கலிபோர்னியாவில் பூத்துக்குலுங்கும் காட்டுமலர்கள்!விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட அதிசய படம்..
அதே சமயம் லேண்ட்சாட் போன்ற பெரிய செயற்கைக்கோள்கள், நீண்ட காலத்திற்கு மிகப்பெரிய நிலத்தை கண்காணிக்க உதவுகின்றன.
நாசா மற்றும் அமெரிக்க ஜியோலாஜிகல் சர்வேயின் கூட்டு முயற்சியான லேண்ட்சாட் 8 செயற்கைகோள், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பாலைவனங்களின் பச்சைநிற பகுதிகள் காட்டுமலர்களால் "பெரும் வெடிப்பு" போல சூழப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளது. மேலும் டிஜிட்டல் குளோப் செயற்கைக்கோள்கள் பூத்துக்குலுங்கும் காட்டுமலர்களின் உயர் தெளிவுத்திறன் (High Resolution) படங்களை எடுத்துள்ளன.

அப்பகுதியில் நிலவும் ஈரப்பதமான குளிர்காலத்தினால் காட்டுமலர்கள் பூத்துக்குலுங்குவதாக நாசாவின் புவி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு வடமேற்கே 130 மைல்கள் (210 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள நியூ குயாமா நகரத்திற்கு அருகில் லேண்ட்சாட் செயற்கைகோளின் கீழே பார்வை இருந்தபோது, அதிலுள்ள ஆபரேசனல் லேண்ட் இமேஜர் மூலம் இப்படங்களை யுஎஸ்ஜிஎஸ் எடுத்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு தென்கிழக்கே 50 மைல் (80 கிமீ) தொலைவில் உள்ள இடத்தை டிஜிட்டல் குளோப் புகைப்படம் எடுத்துள்ளது.
"இந்த வண்ணமயமான செயற்கைக்கோள் படங்கள், வால்கர் கணவாயை ஒட்டி அமைந்துள்ள மலைப்பகுதியில் பூத்துக்குலுங்கும் மலர்களையும், அருகில் நிறுத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கார்களையும் மற்றும் அப்பகுதியில் மலையேறும் மக்களையும் காண்பிக்கிறது" என்கின்றனர் டிஜிட்டல் குளோப் பிரதிநிதிகள்.

டிஜிட்டல் குளோப் சிறிய அளவிலான நிலப்பகுதிகளை ஜூம் செய்து பார்க்க உதவுகிறது. அதே சமயம் லேண்ட்சாட் போன்ற பெரிய செயற்கைக்கோள்கள், நீண்ட காலத்திற்கு மிகப்பெரிய நிலத்தை கண்காணிக்க உதவுகின்றன. பன்அலைவரிசை செயற்கைக்கோள்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் பயிர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும், மாசுபாடுகள் எப்படி நிலப்பரப்பை பாதிக்கிறது என்பதைப் அறியவும் மற்றும் பனிப்பொழிவு குறைந்து காணப்படும் வடக்குப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கண்காணிக்கவும் உதவுகின்றன .

லேண்ட்சாட்-ஐ அமெரிக்க ஜியோலாஜிகல் சர்வே மையம் இயங்குகிறது. எர்த் ரிசோர்ஸ் டெக்னாலஜி சேட்டிலைட்(லேண்ட்சாட் 1) 1972 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட முதல் தரவு சேகரித்துவருகிறது.

2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட லேண்ட்சாட் 8 போலார் ஆர்பிட் அருகில் இயங்கிவரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள பகுதிகள் ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுமதிக்கிறது. சூரியன் உடன் ஒத்திசைவாக செயல்படும் இது, சூரியனின் நிலைற்கு ஏற்ப தனது சுற்றுப்பாதையில் எப்பொழுதும் சுற்றிவருகிறது; இதன் காரணமாக ஒளியில் ஏற்படும் மாற்றங்களால் புகைப்படங்கள் ஓப்பீட்டளவில் தரமானதாக உள்ளன.


Click it and Unblock the Notifications