Mobile போனை சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்டில் வைக்கலாமா? இது உண்மையாவே ஆபத்தானதா?
சமீபத்தில் வெளியாகி மக்களை அதிகமாக கவர்ந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்று "லவ் டுடே". என்னதான் அந்த திரைப்படம் முழுவதுமே இன்றைய இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் இருந்தாலும், போனை வைத்தே கதை நகர்கிறது.
பெரும்பாலானோர் வாழ்க்கையை ஒத்து இருக்கும் ஒரு திரைக்காட்சி என்றால் அது அந்த கதாநாயகன் சதா செல்போனை பயன்படுத்துவதற்காக அவரது தாயார் வசைபாடுவது தான். சட்டை பாக்கெட்டில் வைத்தால் இதயம் பலவீனம் ஆகும், பேன்ட் (Pant) பாக்கெட்டில் வைத்தால் குழந்தை பிறக்காது என்று ராதிகா கூறும்போது நாம் அனைவரும் கைதட்டி சிரித்தாலும், நம் அனைவருக்குள்ளும் இந்த பயம் எப்போதுமே இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

மனிதனின் மூன்றாவது கை போல ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டதா?
இன்றைய சூழ்நிலையில் செல்போன் என்பது மனிதனுக்கு மூன்றாவது கை போல ஆகிவிட்டது. கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும், அறிவை வளர்த்துக்கொள்வதிலிருந்து, வியாபாரம் செய்வது, பணம் செலுத்துவது, குடும்பத்துடன் தொடர்பில் இருப்பது என்று மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும், சந்தோஷமாகக் கழிக்கவும் தேவையான அனைத்தும் கையில் இருப்பது போல தான்.
ஸ்மார்ட் போனின் மூலம் எதிர்மறை விளைவுகளும் அதிகம் என்றாலும் கூட அது எந்த தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது அதை பயன்படுத்துபவரின் கையில் தான் உள்ளது. தேவைக்கான பயன்பாடு என்பதை தாண்டி இப்போது ஸ்மார்ட் போன் ஒருவரின் அத்தியாவசிய தேவை என்ற அளவிற்கு மாறிவிட்டது. வேலைக்கு ஒன்று, சொந்த பயன்பாட்டிற்கு ஒன்று என்று இரண்டு மூன்று ஸ்மார்ட் போனையும் பலர் இப்போது பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

Mobile மூலம் நமது உடலிற்கு கேடு உருவாகுமா? இது உண்மை தானா?
இதில் கசப்பான உண்மை என்னவென்றால், இப்படி ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோருக்கு அதனால் உடலில் ஏற்படும் கேடு என்ன என்பது நன்றாக தெரியும். இருப்பினும், மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல பழக்கம் என்பதை தாண்டி இப்போது ஸ்மார்ட் போன் அனைவருக்கும் ஒரு உறுப்பு போல ஆகிவிட்டது.
அப்படி செல்போனை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பவர் அதனை தங்களது சட்டை பாக்கெட் அல்லது பேன்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்துகின்றனர். இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் பெண்களின் உடைகளிலும் பாக்கெட்டுகள் வந்து விட்டதால் இந்த பாதிப்பிற்கு அவர்களும் விதிவிலக்கல்ல. அதுவும் நம் ஊரில் இருக்கும் சில பெண்கள் ஸ்மார்ட் போனை தங்களது உள்ளாடைக்குள் கூட வைக்கின்றனர்.

ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு, இருதய கோளாறு, மார்பக புற்றுநோய் உருவாகுமா?
இப்படி உடம்புடன் நெருக்கத்தில் இருக்குமாறு ஸ்மார்ட் போனை வைக்கும் போது, அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சானது அதிக வீரியத்துடன் உடலில் இருக்கும் திசுக்களையும் உயிரணுக்களையும் பாதிக்கும். ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு, இருதய நோய் போன்றவற்றையும், பெண்களுக்கு மார்பகம் மற்றும் இதர பாகங்களில் புற்றுநோய் போன்றவற்றையும் விளைவிக்கும்.
சிலர் செல்போன் தானே பக்கத்தில் இருக்கக் கூடாது என்று அதனை ப்ளூடூத்தில் இணைத்து பயன்படுத்துவர். ஆனால் ஸ்மார்ட் போனை ப்ளூடூத்துடன் இணைப்பதும் ஒரு வகையான கதிர்வீச்சுதான் என்பதை அவர்கள் பல சமயங்களில் யோசிக்க மறந்துவிடுகின்றனர். மேலே கூறப்பட்டது எதுவும் இதுவரை யாருக்கும் தெரியாத தகவல் என்று இல்லை.
ஸ்மார்ட் போன் பயன்பாடு ஆரம்பித்த காலத்தில் இருந்து பெற்றோர், உறவினர் அறிவுரை, மருத்துவர் ஆலோசனை, இண்டர்நெட், செய்தித்தாள் என்று பல விதத்தில் இந்த அபாயத்தைப் பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். ஆனாலும் நாம் தொடர்ந்து இதனைச் செய்வதற்கான காரணம், இதற்கான தீர்வு என்ன என்பதை யாருமே தெரிவிக்கவில்லை என்பது தான்.
சிறிய பொருட்களை கையில் சுமந்து சென்ற கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான் பாக்கெட்டுகள் உருவாக்கப்பட்டது. இப்படி எந்த பாக்கெட்டிலும் வைக்கக்கூடாது என்றால் அப்போ எங்கே வைக்க வேண்டும் என்று கூற வேண்டும் தானே? அதற்காகத் தான் இந்த பதிவு.


Click it and Unblock the Notifications








