Mobile, TWS, Laptop உங்ககிட்ட இருந்தா.. கண்டிப்பா இந்த ரூ.499 ஐட்டம் உங்ககிட்ட இருக்கனும்!
Portronics நிறுவனம் சமீபத்தில் 3 சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் குறிப்பாக 3-வதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாதனத்தை கண்டிப்பாக நாம் அனைவரும் வாங்க வேண்டும். உங்கள் மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டர், இயர்பட்ஸ் அனைத்திற்கும் இந்த ஒரு சாதனம் போதுமானது.
போர்ட்ரானிக்ஸ் ஆர்மியா ரிமூவபிள் அர்மெஸ்ட் (Portronics Armya - Removable Armrest), போர்ட்ரானிக்ஸ் மொபோட் || மொபைல் அண்ட் டேப்லெட் ஸ்டாண்ட் (Portronics MoBot II - Mobile and Tablet Stand) மற்றும் போர்ட்ரானிக்ஸ் கிளீன் M 8 இன் 1 டிவைஸ் கிளீனர் (Portronics Clean M - 8-in-1 Device Cleaner) என்ற 3 சாதனங்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆனால், நாம் இங்கு முழுமையாக பார்க்கவிருப்பது போர்ட்ரானிக்ஸ் கிளீன் M 8 இன் 1 டிவைஸ் பற்றி தான். உங்கள் ஸ்மார்ட்போன், மொபைல் போன், இயர்பட்ஸ், TWS இயர்பட்ஸ், சார்ஜிங், கேஸ், பவர் பேங்க், லேப்டாப், கம்ப்யூட்டர் என்று எந்த கேட்ஜெட் சாதனமாக இருந்தாலும், அதை சுத்தம் செய்து சுத்தமாக பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. இது உங்கள் சாதனத்தின் ஆயுளை அதிகரிக்கும் அதே வேளையில், சாதனத்தை பழுதடையாமல் பாதுகாக்கிறது.
எப்படி நம்முடைய பற்களைத் தினமும் துலக்குவது ஆரோக்கியமா, அதேபோலத் தான் நமது கேட்ஜெட்களையும் சுத்தமாக வைத்துக்கொள்வது முக்கியமானது. இதற்காக நீங்கள் தினமும் அவற்றை சுத்தம் செய்ய வேண்டும் என்பது பொருள் அல்ல. வாரத்திற்கு 1 முறை அல்லது 2 வாரங்களுக்கு 1 முறையாவது நமது சாதனங்களை சுத்தம் செய்துகொள்வது பாதுகாப்பானது. ஏன் சுத்தம் செய்ய வேண்டும்? என்ற காரணத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் கேட்ஜெட்களில் இருக்கும் சிறிய மற்றும் பெரிய துளைகளில் தூசி மற்றும் குப்பைகள் அடைத்துக்கொள்ளும். குறிப்பாக உங்கள் சார்ஜிங் போர்ட், ஸ்பீக்கர் கிரில், மிக் ஹோல் போன்ற இடங்களில் தூசி குப்பை அடைத்துக்கொள்வது இயல்பே. இவை மிகவும் சிறிய துளைகளில் படிந்துகொள்வதனால், அவற்றை சுத்தம் செய்ய நமக்கு பிரத்தியேகமான சாதனங்கள் தேவைப்படுகிறது. இத்தகைய செயல்களுக்காக உருவாக்கப்பட்டது தான் போர்ட்ரானிக்ஸ் கிளீன் M 8 இன் 1 டிவைஸ்.

உங்கள் மொபைல் ஹோல்களில் உள்ள அழுக்குகளை இந்த சாதனத்தில் உள்ள பிரஷ் வைத்து முதலில் சுத்தம் செய்துவிட்டு, பிறகு பின் பாயிண்ட் கிளீனரை வைத்து சுத்தம் செய்துவிட்டு, ஸ்மூத் மைக்ரோ பிரஷ் வைத்து துடைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீனை சுத்தம் செய்ய இதில் ஒரு பிரஸ் செய்தால் போதும், கிளீனரை தெளித்து சுத்தம் செய்ய அனுமதிக்கிறது. இதே போல், TWS இயர்பட்ஸ், லேப்டாப், கீபோர்ட் போன்ற சாதனங்களை சுத்தம் செய்யலாம்.
கீபோர்ட் இடையில் இருக்கும் தூசி அழுக்குகளைச் சுத்தம் செய்ய இதில் பிரத்தியேகமான கீ புல்லர் கருவியுடன் வருகிறது. இதன் உதவியுடன் கீபோர்டில் உள்ள இடைவெளியில் உள்ள அழுகை எளிமையாக சுத்தம் செய்யலாம். உங்கள் சாதனத்தின் ஆரோக்கியத்தை பற்றி உங்களுக்கு அக்கறை இருந்தால், உடனே யோசிக்காமல் இந்த சாதனத்தை வாங்கிக்கொள்ளுங்கள். இது அமேசான் தளத்தில் ரூ.499 விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications