5G போன் கதிர்வீச்சால் கேன்சர் ஏற்படுமா? திடுக்கிட வைத்த ஆராய்ச்சியின் முடிவுகள்.!

|

செல்போன் (Cell phone) என்ற சாதனம் இப்போது மனிதர்களுடன் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. எல்லோரிடமும் இப்போது ஒரு செல்போன் இருக்கிறது. என்ன தான் செல்போன்களால் பல நன்மைகள் இருந்தாலும், இதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் (cell phone radiation) கேன்சர் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று பல காலமாகக் கூறப்பட்டு வருகிறது. இது உண்மை தானா? செல்போன் மூலம் கேன்சர் (cancer risk) ஏற்பட வாய்ப்புள்ளதா?

போனை எவன் தான் கண்டுபிடிச்சானோ.!

போனை எவன் தான் கண்டுபிடிச்சானோ.!

"இந்த போனை எவன் தான் கண்டுபிடிச்சானோ.. எப்போ பார்த்தாலும் அதையே நோண்டிட்டு இருக்கீங்க"; போன்-அ காதுக்கிட்ட வச்சு பேசாதனு சொன்ன கேட்க மாட்டியா.. மூளை வெடிக்க போகுது பாரு" என்று பல வீடுகளில் பல-பல விதங்களில் செல்போன் பயனர்கள் திட்டு வாங்குவதை நம்மால் கேட்க முடிகிறது. ஏன் அக்கம் பக்கம் வீடுகளில் கூட இதே நிலை தான்.

காதுக்கு அருகில் செல் போனை வைத்து பேசுவது தவறா? மோசமானதா?

காதுக்கு அருகில் செல் போனை வைத்து பேசுவது தவறா? மோசமானதா?

இருப்பினும், நம்மால் செல்போனை காதிற்கு அருகாமையில் வைக்காமல் பயன்படுத்த முடிவதில்லை. காதிற்கு மிக அருகாமையில் போனை வைத்து பயன்படுத்தக் கூடாது, இது மூளைக்கு ஆபத்தான கதிர்வீச்சை (cell phone radiation) வெளிப்படுத்துகிறது என்று மக்களால் நீண்ட காலமாக நம்பப்பட்டு வருகிறது. அதிகமாக செல்போன் யூஸ் செய்தால் கேன்சர் வரும் என்றும் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த வீட்டிற்கு ஒட்டுமொத்த வீட்டிற்கு "1" Jio பிளான்.! 17 OTT பலன் இலவசம்.! 3TB டேட்டாவுடன் இன்னும் ஏராளம்.!

செல்போன் கதிர்வீச்சினால் மனிதர்களுக்கு ஆபத்து இருக்கிறதா இல்லையா?

செல்போன் கதிர்வீச்சினால் மனிதர்களுக்கு ஆபத்து இருக்கிறதா இல்லையா?

உண்மையில், இந்த தகவல் உலகம் முழுக்க நம்பப்படுகிறது. ஆனால், இது வரை சரியான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாமல் இருந்து வந்தது. நீண்ட காலத்திற்குப் பின்பு இதன் பின்னணியில் இருக்கும் உண்மையை இப்போது ஒரு விஞ்ஞானி குழு கட்டவிழ்த்துள்ளது. செல்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சினால் மனிதர்களுக்கு ஆபத்து இருக்கிறதா இல்லையா?

செல்போன்களால் கேன்சர் ஏற்படும் வாய்ப்புகள் உண்மையிலேயே இருக்கிறதா? இல்லையா?

செல்போன்களால் கேன்சர் ஏற்படும் வாய்ப்புகள் உண்மையிலேயே இருக்கிறதா? இல்லையா?

சமீபத்தில் ஒரு விஞ்ஞானிகள் குழு, செல்போன் கதிர்வீச்சு மூலம் மனிதனுக்கு கேன்சர் ஏற்படும் வாய்ப்புகள் உண்மையிலேயே இருக்கிறதா? இல்லையா? என்பதை முழுமையாக ஆராய்ச்சி செய்து, சோதனை செய்து, முடிவுகளை வெளியிட்டுள்ளது. இவர்கள் மேற்கொண்ட 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி கதிர்வீச்சின் தாக்கம் குறித்த ஆராய்ச்சியின் முடிவுகள் இப்போது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

5ஜி போன்களால் அதிக பாதிப்பு ஏற்படுகிறதா.! உண்மையாவா.!

5ஜி போன்களால் அதிக பாதிப்பு ஏற்படுகிறதா.! உண்மையாவா.!

குறிப்பாக, 5ஜி கதிர்வீச்சினால் (5g signal radiation) மக்களுக்கு அதிக பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றியும் இந்த ஆராய்ச்சியில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 5ஜி போன்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சினால் கேன்சர் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதா இல்லையா என்பதையும் இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. நீண்ட காலமாக நீடித்து வந்த சந்தேகத்திற்கான இப்போது விடை கிடைத்துவிட்டது.

சிறிய விழுக்காடு பாசிட்டிவ் சைன் இருந்தால் கூட நிலைமை மோசமாகிவிடும்.!

சிறிய விழுக்காடு பாசிட்டிவ் சைன் இருந்தால் கூட நிலைமை மோசமாகிவிடும்.!

இப்போது எல்லோரிடமும் செல்போன் இருப்பதனால், கேன்சர் உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டது. இதற்கான முக்கிய காரணம், செல்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் தான். உண்மையிலேயே, செல்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சினால், கேன்சர் ஏற்படுவதற்கு ஒரு சிறிய விழுக்காடு பாசிட்டிவ் சைன் தெரிந்தால் கூட அது மிகவும் ஆபத்தானது தான்.

யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!

மக்களின் நிலையை கருத்தில் கொண்ட அமெரிக்காவின் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட்

மக்களின் நிலையை கருத்தில் கொண்ட அமெரிக்காவின் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட்

அமெரிக்காவின் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் (National Cancer Institute) மக்களின் நிலையை கருத்தில் கொண்டு இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது. செல்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் ரேடியோ அலைவரிசைகளாக (Radio frequency) இருந்தாலும் கூட, ஒரு சிறிய அளவு பாதிப்பை இது ஏற்படுத்தினால் கூட பெரும் ஆபத்தாகத் தான் பார்க்கப்படுகிறது என்று நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் கூறியுள்ளது.

24 மணி நேரமும் மொபைல் உடன் இணைந்திருக்கிறோம்.!

24 மணி நேரமும் மொபைல் உடன் இணைந்திருக்கிறோம்.!

காரணம், நாம் அனைவரும் 24 மணி நேரமும் மொபைல் உடன் இணைந்திருக்கும் நிலை உருவாகிவிட்டது. சிறிய அளவு பாதிப்பை, இந்த கதிர்வீச்சு ஏற்படுத்தும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படியானால், உங்கள் வாழ்நாள் முழுக்க இது எவ்வளவு அதிகமான பாதிப்பை சைலெண்டாக உருவாக்கிவிடும் என்று யோசித்துப் பாருங்கள். இந்த கவலையால் தான், இந்த ஆராய்ச்சி இப்போது நடத்தப்பட்டது.

மூளை கட்டி, மத்திய நரம்பு மண்டலம் பாதிப்பு ஏற்படுமா?

மூளை கட்டி, மத்திய நரம்பு மண்டலம் பாதிப்பு ஏற்படுமா?

செல்போன்களின் கதிர்வீச்சு விளைவாக, புற்றுநோயின் தாக்கத்தில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டாலும் அது பெரும் கவலையை ஏற்படுத்தும். செல்போன் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகளாக மூளை கட்டி, மத்திய நரம்பு மண்டலம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கட்டிகள் போன்றவற்றை மக்கள் கவலைக்குரிய விஷயங்களாக பொதுவாக நம்புகிறார்கள்.

மனித உடலில் எப்போது இந்த ரேடியேஷன்கள் பாதிப்பை உருவாக்கும்?

மனித உடலில் எப்போது இந்த ரேடியேஷன்கள் பாதிப்பை உருவாக்கும்?

செல்போன்களை தலைக்கு அருகில் வைப்பதனால் தான் இது நிகழ்கிறது என்று நம்பப்பட்டு வருகிறது. மற்றொரு புறம், மூளைக் கட்டிகள் அயனைசிங் கதிர்வீச்சின் (ionising radiation) வெளிப்பாட்டுடன் தான் உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்த வகை கதிர்வீச்சு தான் மனித உடலில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று கூறப்படுகிறது.

ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!

2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்கு ரேடியேஷன் மோசமானதா? இல்லையா?

2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்கு ரேடியேஷன் மோசமானதா? இல்லையா?

இயற்கையாகவே, செல்போன்கள் மனித ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்குமா என்பதைத் தீர்மானிக்கப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செல்போன்கள் மின்காந்த அலைக்கற்றையின் கதிரியக்க அதிர்வெண் வரம்பில் கதிர்வீச்சை வெளியிடுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளும் அடங்கும்.

ஐந்தாம் தலைமுறை (5G) செல்போன்களால் கேன்சர் பாதிப்பு உண்டாகுமா?

ஐந்தாம் தலைமுறை (5G) செல்போன்களால் கேன்சர் பாதிப்பு உண்டாகுமா?

0.7 மற்றும் 2.7 GHz இடையேயான அதிர்வெண் வரம்பானது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தலைமுறை (2G, 3G மற்றும் 4G) நெட்வொர்க்குகளில் செயல்படும் செல்போன்களால் பயன்படுத்தப்படுகிறது. மறுபுறம் ஐந்தாம் தலைமுறை (5G) செல்போன்களால் 80 GHz வரையிலான அதிர்வெண் வரம்பு பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

அடடா.! பாதிப்பு இல்லையா? உண்மையாவா சொல்றீங்க.!

அடடா.! பாதிப்பு இல்லையா? உண்மையாவா சொல்றீங்க.!

இந்த அதிர்வெண் வரம்புகள் ஒவ்வொன்றும், ஸ்பெக்ட்ரமின் அயனைசிங் இல்லாத பகுதிக்குள் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இதன் பொருள் இது குறைந்த அதிர்வெண் மற்றும் குறைந்த ஆற்றல் கொண்டது. நமது டிஎன்ஏவை எந்த வகையிலும் பாதிக்க போதுமானதாக இந்த கதிர்வீச்சுகள் இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. அப்படியானால், எந்த கதிர்வீச்சில் பாதிப்பு அதிகம்?

இந்த கதிர்கள் தான் ஆபத்தானது.! இவையிடமிருந்து தள்ளி இருங்க.!

இந்த கதிர்கள் தான் ஆபத்தானது.! இவையிடமிருந்து தள்ளி இருங்க.!

ரேடான், காஸ்மிக் கதிர்கள் மற்றும் எக்ஸ்-ரே கதிர்கள் ஆகியவற்றால் வெளியிடப்படும் கதிர்வீச்சுகளில் தான் அயனைசிங் கதிர்வீச்சுகள் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த உயர் அதிர்வெண்கள் மற்றும் ஆற்றல்கள் காரணமாக டிஎன்ஏ சேதம் சாத்தியமானது என்பதை ஆராய்ச்சி முடிவுகள் கண்டறிந்துள்ளது. இதன் விளைவாக, சில மரபணுக்கள் மாற்றமடைந்து புற்றுநோயை அதிகமாக்குகிறது.

அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!

கேன்சர் உருவாகாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது!

கேன்சர் உருவாகாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது!

இறுதி முடிவாக, செல்போனைப் பயன்படுத்துவதால் மூளை புற்றுநோய் அல்லது மனிதர்களுக்கு வேறு எந்த வகை புற்றுநோயும் ஏற்பட வாய்ப்பில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5ஜி செல்போன் கதிர்வீச்சினால் எந்த ஆபத்தும் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி, செல்போன் பயன்படுத்தினால், கேன்சர் உருவாகும் என்று கூறும் பொய்களை நம்ப வேண்டாம் என்று இந்த ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது. ஆனால், வேறு சில பாதிப்புகளை இது ஏற்படுத்துமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கேன்சர் உருவாகாது என்பது மட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Can 2G 3G 4G and 5G Cell phone Radiations Can Create Risk Of Getting Cancer in Human Body and Brain

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X