அனைவருக்கும் இலவச வைஃபை: பிஎம் வாணி திட்டத்தின் முழு விவரம்!

|

இந்தியாவில் பிஎம் வாணி எனப்படும் பிரமாண்ட வைஃபை நெட்வொர்க்குகள் வழங்க 1 கோடி தரவு மையங்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் அதை பயன்படுத்துவதற்கு உரிமம், கட்டணம் அல்லது பதிவு எதுவும் தேவை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகள்

மத்திய அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகள்

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் சந்தோஷ் கங்கவார் ஆகியோவர் தெரிவித்தனர்.

பிஎம் வாணி நெட்வொர்க் திட்டம்

பிஎம் வாணி நெட்வொர்க் திட்டம்

அதில், பிஎம் வாணி நெட்வொர்க் இடைமுகத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டது. டிஜிட்டல் இந்தியாவுக்கு பிறகு நாட்டில் தரவு புரட்சியை கொண்டுவரப்படும் திட்டம் எனவும் அது மத்திய அரசு நாடு முழுவதும் 1 கோடி தரவு மையங்கள் அமைக்கும் திட்டமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பல பிரிவுகளில் கட்டமைப்புகள்

பல பிரிவுகளில் கட்டமைப்புகள்

இந்த திட்டமானது பொது தரவு அலுவலகம், பொது தரவு அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள், பயன்பாட்டு வழங்குனர்கள் உள்ளிட்ட பல பிரிவு கட்டமைப்புகளை முழுமையாக கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் நாட்டில் பொது வைஃபை நெட்வொர்க்குகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

சிறந்த முன்னேற்றம் கண்டுள்ள நாடு இந்தியா., இந்தியாவை கூர்ந்து கவனிக்க வேண்டும்: புகழ்ந்து தள்ளிய பில்கேட்ஸ்!சிறந்த முன்னேற்றம் கண்டுள்ள நாடு இந்தியா., இந்தியாவை கூர்ந்து கவனிக்க வேண்டும்: புகழ்ந்து தள்ளிய பில்கேட்ஸ்!

பொது தரவு மையங்கள்

பொது தரவு மையங்கள்

நாடு முழுவதும் பொது தரவு மையங்கள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். மேலும் அதை அணுகுவதற்கான உரிமம், கட்டணம், பதிவு உள்ளிட்டவை எதுவும் தேவைப்படாது என அவர் குறிப்பிட்டார்.இந்த பொது வைஃபை அணுகல் நெட்வொர்க் இடைமுகத்திற்கு பிஎம் வாணி ( PM-WANI) என பெயரிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

பொது வைஃபை பலன்கள்

பொது வைஃபை பலன்கள்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொது வைஃபை நெட்வொர்க்குகள், பொது தரவு அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டவை அமைக்க டிஓடியின் ஒப்புதல் கிடைத்துள்ளது. பொது வைஃபை பெருக்குவதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கும், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் வருமானத்தை மேம்படுத்தும் மற்றும் செலவு தொகையை மிச்சப்படுத்தும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பு பிரிவுகளின் சேவைகள்

பொது தரவு அலுவலகமானது வைஃபை அணுகலை மட்டுமே வழங்குகிறது. பராமரிப்பு மற்றும் சந்தாதாரர்களுக்கான பிராட்பேண்ட் சேவைகளை வழங்குகிறது. பொது தரவு அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் கணக்கியல் தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்வார்கள். பயன்பாட்டு வழங்குனர்கள் பயனர்களை பதிவு செய்யவும் அருகிலுள்ள வாணி வைஃபை ஹாட்ஸ்பாட்களை கண்டறிவதற்கும் உதவும்.

 கண்ணாடி இழை கேபிள் மூலம் சேவை

கண்ணாடி இழை கேபிள் மூலம் சேவை

பிஎம் வாணி திட்டத்தின் மூலம் கொச்சிக்கும் லட்சத்தீவில் இருக்கும் 11 தீவுகளுக்கும் கடலுக்கடியில் கண்ணாடி இழை கேபிள் மூலம் சேவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த திட்டத்துக்கு ரூ.1,072 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Cabinet Approves Pm Wani Public Wifi Network Scheme With No Licence, Fee or Registration

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X