டுவிட்டர் வேணாம் இலங்கை ஓகே: இலங்கையை வாங்கி "சிலோன் மஸ்க்" என பெயர்- எலான் மஸ்க்கிற்கு பரிந்துரை!

|

உலகின் மிகப்பெரிய தொழிலதிபரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த சில தினங்களாக இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் என்ற பிரமாண்ட நிறுவனங்களின் நிறுவனர் எலான்மஸ்க். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் இடத்தை பிடித்து இருக்கிறார். இவர் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கினார். டுவிட்டரின் அதிக பங்குகளை வாங்கியதையடுத்து தற்போது டுவிட்டரின் மொத்த பங்குகளையும் வாங்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழு மீட்டிங்

டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழு மீட்டிங்

டுவிட்டரின் மிகப் பெரிய பிரபலங்களில் பிரதானமான ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர், உலகப் பணக்காரர்கள் பட்டியல் பிரதான ஒருவர் என்ற பல புகழ் இவருக்கு இருந்தாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்கப்படும் ஆக்கப்பூர்வமான கேள்விக்கான பதில்கள் மற்றும் உரையாடல்களை அடிப்படை தரப்பினரிடமும், இளைஞர்களிடமும் மேற்கொள்வார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியதையடுத்து எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழு மீட்டிங்கில் இணைய இருக்கிறார் என தகவல்கள் வெளியானது. ஆனால் மஸ்க் இந்த குழுவில் இணைவதற்கு விருப்பமில்லை என தெரிவித்துவிட்டார்.

பேச்சு சுதந்திரம் என்பது சமூகத்தின் உரிமை

பேச்சு சுதந்திரம் என்பது சமூகத்தின் உரிமை

டுவிட்டர் நிறுவன தலைவருக்கு எலான் மஸ்க் அனுப்பிய கடிதத்தில், உலகளாவிய சுதந்திரமான பேச்சுக்கான தளமாக டுவிட்டர் இருக்கும் என நம்பிக்கை வைத்தே முதலீடு செய்தேன், பேச்சு சுதந்திரம் என்பது சமூகத்தின் அடிப்படை உரிமை என நான் நம்புகிறேன் என அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் முழு பங்குகளையும் வாங்க இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியானது, தொடர்ந்து மஸ்க் I Made an Offer என டுவிட் செய்திருந்தார். தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் 100% பங்குகளையும் ஒரு பங்கு 54.20 டாலர் என்ற வீதத்தில் வாங்க தயார் எனவும் விற்பனை தொகையை பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.

மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்

தொடர்ந்து டுவிட்டரை பங்கு சந்தையில் இருந்து விடுவித்து தனியார் நிறுவனமாக மாற்றினால் பல்வேறு மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என மஸ்க் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். டுவிட்டரை மொத்தம் சுமார் 43 பில்லியன் அமெரிக்க டாலருக்க வாங்க தயார் என அறிவித்ததோடு தனது இந்த கோரிக்கையை நிறுவனம் ஏற்காத பட்சத்தில் தனது பங்குதாரர் நிலையை மாற்றுவது குறித்து யோசிக்க வேண்டி இருக்கும் என மஸ்க் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"பாய்ஸன் பில்" என்ற உக்தி

டுவிட்டர் இயக்குனர் குழு டுவிட்டர் நிறுவனம் மஸ்க் கைவசம் செல்வதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து டுவிட்டர் இயக்குனர் குழு "பாய்ஸன் பில்" என்ற உக்தியை கையில் எடுத்துள்ளது. "பாய்ஸன் பில்" உக்தியை இயக்குனர் குழு கையில் எடுத்தால் மஸ்க் நிறுவனத்தை வாங்குவது கடினமாகும். சலுகை விலையில் நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை வாங்க இயக்குனர் குழுவில் இருப்பவர்களை இந்த பாய்ஸின் பில் உக்தி வழிவகுக்கும். இந்த உக்தி ஒருவர் வல்லுக்கட்டாயமாக நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதை தடுக்க உதவும்.

ஸ்னாப்டீல் தலைமை நிர்வாக அதிகாரி குனால்

ஸ்னாப்டீல் தலைமை நிர்வாக அதிகாரி குனால்

இந்த நிலையில் ஸ்னாப்டீல் தலைமை நிர்வாக அதிகாரி குனால், டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முயற்சிக்கும் எலான் மஸ்க்-க்கு மாற்று வழிமுறை குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்தியாவின் இ-காமர்ஸ் தளமான ஸ்னாப்டீல் தலைமை நிர்வாக அதிகாரி குனால் கூறுகையில், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கத் துடிக்கும் மஸ்க் எண்ணத்தையும் இலங்கை நெருக்கடியையும் ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.

இலங்கையை வாங்கி அதற்கு சிலோன் மஸ்க் என பெயர்

அதில் "டுவிட்டரை வாங்க எலான் மஸ்க் குறிப்பிட்ட விலை 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதேபோல் இலங்கையின் கடன் தொகை 45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக இருக்கிறது. மஸ்க் குறிப்பிட்டுள்ள தொகையில் இலங்கையை வாங்கி அதற்கு சிலோன் மஸ்க் என பெயரிட்டு அழைத்துக் கொள்ளலாம் என குனால் தெரிவித்திருக்கிறார். ஒரு கிலோ அரிசி போன்ற உணவுப் பொருட்களின் விலை 500 இலங்கை ரூபாயாக இருக்கிறது. டுவிட்டரை வாங்குவதற்கு பதிலாக இலங்கையை வாங்கலாம் என குணால் பாஹ்ல் மஸ்க்கிற்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த டுவிட் பெரிதளவு வைரலாகி வருகிறது.

Best Mobiles in India

English summary
Buy SriLanka instead of Twitter and name it Ceylon Musk: Snapdeal CEO advices to Tesla Elon Musk

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X