இந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

|

இந்தியாவில் இப்போது ஏராளமான 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிமுகம் செய்து, விற்பனையும் செய்து வருகின்றன. இந்தியாவில், 5ஜி நெட்வொர்க் சேவை இன்னும் அறிமுகம் செய்யப்படாத நிலையில், மக்கள் அதிகம் 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கக் காரணம் என்ன? உண்மையில், இப்போதைய சூழ்நிலையில், மக்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்குவது சிறப்பான முடிவு தானா? ஏன் 5ஜி ஸ்மார்ட்போன்களை இன்றைய காலகட்டத்தில் மக்கள் வாங்குவது சிறப்பானது இல்லை என்பதைப் பற்றி அறிந்துகொள்ளலாம் வாருங்கள்.

இந்தியாவில் அதிகரிக்கும் 5ஜி போன்களின் விற்பனை

இந்தியாவில் அதிகரிக்கும் 5ஜி போன்களின் விற்பனை

கடந்த சில ஆண்டுகளில் மட்டும், இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனங்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. உண்மையைச் சொல்லப் போனால், மக்கள் 5ஜி என்ற வார்த்தையைப் பார்த்ததும், ஆஹா! இது அடுத்த தலைமுறை நெட்வொர்க்கில் இயங்கும் ஸ்மார்ட்போன் தானே, இதை உடனே நாம் வாங்கி, அடுத்தகட்டத்திற்கு நம்மை அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இப்போதிலிருந்தே வாங்கத் துவங்கிவிட்டனர். ஆனால், இதனால் இப்போதைக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை என்பதே ஒரு கசப்பான உண்மை.

5ஜி போன் வாங்குவதால் இப்போதைக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லையா?

5ஜி போன் வாங்குவதால் இப்போதைக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லையா?

எது? 5ஜி ஸ்மார்ட்போன்களை இப்போதே வாங்குவதனால் எந்தவித பிரயோஜனமும் இல்லையா என்று நீங்கள் திடுக்கிடலாம். அடுத்தபடியாக, உங்கள் மனதில் தோன்றும் கேள்வி, ஏன் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இப்போதைக்குப் பிரயோஜனம் இல்லை! என்பதாகத் தான் இருக்கும். வாருங்கள் உண்மை என்ன என்பதை விளக்கமாகப் பார்க்கலாம். உண்மையைச் சொல்லப் போனால் இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்குவது ஏன் பயனளிக்காது என்பதைக் கட்டாயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். உண்மையில், இந்த தகவல் உங்கள் அனைவருக்கும் பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

Google Pay மூலம் கரண்ட் பில் செலுத்துவது எப்படி? வீட்டில் இருந்தபடி சில நொடியில் கரண்ட் பில் செலுத்தலாம்..Google Pay மூலம் கரண்ட் பில் செலுத்துவது எப்படி? வீட்டில் இருந்தபடி சில நொடியில் கரண்ட் பில் செலுத்தலாம்..

பட்ஜெட் விலை முதல் இந்தியாவில் கிடைக்கும் 5ஜி போன்கள்

பட்ஜெட் விலை முதல் இந்தியாவில் கிடைக்கும் 5ஜி போன்கள்

அடுத்த தலைமுறை இணைப்புக்கான ஆதரவுடன் வரக் கூடிய ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களின் தேவை பெரும்பாலானோருக்கு எதிர்காலத்தில் அவசியமாகிவிடும். உண்மையில், இந்தியப் பிரதமர் சொன்னது போல, 5ஜி இணைப்பு ஒன்றரை தசாப்தத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சிக்கு எரியூட்டப் போகிறது. இதை அறிந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள், ஏற்கனவே இந்தியாவில் புதிய 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் தொடங்கிவிட்டனர். கிட்டத்தட்ட, இப்போது பட்ஜெட் விலை முதல் ஒவ்வொரு விலை வரம்பிலும் 5G சாதனங்கள் வாங்குவதற்குக் கிடைக்கின்றன.

5G ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

5G ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

நீங்கள் இந்தியாவில் இப்போது ஒரு புதிய 5G ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவை தான். இதில் முதல் விஷயம் என்னவென்றால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு 5G நெட்வொர்க் சேவை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம் அல்லது 5ஜி அறிமுகம் இன்னும் தாமதமாகலாம். உண்மையைச் சொல்லப் போனால், 5ஜி தாமதம் ஆவதற்கான வாய்ப்பே இங்கு அதிகமாக இருக்கிறது. உங்கள் கைகளில் ஒரு 5G ஸ்மார்ட்போன் வேண்டும் என்பதற்காக மட்டுமே நீங்கள் ஒரு சாதனத்தை வாங்குகிறீர்கள் என்றால், அது இப்போதைக்குச் சிறந்த முடிவாக இருக்காது.

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

5ஜி பற்றி மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

5ஜி பற்றி மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

முதலாவதாக, இந்தியாவில் தற்போது நேரடி 5G நெட்வொர்க்குகள் இன்னும் களமிறக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மேலும், நீங்கள் ஒரு மெட்ரோ நகரத்தில் இல்லை என்றால், குறைந்தபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 5G சேவையைப் பெறுவீர்கள் என்பதே சந்தேகம் தான். பின்னர், 5G வந்தாலும் கூட, நிச்சயமாக, அதன் திட்டங்களின் விலை அதிகமாகத் தான் தொகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் 4ஜி திட்டங்களை விட, இவை விலை உயர்ந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அப்படியானால், யாருக்கெல்லாம் 5ஜி சாதனம் சிறப்பானது?

அப்படியானால், யாருக்கெல்லாம் 5ஜி சாதனம் சிறப்பானது?

இந்தியாவில், நீங்கள் நல்ல வேகத்தைப் பெற விரும்பினால், வீட்டில் ஒரு பிராட்பேண்ட் இணைப்பைப் பெற்றிருந்தாலே போதுமானது. அல்லது, நீங்கள் ஒரு லைவ் ஸ்ட்ரீம் செய்யும் கேமர் என்றாலோ அல்லது 5ஜி வேகம் கட்டாயம் தேவைப்படும் சூழ்நிலை உங்களுக்கு இருக்கிறது என்றாலோ நீங்கள் தாராளமாக 5ஜி இணக்கத்துடன் இணையும் சாதனங்களைப் பயன்படுத்தலாம். அதுவும், நீங்கள் இந்தியாவில் 5ஜி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, அன்றைய காலகட்டத்தில் கிடைக்கும் சிறப்பான சாதனங்களில் உங்கள் பணத்தைச் செலவு செய்யலாம். அதுவே, சிறப்பான முடிவாக இருக்கும்.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

இந்தியாவில் ஏன் 4ஜி சாதனங்களை வாங்குவது பெஸ்ட் தெரியுமா?

இந்தியாவில் ஏன் 4ஜி சாதனங்களை வாங்குவது பெஸ்ட் தெரியுமா?

மற்றொரு காரணம், வாடிக்கையாளர்களுக்கு 5ஜி இணைப்பு இருப்பதை உறுதிசெய்யும் ஆபரேட்டர்களுடன் பேசிய பிறகு பொருத்தமான பேண்ட் ஆதரவுடன் சாதனங்களை வாங்குவது, உங்களின் 5ஜி அனுபவத்தைச் சிறப்பானதாக மாற்றும். கூடுதலாக, 5ஜி நெட்வொர்க்கே இல்லாத இந்த நேரத்தில், 5G சாதனத்தை அதிக விலை செலுத்தி, வாங்கி, ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். உண்மையைச் சொன்னால், வரையறுக்கப்பட்ட அம்சங்களைக் கொண்ட ஒரு 5G போனுக்குப் பதிலாக, அந்த தொகையில், ஒரு வலுவான விவரக்குறிப்புகளுடன் கிடைக்கும் சிறந்த 4G சாதனத்தை வாங்கி பயன்பெறலாம்.

4G சேவையே இன்னும் இந்தியாவில் முழுமையாக விரிவுபடுத்தப்படவில்லையா?

4G சேவையே இன்னும் இந்தியாவில் முழுமையாக விரிவுபடுத்தப்படவில்லையா?

இந்திய நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 4G நெட்வொர்க்குகளை விரிவுபடுத்தி, அதன் சேவையைப் பரப்புவதற்குப் பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதே உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. இன்னும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4G சேவையை இந்தியாவின் மூலை-முடுக்கிற்கு எடுத்துச் செல்லும் விரிவுபடுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 5ஜி அறிமுகத்திற்குப் பின்னர், வெறும் ஒரு ஆண்டில் 5G வெளியீடு எல்லா நகரங்களிலும் விரிவுபடுத்தப்படவும் வாய்ப்பில்லை என்பதே நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமாக இருக்கிறது.

ரூ.11,999 விலையில் ஒரு மார்வலஸ் ஸ்மார்ட்போன் Infinix Note 12.. இன்றே வாங்கிட்டா பெஸ்ட்டுங்க..ரூ.11,999 விலையில் ஒரு மார்வலஸ் ஸ்மார்ட்போன் Infinix Note 12.. இன்றே வாங்கிட்டா பெஸ்ட்டுங்க..

5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க எது சரியான நேரம்?

5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க எது சரியான நேரம்?

5G நெட்வொர்க்குகள் உங்களை அணுகுவதற்குக் கட்டாயம் கணிசமான நேரத்தை எடுத்துக்கொள்ளும் என்பதே நடைமுறை உண்மையாக இருக்கிறது. வெறும் பெயருக்காக ஒரு 5G சாதனத்தை ஆடம்பரமாக வாங்கி, பயனளிக்கலாம் இருப்பதற்குப் பதிலாக நீங்கள், 4ஜி உடன் இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போனை அதே விலையில் வாங்கி அடுத்த சில ஆண்டுகளுக்குப் பயன்படுத்துவது சிறப்பானது. இதுவே இப்போதைக்குச் சிறந்த முடிவாக அமையும். அடுத்தபடியாக 5ஜி உங்கள் வட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், உங்களுக்குப் பிடித்த 5ஜி சாதனத்துடன் உங்களை மேம்படுத்திக்கொள்வது சிறந்த முடிவாக இருக்கும் என்பதே நல்லெண்ணம்.

Best Mobiles in India

English summary
Buying 5G Smartphone Now In India Is Not A Best Idea Know The Reason Before Buying One : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X