Home
News

புது ரூல்ஸ்.. நவ. 1 முதல் அமல்.. Jio, Airtel, Vi சிம்களுக்கு வருது CNAP ரூல்ஸ்.. முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea), பிஎஸ்என்எல் (BSNL) உள்ளிட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களுக்கும் புதிய விதிகள் வரவுள்ளது. இதுவரை ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படாத நம்பரில் இருந்து கால் வந்தால், அந்த நம்பரை மட்டும் பார்க்க முடியும். இனிமேல் யார் கால் செய்கிறார்கள் என்பதை பெயருடன் பார்க்கலாம்.

ஆனால், இதற்காக ட்ரூகாலர் (Truecaller) உள்ளிட்ட ஆப்கள் தேவைப்படாது. மத்திய தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications) கொண்டுவந்துள்ள இந்த புதிய விதிகள் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன. சிஎன்ஏபி (CNAP) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அழைப்பவர் பெயர் காட்டல் (Calling Name Presentation) குறித்த விவரங்களை பார்க்கலாம்.

புது ரூல்ஸ்.. நவ. 1 முதல் அமல்.. Jio, Airtel, Vi சிம்களுக்கு வருது!

Calling Name Presentation என்பது ஸ்மார்ட்போனுக்கு போனுக்கு கால் வரும்போது, அதை செய்பவரின் மொபைல் நம்பர் மட்டுமல்லாமல், அவருடைய பெயரையும் டிஸ்பிளேவில் காண்பிக்கும் வசதியாகும். இதனால் பேங்க், இன்சூரன்ஸ், கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தொடர்பாக வரும் கால்களில் யார் அழைக்கிறார் என்பதை அடையாளம் காண முடியும்.

குறிப்பாக, தெரியாத நம்பர்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள் வெகுவாக குறையும். அதே நேரத்தில் இதற்காக ட்ரூகாலர் போன்ற பிரத்யேக ஆப்களையும் வாடிக்கையாளர்கள் டவுன்லோட் செய்ய வேண்டியது கிடையாது. ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் போன்ற டெலிகாம் நிறுவனங்களே தங்களது நெட்வொர்க் மூலம் இந்த வசதியை வழங்க இருக்கின்றன.

இந்த சிஎன்ஏபி சேவையை செயல்படுவதற்கு டெலிகாம் நிறுவனங்களிடம் உள்ள வாடிக்கையாளர் விவரங்கள் பயன்படுத்தப்படும். அதாவது, ஒருவர் சிம் கார்டு (SIM Card) வாங்கும்போது வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் மொபைல் நம்பருடன் அவரது பெயர் பதிவு செய்யப்பட்டுவிடும். அந்த நம்பரில் இருந்து மற்றொரு நபருக்கு கால் செல்லும்போது அது காண்பிக்கப்படும்.

ஒருவேளை கால் செய்யும் நபரின் மொபைல் நம்பரை ஏற்கெனவே உங்களுடைய கான்டாக்ட் லிஸ்ட்டில் (Contact List) வைத்திருந்தால், சேமிக்கப்பட்ட பெயரே டிஸ்பிளேவில் தோன்றும். ஆகவே, மொபைல் நம்பருடன் பெயரை காண்பிக்க டெலிகாம் கஸ்டமர்கள் கூடுதலாக எந்தவொரு ஆவணத்தையும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

இது 4ஜி மற்றும் 5ஜி போன்ற சேவைகளை கொண்ட ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஏனென்றால், இதற்கு அதிவேக டேட்டா தேவையாக இருக்கும். ஏனென்றால், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ ஆப்கள் வழியாக இந்த சேவை கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. நேரடியாக பெயரை காண்பிக்க இது அவசியமாகும்.

ஆகவே, அதுபோன்ற ஆப்கள் மற்றும் டேட்டா சேவை இருக்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இப்போதைக்கு இது சாத்தியமான விஷயமாக இருக்கிறது. ஆகவே, ட்ரூகாலர் போன்ற ஆப்கள் இல்லாமலேயே இதுபோன்ற சேவையை பெற்று கொள்ள முடியும். அதே நேரத்தில் டெலிகாம் நிறுவனங்களே பெயர்களை காண்பிப்பதால், அதை நம்பகமானதாகவும் இருக்கும்.

ஒருவேளை வெளிநாட்டு அழைப்புகளுக்கு வந்தால், அதில் பெயர் காண்பிக்கப்படுமா என்ற சந்தேகம் பலருக்க வரலாம். இந்த புதிய விதிகளானது இந்தியாவிற்குள் இருந்து வரும் கால்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, வெளிநாடுகளில் இருந்து வரும் கால்களுக்கு பெயருக்கு பதிலாக இன்டர்நேஷனல் கால் (International Call) என்று டிஸ்பிளேவில் காண்பிக்கப்படும்.

இந்த நம்பரை ஏற்கனவே சேமித்து வைத்திருந்தால், அந்த பெயரே காண்பிக்கப்படும். தனியுரிமையைப் பாதுகாப்பை பொறுத்தவரையில், ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களின் மொபைல் நம்பருடன் தொடர்புடைய பெயர்களை கொண்ட பாதுகாப்பான டேட்டாபேஸை பராமரிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

மேலும், கால் வரும்போது மட்டுமே தேவையான பெயர் விவரங்களை காண்பிக்க வேண்டும். கால் முடிந்த பிறகு அந்தப் பெயர் விவரங்களை சேமித்து வைக்காத வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தனிநபர்களுக்கு மட்டுமே. வணிக நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வணிக பெயர் காண்பிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Calling Name Presentation Rules Come Into Effect From November 1 2026 Check New CNAP Rules
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X