பழைய டிவிய மாத்துவீங்க.. ரூ.20,000 க்கும் கீழ் தள்ளுபடி.. ஆளுக்கொன்னு வாங்கும் பட்ஜெட்.. நச்சுனு ரெண்டு மாடல்!
மார்க்கெட்டில் ரூ.35,000 மதிப்பில் விற்பனை செய்யப்பட்டு வரும் பிராண்ட் ஸ்மார்ட் எல்இடிவிகள், இப்போது அமேசான் பிரீமியம் டிவி டே சேல் (Amazon Premium TV Days Sale) நாட்களில் ரூ.20,000க்கும் கீழ் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
அமேசான் பிரீமியம் டிவி டே சேல் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி ஜூலை 23ஆம் தேதி வரை மட்டுமே நடக்கிறது. இன்னும் 2 நாட்களே விற்பனை நடக்கவிருக்கும் வேளையில், கோடாக் (Kodak) மற்றும் ஏசர் (Acer) நிறுவனத்தின் 40 இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவிகளின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கோடாக் 43 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி (Kodak 43 inch Smart Android LED TV): இதுவொரு பெசல்-லெஸ் டிசைன் 4K அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவியாகும். டிஸ்பிளேவில் 60H ரெப்ஃரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. 178 டிகிரி வியூவிங் கிடைக்கும்.
3 எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் 2 யுஎஸ்பி போர்ட் வருகிறது. ப்ளூ-ரே ஸ்பீக்கர்கள் சப்போர்ட் உள்ளது. ப்ளூடூத், வைபை கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 40W சவுண்ட் அவுட்புட் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), ஜீ5 (Zee5), சோனிலிவ் (Sony LIV) போன்ற ஓடிடி ஆப்களை பயன்படுத்திக் கொள்ளலாம். குரோம்காஸ்ட் (Chromescast) சப்போர்ட் உள்ளது.
ஏ பிளஸ் கிரேடு டிஎல்இடி பேனல் வருவதால், அல்ட்ரா கிளியர் தரத்தில் வீடியோக்களை பார்க்க முடியும். கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் வருகிறது. ஸ்மார்ட் ரிமோட் கொடுக்கப்படுகிறது. இந்த டிவி பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு வருகிறது. இந்த கோடாக் 43 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவியின் விலையை பொறுத்தவரையில், ரூ. 33,999ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது தள்ளுபடி விலையில் ரூ.19,999க்கு கிடைக்கிறது.
ஏசர் 40 இன்ச் ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Acer 40 inch Smart LED Google TV): இதுவொரு ஃபுல்எச்டி (1920x1080 பிக்சல்கள்) மற்றும் 60H ரெப்ஃரெஷ் ரேட் கொண்ட டிவியாகும். 178 டிகிரி வியூவிங் கிடைக்கும். டூயல் பேண்ட் வைபை, 2 வே ப்ளூடூத், 2 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது.
30W சவுண்ட் அவுட்புட் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டேடியம் (Stadium), ஸ்டாண்டர்ட் (Standard), மூவி (Movie), மியூசிக் (Music), ஸ்பீச் (Speech) ஆடியோ மோட்கள் வருகின்றன. குரோம்காஸ்ட், வாய்ஸ் அசிஸ்டென்ட், ஸ்மார்ட் ரிமோட் இருக்கிறது. நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, யூடியூப் ஆப்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
1.5 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல அம்சங்கள் இருக்கின்றன. இந்த டிவி பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஏசர் 40 இன்ச் ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவியின் விலையை பொறுத்தவரையில், ரூ. 29,999ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இப்போது தள்ளுபடி விலையில் ரூ.18,999 க்கு கிடைக்கிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








