வெறும் 1 ரூபாய்க்கு போன்பே மூலம் தங்கம் வாங்கலாம்: எப்படி தெரியுமா?

|

போன்பே, 35% அதிகமான சந்தை பங்கை கொண்டு தங்கத்தை வாங்கும் மிகப்பெரிய டிஜிட்டல் கோல்டு தளமாக உருவெடுத்துள்ளது.

தங்கம் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களா நீங்கள்

தங்கம் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களா நீங்கள்

உலகம் முழுவதும் டிஜிட்டல் மையமாக மாறி வருகிறது. காசு, உணவு, மருத்துவம் என தொடங்கி அனைத்தும் டிஜிட்டல் மையமாகிவிட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கே இந்த நிலை என்றால் தங்கம் போன்ற பொருட்கள் குறித்து கேட்கவா வேண்டும். தற்போது தங்கம் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன

டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன

முதலில் டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன என்று பார்க்கலாம், டிஜிட்டல் தங்கத்தை அரசுக்கு சொந்தமான MMTC (மெட்டல்ஸ் அண்ட் மினரல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) வழங்குகிறது, இது சுவிட்சர்லாந்தின் PAMP (Produits Artistiques Métaux Précieux) உடன் நேரடி தொடர்பில் உள்ளது.

24 கேரட் கோல்டு

24 கேரட் கோல்டு

24 கேரட் கோல்டு டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் 24 கேரட் கொண்ட 99.5% தூய தங்கத்தை வாங்கலாம். டிஜிட்டல் தங்கத்தில் ரூ.100 வரை முதலீடு செய்யலாம். அமேசான் ரூ.5-க்கு டிஜிட்டல் தங்க விற்பனையை தொடங்கி ரூ.1-க்கு தங்கத்தை விற்பனை செய்யப்போவதாக அறிவித்தது.

போன்பே டிஜிட்டல் கோல்டு தளம்

போன்பே டிஜிட்டல் கோல்டு தளம்

கூகுள்பே, அமேசான்பே மற்றும் பேடிஎம் நிறுவனங்களுடன் போட்டியிடும் போன்பே நிறுவனம், 35% அதிகமான சந்தை பங்கை கொண்டு தங்கத்தை வாங்கும் இந்தியாவின் பெரிய டிஜிட்டல் கோல்டு தளமாக உருவெடுத்துள்ளது.

கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்: டாஸ்க்மேட் ஆப் முழு விவரம்- வீட்டில் இருந்தே வேலை!கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்: டாஸ்க்மேட் ஆப் முழு விவரம்- வீட்டில் இருந்தே வேலை!

பண்டிகை தினங்களில் ஆறு மடங்கு அதிகரிப்பு

பண்டிகை தினங்களில் ஆறு மடங்கு அதிகரிப்பு

வாடிக்கையாளர்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப போன்பேயில் தங்கத்தை ரூ.1 முதல் வாங்கலாம். இதில் போன்பே 35% அதிகமான சந்தை பங்கை கொண்டு தங்கத்தை வாங்கும் பெரிய டிஜிட்டல் கோல்டு தளமாக இருக்கிறது. இந்தாண்டு பண்டிகை காலத்தில் மட்டும் அதாவது தசரா முதல் தீபாவளி வரையிலான 21 நாட்களுக்கு தங்க விற்பனை ஆறு மடங்கு அதிகரித்திருக்கிறது என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போன்பே தங்க விற்பனை

போன்பே தங்க விற்பனை

டிசம்பர் மாதம் 2017 ஆம் ஆண்டு தங்க வகை போன்பேயில் அறிமுகப்படுத்தப்பட்டது. 3 ஆண்டுகளாக போன்பே சேஃப் கோல்ட், எம்எம்டிசி-பாம்ப் ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்து பயனர்கள் தங்கத்தை வாங்க அனுமதித்து வருகிறது.

சாதனை அளவிலான தங்க விற்பனை

சாதனை அளவிலான தங்க விற்பனை

கூகுள் பே, அமேசான் பே மற்றும் பேடிஎம் போன்ற தளங்களுடன் போட்டியிடும் போன்பே, தசரா முதல் தீபாவளி வரையிலான 21 நாட்களில் தங்க விற்பனை ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. பண்டிகை காலத்தில் சாதனை அளவிலான தங்க விற்பனையை போன்பே கண்டுள்ளதாக போன்பேவின் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் தங்கத்தின் தலைவர் டெரன்ஸ் லூசியன் கூறியுள்ளார்.

போன்பே நினைவூட்டல் அம்சம்

போன்பே நினைவூட்டல் அம்சம்

ஒவ்வொரு மாதமும் தங்கம் வாங்கும் பழக்கத்தை வாடிக்கையாளர்களிடம் அதிகரிக்க போன்பே நினைவூட்டல் அம்சம் ஒன்றை அறிமுகம் செய்தது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தவறாமல் முதலீடு செய்து அவர்கள் நிர்ணயித்த சேமிப்பு இலக்கை அடைய ஊக்கவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

Best Mobiles in India

English summary
Buying Digital Gold for Minimum of RS.1 at PhonePe: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X