி விண்வெளி ஒப்பந்தம்' என்று அழைக்கப்படும் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தைக் கொண்டு வந்ததுள்ளது.

109 நாடுகள் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தத்தின் படி அனைத்து உலக நாடுகளும் இந்த சட்டத்தைப் பின்பற்றப்பட வேண்டும் என்பது கட்டாயம். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 109 நாடுகள் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சர்வதேச ஒப்பந்தம் அடிப்படையின் கீழ் கூறப்படுவது என்னவென்றால், அனைத்து வகையான விண்வெளி ஆய்வுகளும் (சந்திர ஆய்வுகளை உள்ளடக்கியது) அனைத்தும் மனிதக்குலத்தின் நலனுக்காக இருக்கும் என்று ஒப்பந்தம் கூறுகிறது.

சந்திர நிலத்தை வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியாது
எந்தவொரு தனிநபரும் சந்திர நிலத்தை வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியாது, அதைத் தனது என்று சொந்தமாக அழைக்கவும் முடியாது என்று ஒப்பந்தத்தில் தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் பொருள், வெளி விண்வெளி ஒப்பந்தத்தின்படி சந்திர நிலப் பதிவு மற்றும் சந்திரனின் தனியார் உடைமைக்காக நிலம் வாங்குவது சாத்தியமற்றது மற்றும் சட்டவிரோதமானது.

இது உங்களுக்குச் சொந்தமில்லை
இருப்பினும் கூட, The Lunar Registry போன்ற ஏஜென்சிகள் இன்னும் நிலவு நிலங்களை ஆன்லைன் மூலம் ஏமாற்றி விற்பனை செய்து வருகிறது. ஆன்லைன் மூலம் உங்கள் பெயரில் நீங்கள் நிலவில் நிலத்தை வாங்கினாலும் அது உங்களுக்குச் சொந்தமில்லை என்பதே உண்மை. அதைவிட நிதர்சனமான உண்மை என்னவென்றால், நீங்கள் ஒரு சட்டவிரோதமான காரியத்தில் ஈடுபடுகிறீர்கள் என்பது தான்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470