Home
News

ஒரே ஒரு டிக்கெட்.. இனி பஸ், மின்சார ரயில், மெட்ரோவில் ஈஸியா போலாம்.. Chennai-க்கு வரும் புதிய டிக்கெட் சேவை..

இனி பஸ், ரயில் அல்லது மெட்ரோ என்று எந்த பொதுப்பெருந்து சேவையை நீங்கள் பயன்படுத்தினாலும், தனித்தனி டிக்கெட் எடுக்க தேவையில்லை என்றும், இதற்கு மாற்றாக அனைத்து பொதுப்பெருந்து சேவைக்கும் இனி ஒரே ஒரு டிக்கெட் போதும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

என்னது? சென்னை பஸ் (Chennai bus), புறநகர் ரயில் (Chennai Suburban Train) அல்லது மின்சார ரயில் (Electric train) மற்றும் சென்னை மெட்ரோ ரயில் (Chennai Metro train) சேவை என்று அணைத்து விதமான பொதுப்பெருந்து சேவைக்கும் இனி ஒரே ஒரு டிக்கெட் போதுமா? என்று சிலர் ஆச்சரியமாக கேள்வி கேட்கலாம். உங்கள் ஆச்சரியத்தை உண்மையாகும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் புதிய சேவையை அறிமுகம் செய்யவுள்ளது.

ஒரே ஒரு டிக்கெட்.. இனி பஸ், மின்சார ரயில், மெட்ரோவில் ஈஸியா போலாம்..

இனி ஒரே ஒரு டிக்கெட் போதும்.. ஈஸியா சென்னை பஸ், மின்சார ரயில், மெட்ரோவில் பயணிக்கலாம் (only one ticket is enough to travel Easy by Chennai Bus, Electric Train, Metro):

சிங்கப்பூரை தொடர்ந்து இன்டெக்கிரெடட் டிக்கெட்டிங் சிஸ்டம் (Integrated Ticketing System) சேவையை பெரும் நகரமாக சென்னை (Chennai) மாறவுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (Chennai Integrated Transport Corporation), ஒன் கார்டு (One card) என்ற புதிய பிரத்தியேக டிக்கெட் சேவையை வரும் ஜூன் 2ம் வாரம் முதல் சென்னை முழுக்க நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த ஒன் கார்டு டிக்கெட் சேவை இன்டெக்கிரெடட் டிக்கெட்டிங் சிஸ்டம் கான்செப்ட் மூலம் செயல்படப்போகிறது.

பொதுமக்கள் இனி அணைத்து விதமான பயண சேவைக்கும் ஒரே ஒரு டிக்கெட்டை (One ticket for all chennai public transport) காண்பித்து எளிமையாக பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பஸ், மின்சார ரயில் மற்றும் மெட்ரோ போன்ற மூன்று போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டியதுள்ளது. இந்த மூன்று சேவைகளிலும் பயணிக்க மக்கள் தனித்தனியாக டிக்கெட் எடுக்க வேண்டியதுள்ளது.

ஒரே நாளில் சில மக்கள் 2 அல்லது 3 வகையான பொதுப்பெருந்து சேவையை (Public transport) பயன்படுத்த வேண்டியதுள்ளது. ஒவ்வொரு முறையும் தனித்தனியாக டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்பது (ticket que), நேரத்தை விரயமாக்குகிறது. அதேபோல், மக்களை விரக்தி அடைய செய்கிறது. இந்த சிக்கலை சரி செய்ய இப்போது தமிழக அரசு சென்னையில் இன்டெக்கிரெடட் டிக்கெட்டிங் சிஸ்டம் மூலம் ஒன் கார்டு ஒன் டிக்கெட் சேவையை நடைமுறைப்படுத்தவுள்ளது.

ஒரே ஒரு டிக்கெட்.. இனி பஸ், மின்சார ரயில், மெட்ரோவில் ஈஸியா போலாம்..

சென்னை பஸ், மின்சார ரயில், மெட்ரோவில் பயணிக்க ஒரே ஒரு டிக்கெட் போதும்.. ஜூன் 2ம் வாரம் நடைமுறை:

அதாவது உங்களுக்கு ஏடிஎம் கார்டு (ATM card) அல்லது கிரெடிட் கார்டு (Credit card) போன்ற வடிவில் ஒரு டிக்கெட் கார்டு வழங்கப்படும். இந்த ஒரு அட்டையை வைத்து, நீங்கள் மூன்று விதமான பொதுப்பெருந்து சேவைகளை பயன்படுத்தி பயணித்துக்கொள்ளலாம். உங்கள் ஒன் கார்டு அல்லது டிக்கெட் கார்டில் இருப்பு தொகை (balance amount) இருக்கும் படி, உங்கள் தேவைக்கேற்ப தொகையை நீங்கள் ரீசார்ஜ் (recharge) செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

உங்களுக்கு எந்த போக்குவரத்துக்கு சேவை தேவைப்படுகிறதோ அதில் நீங்கள் இனி நேரடியாக பயணிக்கலாம். ஒவ்வொரு பயனமுறைக்கும் இனி நீங்கள் தனித்தனி டிக்கெட் கவுண்டர்களில் நீண்ட நேரம் நின்று டிக்கெட் எடுத்த பின்பு பயணிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த சேவையை பயன்படுத்துவதற்காக தமிழக அரசு புதிய மொபைல் ஆப்ஸை உருவாக்கி வருகிறது. இது ஜூன் 2ம் வாரம் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவித்துள்ளது.

இந்த மொபைல் ஆப்ஸ் (Mobile apps) மூலம் நீங்கள் செல்ல வேண்டிய இடம் மற்றும் பிறப்படும் இடம் போன்ற தகவலை உள்ளிட்ட வேண்டும். எத்தனை பயண முறையை தேர்வு செய்கிறீர்கள் என்று தேர்வு செய்ய வேண்டும். இறுதியாக நீங்கள் பயணிக்கும் வழிக்கான மொத்த கட்டணம் காண்பிக்கப்படும். யுபிஐ பேமெண்ட் (UPI Payment) முறையை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தி உங்களுக்கான கியூஆர் கோட் பொறிக்கப்பட்ட தனி பயன்சேட்டை (QR code ticket) மொபைலில் பெற்று பயணிக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Buy Only One Ticket to Travel in Chennai Bus Electric Train and Metro Easily From June New Integrated Ticketing System Launched
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X