தங்கம் வாங்க புது ரூல்ஸ்.. இனி PAN நம்பர் கொடுக்காம எவ்ளோ Gold வாங்க முடியும்? வேறு எதெல்லாம் வாங்க முடியாது?
2026 மே மாதத்தில் ஏற்கனவே பல வகையான புது விதிகள் மற்றும் மாற்றாங்கள் அமலுக்கு வரும் நிலையில், வருமான வரி சட்டம் 2025 (Income Tax Act 2025) மற்றும் வருமான வரி விதிகள் 2026-ன் (Income Tax Rules 2026) கீழ் அமலுக்கு வந்துள்ள பான் கார்டு (PAN Card) தொடர்பான புதிய விதிகள் குறித்த கூடுதல் விளக்கம் கிடைத்துள்ளது.
இனி தங்கம் (Gold) உள்ளிட்ட சில பொருட்களையும், டிமேட் அக்கவுண்ட் (Demat account) போன்ற சேவைகளையும் பான் நம்பர் (PAN Number) இல்லாமல் வாங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உங்களிடம் பான் நம்பர் இல்லையென்றால், நீங்கள் படிவம் 60-ஐ தாக்கல் செய்ய வேண்டியிருந்தது.

வருமான வரி சட்டம் 2025 மற்றும் வருமான வரி விதிகள் 2026 ஆகியவற்றின் கீழ், படிவம் 60 தற்போது மறுவடிவமைக்கப்பட்டு படிவம் 97-ஆல் மாற்றப்பட்டுள்ளது என்பதால், ஏற்கனவே அமலில் உள்ள இந்த புதிய விதியின் கீழ் வந்துள்ள புதிய படிவங்கள் ஆனது, பிழைகளையும் தகராறுகளையும் குறைப்பதற்காக - எளிய மொழி, தரப்படுத்தப்பட்ட முன் நிரப்பப்பட்ட வடிவங்கள் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் செயல்முறைகளை கொண்டுள்ளன.
வருமான வரி விதிகள் 2026-இன் கீழ், பான் நம்பர் கொடுக்காமல் எவ்வளவு பணத்திற்கு தங்கம் வாங்கலாம்? இது குறித்து சார்ட்டட் அக்கவுண்டன்ட் சுரேஷ் சுரானா கூறுகையில், வருமான வரி விதிகள், 2026-இன் விதி 159-இன் கீழ் (இது வருமான வரி விதிகள், 1962-இன் விதி 114பி-க்கு இணையானது), குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு பான் நம்பர் குறிப்பிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விதி 159(1)-இன் வரிசை எண் 16, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் அல்லது சேவைகளின் விற்பனை அல்லது கொள்முதலை உள்ளடக்கியுள்ளது.
இதன்படி, ரூ.2 லட்சத்திற்குள் தங்க நகைகள் வாங்க பான் நம்பர் அவசியம் இல்லை, ரூ.2 லட்சத்தை மீறும் பரிவர்த்தனைகள் மேற்குறிப்பிட்ட விதிகளின் வரம்பிற்குள் தொடர்ந்து சேர்க்கப்படும். இந்த புதுப்பிக்கப்பட்ட விதிகள், இணக்கத்தை முறைப்படுத்தவும், வழக்கமான மற்றும் குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கான அறிக்கையிடலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேறு என்னென்ன வாங்குதல்களுக்கு பான் கட்டாயம்? சுரானாவின் கூற்றுப்படி, பின்வருபவர்களுக்கு பான் (PAN) கட்டாயமாகும்:
- ரூ.5 லட்சத்திற்கு மேல் மோட்டார் வாகனங்கள் வாங்குதல்
- கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பம்
- டிமேட் கணக்குகளை தொடங்குதல்
- ரூ. 50,000-க்கு மேல் பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள், பிணைப்பத்திரங்கள் (ரிசர்வ் வங்கி பிணைப்பத்திரங்கள் உட்பட) ஆகியவற்றில் முதலீடு செய்தல்
- குறிப்பிட்ட வரம்புகளை (ரூ.10 லட்சம்) தாண்டிய ரொக்க வைப்புகள் மற்றும் பணம் எடுத்தல்
- பத்திரங்களை விற்பனை செய்தல் அல்லது வாங்குவதற்கான ஒப்பந்தம் (ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 1 லட்சத்திற்கு மேல்)
- பட்டியலிடப்படாத பங்குகளை விற்பனை செய்தல் அல்லது வாங்குதல் (ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 லட்சத்திற்கு மேல்)
மேலும் கீழ்வரும் பரிவர்த்தனைகள் ஆனது படிவம் 97 அறிக்கையிடல் வரம்பிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாகவும் சுரானா கூறுகிறார்:
- அந்நிய நாணயத்தை வாங்குதல்
- வங்கி வரைவோலைகள், பே ஆர்டர்கள் (Pay orders) அல்லது வங்கியாளர் காசோலைகளை ரொக்கமாக வாங்குதல்
- முன்பணம் செலுத்தப்பட்ட செலுத்து கருவிகளில் (PPIs) செய்யப்படும் பரிவர்த்தனைகள்
OPINION: படிவம் 60-க்கு மாற்றாக படிவம் 97 அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், தற்போது இது குறைவான நிகழ்வுகளுக்கே பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான முக்கிய வங்கி, முதலீடு மற்றும் அதிக மதிப்புள்ள கொள்முதல் பரிவர்த்தனைகளுக்கு, பான் ஒரு முதன்மை= தேவையாகிவிட்டது. நகைகள், பத்திரங்கள் அல்லது நிதி முதலீடுகளை திட்டமிடும் வாங்குபவர்கள், பரிவர்த்தனையை தொடர்வதற்கு முன்பு பான் விவரங்கள் தயாராக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியிருக்கலாம்.


Click it and Unblock the Notifications