Home
News

AC மற்றும் சீலிங் ஃபேனை ஒன்றாக பயன்படுத்தலாமா? இதனால் என்ன நன்மை மற்றும் தீமை? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் இப்பொது குறைந்தது 1 டன் ஏர்கண்டிஷனர் (AC) சாதனத்தையாவது வாங்கி மாற்றிவிடுகிறார்கள். இன்னும் சிலர் கடனை வாங்கியாவது AC வாங்கி விட வேண்டுமென்று புதிய ஏசி சாதனத்தை வாங்க முயல்கிறார்கள்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இப்போது AC ஒரு அவசியமான பொருளாக மாறிவிட்டது. வீட்டில் ஏதேனும் ஒரு அறையில் AC இருப்பது அந்த அறையையே எதோ சொர்கம் போல உணர செய்வதாக AC பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள். காரணாம், வெளியே வெயில் நம்மை சுட்டு வாட்டி எடுக்கிறது. ஏசி இப்போது பெரும்பாலான வீடுகளுக்குள் புகுந்துவிட்டது.

AC மற்றும் சீலிங் ஃபேனை ஒன்றாக பயன்படுத்தலாமா? இதனால் என்ன நன்மை தீமை?

ஏசியையும் சீலிங் ஃபேனையும் ஒன்றாக பயன்படுத்தலாமா? (Can AC and ceiling fan be used together):

இருப்பினும் இன்னும் பல மக்களுக்கு ஏசியை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதில் ஒரு சில குழப்பங்கள் (doubts in using AC properly) இருக்கிறது. அப்படி எல்லோருக்கும் இருக்கும் ஒரு பொதுவாக குழப்பம் தான், AC பயன்படுத்தும் பொழுது அந்த அறையில் உள்ள சீலிங் ஃபேனை (Ceiling fan) பயன்படுத்தலாமா? அல்லது பயன்படுத்தக் கூடாதா என்பது எல்லோருக்கும் இருக்கும் ஒரு குழப்பமாக இருக்கிறது.

பெரும்பாலானோர், ஏசியையும் சீலிங் ஃபேனையும் ஒன்றாக பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? அப்படி பயன்படுத்தினால், ஏசி வீணாகி பழுதாகிவிடுமா (AC repair)? அல்லது இந்த கருத்து உண்மையிலேயே ஆபத்தானது தானா? இதே குழப்பம் உங்களுக்கும் இருக்கிறது என்றால் இந்த பதிவு உங்களுக்கானது.

ஒவ்வொரு AC பயனாளர்களும் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை இது. ஏசி பயன்படுத்தும் பொழுது சீலிங் ஃபேனை பயன்படுத்த கூடாதா? வாருங்கள் உண்மை என்ன என்பதை பார்க்கலாம். இரவு நேரங்களில் AC மாட்டிய அறையில் ஏசி (AC) மற்றும் சீலிங் ஃபேன் (Ceiling Fan) இரண்டையும் பயன்படுத்துவதில் பெரிய தவறொன்றும் இல்லை. ஆனால், இதனால் சில நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இரவு நேரங்களில் ஏசி மற்றும் சீலிங் ஃபேன் இரண்டையும் ஒன்றாக பயன்படுத்துவது ஒரு வகையில் சிறந்த குளிர்ச்சியை (cooling) அனுபவிக்க உதவும் என்று டெக் வல்லுநர்கள் கூறுகின்றனர். முதலில் இதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம். ஏசி மற்றும் சீலிங் ஃபேனை ஒன்றாக பயன்படுத்தும் பொழுது, அந்த அறையில் உள்ள வெப்ப காற்று வேகமாக வெளியேறுகிறது.

AC மற்றும் சீலிங் ஃபேனை ஒன்றாக பயன்படுத்தலாமா? இதனால் என்ன நன்மை தீமை?

AC + சீலிங் ஃபேன்னால் ஏற்படும் நன்மை என்ன? மற்றும் தீமை என்ன?

ஃபேனில் இருந்து வரும் காற்று, ஏசியில் இருந்து வரும் காற்றை விட வேகமாக இருப்பதனால், இது அறையில் உள்ள வெப்ப காற்றை வேகமாக வெளியேற்ற உதவுகிறது. இதனால், உங்கள் அறை உடனே குளிர்ச்சியடைகிறது. மற்றொரு நன்மை என்ன வென்றால், ஏசி பயன்படுத்தும் பொழுது சீலிங் ஃபேனை பயன்படுத்துவதனால், ஏசியில் இருந்து வரும் குளிர்ந்த காற்றை அறையின் மூலைமுடுக்கு வரை இது வேகமாக பரப்புகிறது.

இதனால், ஏசியின் வெப்பநிலையை நீங்கள் மிகவும் குறைந்த வெப்பத்தில் வைக்க தேவையில்லை. அதாவது 18 அலல்து 20 டிகிரி வெப்பம் வரை உங்கள் ஏசியை பயன்படுத்த வேண்டியதில்லை. நார்மலாக 24 அல்லது 26 இல் கூட உங்கள் AC-யை இயக்கி, உங்கள் அறையை வேகமாக குளிர்விக்கலாம். இதனால், மினசார கட்டணம் (electricity bill) வெகுவாக குறைகிறது.

தெரியாதவர்களுக்கு, AC-யை 18 அல்லது 20 என்ற குறைந்த குளிர் வெப்பத்தில் பயன்படுத்தும் பொழுது அதிக மின்சார தேவை தேவைப்படுகிறது. இதனால், உங்கள் மிசார கட்டணம் அதிகரிக்கிறது. 24 டிகிரியில் வைக்கும் பொழுது மிதமான மின்சாரமே தேவைப்படுகிறது. இறுதியாக, சீலிங் ஃபேனுடன் ஏசி பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய சிக்கலாக தூசி (dust) அடைப்பு இருக்கிறது.

உங்கள் அறையில் உள்ள தூசி மற்றும் சிறிய குப்பைகள் ஃபேனின் வேகத்தில் மேலே பறந்து, அவை ஏசி பில்டர்களில் (AC filters) படிந்துகொள்கின்றன. நீங்கள் ஏசியை சர்வீஸ் செய்யும் பொழுது, அழுக்கு படிந்து பில்டர்களில் அடைப்பு இருப்பதை பார்க்க முடியும். இந்த தூசி அடைப்பு ஏசி குளிர்ந்த காற்றை வழங்குவதை தாமதப்படுத்தும். "மிகவும்" சுத்தமான அறையில் சீலிங் ஃபேனுடன் ஏசி பயன்படுத்துவது பாதுகாப்பானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Can AC and ceiling fan be used together What are the pros and cons of this Must know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X