இந்தியாவிற்குள் மீண்டும் ஊடுருவும் டிக்டாக்! அதிரடி ஒப்பந்தம் தயார்! அடுத்த நடவடிக்கை என்ன?

|

சீன மற்றும் இந்தியா இடையேயான இரத்தக்களரி மோதலின் பின்னணியில் தரவு பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆபத்து இருப்பதை உணர்ந்து, இந்திய அரசு டிக்டாக் உட்பட சுமார் 59 சீன பயன்பாடுகளைத் தடைசெய்திருந்தது. இந்தியாவில் தனது பயன்பாட்டை மீண்டும் கொண்டுவர டிக்டாக் நிறுவனம் பல முயற்சிகளைச் செய்து வருகிறது. அதன் முடிவாக தற்பொழுது டிக்டாக் இந்தியாவிற்குள் அதிரடியாக மீண்டும் ஊடுருவியுள்ளது.

டிக்டாக் நிறுவனம்

சீன பயன்பாடுகள் தடைசெய்யப்பட்ட சில வாரங்களிலேயே டிக்டாக் நிறுவனம் தனது தாய் நிரவுணமான பைட் டான்ஸ் நிறுவனத்தை இந்தியாவில் நிறுவ புதிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்பொழுது டிக்டாக் நிறுவனம் இந்தியாவில் எங்குத் தனது புதிய அலுவலகத்தை அமைக்கப்போகிறது தெரியுமா?

பயன்பாட்டின் தாய்

டிக்டாக் பயன்பாட்டின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் மும்பையில் தான் தனது அலுவலகத்தை அமைக்கப்போகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கான திட்டங்களையும் டிக்டாக் நிறுவனம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1,250 சீட்கள் கொண்ட பணியிடங்களை வழங்கும் WeWork நிறுவனத்துடன் சீன நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் பயனர்களுக்கு தனிபாசம் காட்டிய வாட்ஸ்அப்.! புதிய ஷார்ட்கட் வசதி.!ஐபோன் பயனர்களுக்கு தனிபாசம் காட்டிய வாட்ஸ்அப்.! புதிய ஷார்ட்கட் வசதி.!

னாவிலிருந்து

டிக்டாக் நிறுவனத்தின் கட்டமைப்பை மாற்றுவதற்கும், டிக்டாக் நிறுவனத்தின் தலைமையகத்தைச் சீனாவிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரத் தனது தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் திட்டமிடுவது தெளிவாகத் தெரிகிறது. டிக்டாக் பயன்பாட்டிற்கு எதிர்ப்புகள் அதிகமாகி வருவதால், இந்தியாவிற்குள் ஊடுருவி தனது தலைமையகத்தை அமைக்க நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனுக்கு மீண்டும் விலை உயர்வு.!ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனுக்கு மீண்டும் விலை உயர்வு.!

டை டிக்டோக்கின்

இந்திய விதித்த ஆப்ஸ் தடை டிக்டோக்கின் வளர்ச்சி வாய்ப்புகளைப் பாதித்துள்ளது, குறிப்பாக இந்தியா டிக்டாக்கின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். இதனால் தான் டிக்டாக் மும்முரமாக இந்தியாவில் தனது நிறுவனத்தைக் கட்டமைக்க முயற்சித்து வருகிறது. இந்த முயற்சி வெற்றிபெற்றால், பைட் டான்ஸ் நிறுவனம் இந்தியச் சந்தையில் இன்னும் ஆழமாக ஊடுருவ வாய்ப்புள்ளது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
ByteDance sets up office in Mumbai despite India's TikTok ban: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X