OnePlus Nord CE 3 Lite 5G உடன் Nord Buds CE இலவசமா? இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட் சலுகை!
OnePlus Nord CE 3 Lite 5G சாதனம் இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது. இதன் முதல் விற்பனை வரும் ஏப்ரல் 11ம் தேதி துவங்குகிறது. இப்போது இந்த போனை வாங்க வேண்டுமென்று இளசுகள் எல்லாம் பித்துபிடித்தது போல அமேசான் பக்கம் சுற்றி வருகிறார்கள்.
இவர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையிலும், இவர்களின் ஆசைக்கு தீனிபோடும் விதத்திலும், ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. OnePlus Nord CE 3 Lite 5G போனை வாங்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தவர்களை குஷிப்படுத்தும் வகையில், இந்த போனை ஆர்டர் செய்யபவர்களுக்கு Nord Buds CE இயர்பட்ஸ் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

OnePlus Nord CE 3 Lite 5G போனின் அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக சில வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் தள்ளுபடிகளை வழங்குகிறது. இத்துடன் கூடுதலாக, இப்போது OnePlus Nord CE 3 Lite ஐ வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2,999 மதிப்புள்ள OnePlus Nord Buds CE முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த இலவச OnePlus Nord Buds CE சலுகை OnePlus இணையதளம், Amazon, ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ், அங்கீகரிக்கப்பட்ட கடைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்ட்னர் ஸ்டோர்களில் வாங்க கிடைக்கிறது. OnePlus நிறுவனம் அதன் இணையதளத்தில் OnePlus Nord வாட்ச் மீது ரூ.1,000 தள்ளுபடியை வழங்குகிறது. இது ஏப்ரல் 12 மற்றும் ஏப்ரல் 15-க்குள் கிடைக்கிறது. இதை தவறவிட்டவர்கள் ஏப்ரல் 16 மற்றும் ஏப்ரல் 30 முதல் ரூ.500 தள்ளுபடியைப் பெறலாம்.
OnePlus Nord CE 3 Lite ஆனது 1080 X 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.72' இன்ச் FHD+ IPS LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் பஞ்ச்-ஹோல் கட்அவுட் நாட்ச்சை கொண்டுள்ளது. இது 240Hz டச் சாம்பிளிங் வீதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் லேயர் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னெஸ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான OxygenOS உடன் இயங்குகிறது.

OnePlus Nord CE 3 Lite ஆனது Qualcomm Snapdragon 695 சிப்செட் உடன் வருகிறது. இது 8GB LPDDR4x ரேம் மற்றும் 128GB / 256GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது 67W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
OnePlus Nord CE 3 Lite ஸ்மார்ட்போனில் 108MP சாம்சங் HM6 பிரைமரி சென்சார், 6P லென்ஸ், EIS, LED ஃபிளாஷ் மற்றும் f/1.75 கொண்ட கேமராவை கொண்டுள்ளது. இதில் 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸுடன் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்ஸ் அம்சத்திரக்காக முன்புறத்தில் 16MP ஸ்னாப்பர் உள்ளது. இதன் விலை பற்றி தெரிந்துகொள்ளலாமா?
OnePlus Nord CE 3 Lite சாதனம் இந்தியாவில் விலை 8GB/128GB மாடலுக்கு ரூ.19,999 ஆகிறது. அதேபோல், இதன் 8GB/256GB மாடலின் விலை ரூ.21,999 ஆகவுள்ளது. இந்த டிவைஸ் பாஸ்டல் லைம் மற்றும் க்ரோமாடிக் கிரே வண்ண விருப்பங்களில் வருகிறது. ஐசிஐசிஐ வங்கி பயனர்களுக்கு EMI மற்றும் நெட் பேங்கிங் மூலம் ரூ.1,000 உடனடி வங்கி தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications