நமது சூரிய குடும்பத்தில் 9வது கிரகத்தை தேடும் பணி தீவிரம்.. புதிய 9வது கிரகம் இருக்கும் திசை உறுதியானதா?

|

நமது சூரியக் குடும்பத்தில் புதிதாக 9வது கிரகத்தைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எது, புதிய 9வது கிரகமா? நான் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் இருந்தே நமது சூரியக் குடும்பத்தில் 9 கிரகங்கள் தானே இருந்து வருகிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். அது அந்த காலத்துச் செய்தி, கடந்த 2006 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கதையே வேறு. உண்மையில் இத்தனை நாட்களாக நாம் 9வது கிரகம் என்று அழைத்துக்கொண்டிருந்த புளூட்டோ கிரகம் முழுமையான கிரகமே கிடையாது என்று நிரூபிக்கப்பட்டது.

நமது சூரியக் குடும்பத்தில் ஏற்கனவே 9 கிரகங்கள் தானே? அப்போ பழைய கிரகம் என்ன ஆனது?

நமது சூரியக் குடும்பத்தில் ஏற்கனவே 9 கிரகங்கள் தானே? அப்போ பழைய கிரகம் என்ன ஆனது?

நமது சூரியக் குடும்பத்தின் பட்டியலில் கடைசியாக இருக்கும் 9வது கிரகமான புளூட்டோ ஒரு முழுமையான பனி கிரகமாகும். புளூட்டோ கிரகம் என்று நாம் கூறி வந்த கிரகம், ஒரு முழுமையான கிரகமே கிடையாது என்று நிரூபிக்கப்பட்டு, கடந்த 2006 ஆம் ஆண்டிற்குப் பின்னர் புளூட்டோ நமது சூரியக் குடும்பத்தின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தற்போதைய 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, புளூட்டோ கிரகம் என்பது ஒரு குள்ள கிரகமாகக் கருதப்படுகிறது.

9வது கிரகமாக கருதப்பட்ட புளூட்டோ கிரகத்திற்கு என்ன ஆனது?

9வது கிரகமாக கருதப்பட்ட புளூட்டோ கிரகத்திற்கு என்ன ஆனது?

புளூட்டோ அதன் அண்டை பகுதியில் உள்ள மற்ற கிரகங்களின் தகுதியைப் போல் இந்த கிரகம் தனக்கென்ற முக்கிய தகுதியை எட்டவில்லை என்று கூறப்படுகிறது. புளூட்டோ தற்போது ஒரு கிரகமாக வகைப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. குறிப்பாக 2006 ஆம் ஆண்டு வரை மட்டுமே புளூட்டோ நமது சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கிரகமாகக் கருதப்பட்டது.

பூமி போல் செவ்வாய் கிரகத்திலும் இதே பிரச்சனையா? 5 கிமீ தூரத்திற்கு அதிக சேதம்.. நாசா வெளியிட்ட வைரல் புகைபடம்பூமி போல் செவ்வாய் கிரகத்திலும் இதே பிரச்சனையா? 5 கிமீ தூரத்திற்கு அதிக சேதம்.. நாசா வெளியிட்ட வைரல் புகைபடம்

புளூட்டோ கிரகம் ஒரு முழுமையான கிரகமே இல்லையா? ஏன் என்ன காரணம்?

புளூட்டோ கிரகம் ஒரு முழுமையான கிரகமே இல்லையா? ஏன் என்ன காரணம்?

சர்வதேச வானியல் சங்கம் புளூட்டோவை ஒரு குள்ள கிரகமாக அறிவித்தது, ஏனெனில் இது ஒரு முழு அளவிலான கிரகத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்பட்டது. இதனால், நமது சூரியக் குடும்பத்தில் இருந்த ஒரு கிரகம் நீக்கப்பட்டு, புதிய கிரகத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி துவங்கியது. 9வது கிரகத்தைத் தேடும் இந்த பணி பல ஆண்டுகளாக, பல ஆராய்ச்சியாளர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

புதிய 'பிளானட் 9' பற்றிய சில முக்கிய தகவல்கள் கண்டுபிடிப்பு

புதிய 'பிளானட் 9' பற்றிய சில முக்கிய தகவல்கள் கண்டுபிடிப்பு

ஆனால், கிரகம் பற்றிய எந்த தகவலும் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் இரண்டு வானியலாளர்கள், பிளானட் 9 பற்றிய சில முக்கிய தகவல்களை தற்போது கண்டறிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். புதிய ஒன்பதாவது கிரகத்தின் சுற்றுப்பாதையின் வழித்தடம் இருக்கும் திசை எது என்பதை இவர்கள் கண்டறிந்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே சீரிஸ் மொத்தமும் க்ளோஸ்- ஹாட்ஸ்டாரை அன்-இன்ஸ்டால் செய்யும் மக்கள்: அதில் அப்படி என்ன இருக்கு?ஒரே சீரிஸ் மொத்தமும் க்ளோஸ்- ஹாட்ஸ்டாரை அன்-இன்ஸ்டால் செய்யும் மக்கள்: அதில் அப்படி என்ன இருக்கு?

பிளானட் 9 என்று அழைக்கப்படும் புதிய கிரகம் எங்கிருக்கிறது?

பிளானட் 9 என்று அழைக்கப்படும் புதிய கிரகம் எங்கிருக்கிறது?

இது நமது சூரிய மண்டலத்தில் உள்ள நெப்டியூனுக்கு அப்பால் உள்ளது என்று இவர்கள் கூறியுள்ளனர். அத்துடன், இந்த 9வது புதிய கிரகம் பூமியின் வெகுஜனத்தைப் போல் ஆறு மடங்கு வெகுஜனத்தைக் கொண்டிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கால்டெக் வானியலாளர்கள் மைக் பிரவுன் மற்றும் கான்ஸ்டான்டின் பாடிஜின் ஐந்து வருடங்களாகக் கிரகம் ஒன்பதைக் கண்டுபிடிக்கப் பணிபுரிந்து வருகின்றனர். புதிய 9வது கிரகத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சவாலானது என்று கூறியுள்ளனர்.

9வது கிரகம் உண்மையில் இருக்கிறதா? அது எவ்வளவு பெரியது?

9வது கிரகம் உண்மையில் இருக்கிறதா? அது எவ்வளவு பெரியது?

வானியலாளர்களுக்கு இந்த 9வது கிரகம் உண்மையில் இருக்கிறதா அல்லது இல்லையா என்ற சந்தேகம் எழுந்துவிட்டது. இந்த 9வது கிரகத்தைக் கண்டுபிடிப்பது என்பது கண்டுபிடிக்க மிகவும் கடினமாக உள்ளது என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளார். ஏனெனில், நாம் தேடும் 9வது கிரகம் சூரியனில் இருந்து மிகத் தொலைவில் உள்ளது. உண்மையில் இதன் தூரம் சூரியனிலிருந்து பூமிக்கு இருக்கும் தூரத்தைப் போல் சுமார் 300 மடங்கு தூரம் அதிகமானது என்று வானியலாளர்கள் கூறியுள்ளனர். இது தான் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

இப்படி ஒரு தரமான போனுக்காக தான் காத்திட்டு இருந்தோம்.. வந்தாச்சு ரியல்மி 8i ஸ்மார்ட்போன்.!இப்படி ஒரு தரமான போனுக்காக தான் காத்திட்டு இருந்தோம்.. வந்தாச்சு ரியல்மி 8i ஸ்மார்ட்போன்.!

எந்த திசையில் இந்த மர்மமான பிளானட் 9 ஒளிந்துள்ளது?

எந்த திசையில் இந்த மர்மமான பிளானட் 9 ஒளிந்துள்ளது?

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அவர்களின் முன்மொழிவின் ஐந்து ஆண்டு ஆராய்ச்சிக்குப் பின்னர் ஒன்பது கிரகத்தை நாம் எந்த திசையில் கண்டறிய வேண்டும் என்பதைக் கணித்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 9வது புதிய கிரகத்தைக் கண்டுபிடிக்கப் பறந்து விரிந்த விண்வெளி வானில் நாம் எங்கு உன்னிப்பாகப் பார்க்க வேண்டும் என்று இப்போது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது என்று சமீபத்திய அறிக்கை வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வானியலாளர்கள் தேடித்திரியும் மர்மமான கிரகம் பற்றி நமக்கு இதுவரை என்ன தெரியும்?

வானியலாளர்கள் தேடித்திரியும் மர்மமான கிரகம் பற்றி நமக்கு இதுவரை என்ன தெரியும்?

வானியலாளர்கள் தேடித்திரியும் மர்மமான கிரகத்தைப் பற்றி ஒரு பொதுவான யோசனை இருந்தபோதிலும், கிரகம் 9 வானத்தில் எங்கே இருக்கும்? அது எவ்வளவு பெரியதாக இருக்கும்? அது எவ்வளவு பிரகாசமாக இருக்கும்? என்பதற்கான நிச்சயமற்ற வரம்பை முழுமையாக அவர்களால் மதிப்பீடு செய்ய முடியாமல் திணறி வந்தனர் என்று கூறப்படுகிறது. ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை, இனி நம்மால் 9வது கிரகத்தை விரைவில் அடையாளம் காண முடியும் என்று மர்மமான உலகத்தைத் தேடித்திரியும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நெட்வொர்க் பிரச்சனை இனி இல்லை- நேரடியாக சாட்டிலைட் மூலம் Call மற்றும் SMS: ஐபோனின் புது டெக்னாலஜி!நெட்வொர்க் பிரச்சனை இனி இல்லை- நேரடியாக சாட்டிலைட் மூலம் Call மற்றும் SMS: ஐபோனின் புது டெக்னாலஜி!

சர்குலர் ஸ்டெல்லார் வட்டத்திற்கும் அப்பால் உள்ள தொலைவில் பிளான்ட் 9

சர்குலர் ஸ்டெல்லார் வட்டத்திற்கும் அப்பால் உள்ள தொலைவில் பிளான்ட் 9

தேடலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பதிவில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் இந்த தகவல்களை பிரவுன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிப்புற சூரிய மண்டலத்தில், நெப்டியூனின் சுற்றுப்பாதைக்கு அப்பால், ஒரு சர்குலர் ஸ்டெல்லார் உள்ளது. இதில் புளூட்டோ ஒரு பகுதியாக இருக்கிறது. இத்துடன், இதில் 100 கிலோமீட்டருக்கு மேல் அளவு கொண்ட 100,000-க்கும் அதிகமான சூரிய மண்டல அமைப்புகளை இது கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

கைபர் பெல்ட் மற்றும் பிளானட் 9 பற்றி விஞ்ஞானிகள் கூறும் கருத்து என்ன?

கைபர் பெல்ட் மற்றும் பிளானட் 9 பற்றி விஞ்ஞானிகள் கூறும் கருத்து என்ன?

இந்த சர்குலர் ஸ்டெல்லார் முக்கிய சிறுகோள் பெல்ட்டைப் போன்றது மற்றும் கைபர் பெல்ட் என்றும் இது அழைக்கப்படுகிறது.விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, கைபர் பெல்ட்டில் உள்ள மிகத் தொலைதூர பொருள்கள் ஒழுங்கற்ற சுற்றுப்பாதைகளைக் கொண்டுள்ளன, அவை அவற்றின் சுற்றுப்பாதைகளைப் பாதிக்கும் ஒரு ஈர்ப்பு கையொப்பத்தைக் குறிக்கின்றன.

இந்த பிரபஞ்சத்தில் ஒளிந்துள்ள அந்த 9வது கிரகம் கண்டுபிடிக்கப்படுமா?

இந்த பிரபஞ்சத்தில் ஒளிந்துள்ள அந்த 9வது கிரகம் கண்டுபிடிக்கப்படுமா?

இந்த அசாதாரண நடத்தை மீதான செல்வாக்கின் பின்னால் பிளானட் ஒன்பது இருப்பதாக இரண்டு வானியலாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், வேறு சில விஞ்ஞானிகள் இந்த முரண்பாடான நடத்தை ஒரு அவதானிப்பு சார்பாக இருக்கலாம் என்று கூறி அவர்களின் முன்மொழிவை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். எது எப்படியாக இருந்தாலும், இந்த பிரபஞ்சத்தில் ஒளிந்துள்ள அந்த புதிய 9வது கிரகம் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.

Best Mobiles in India

English summary
Caltech Astronomers Claim They Know Where To Look In The Space To Find New Planet Nine : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X