OnePlus Nord 2T வாங்கலாமா? இல்ல Nothing Phone 1 போனுக்கு வெயிட் பண்ணலாமா? எது பெஸ்ட்?

|

இதுவரை எந்தவொரு புதிய ஸ்மார்ட்போன் சாதனமும் இப்படி ஒரு அதிக எதிர்பார்ப்பைத் தூண்டியதில்லை, முதல் முறையாக ஸ்மார்ட்போன் சந்தைக்குள் கால்பதிக்கத் துடிக்கும் ஒரு நிறுவனத்தின் முதன்முதல் சாதனத்திற்கு மக்களிடையே இவ்வளவு அதிகப்படியான எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது இதுவே முதல்முறை. இது ஒரு புதிய ஹைப்பை உருவாக்கியுள்ளது. Nothing Phone 1 டிவைஸின் அறிமுகத்திற்காக ஏன் இவ்வளவு ஆரவாரம்?

புதிய OnePlus Nord 2T vs Nothing Phone 1 டிவைஸிற்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு?

புதிய OnePlus Nord 2T vs Nothing Phone 1 டிவைஸிற்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு?

உண்மையிலேயே, ஒரு டிவைஸின் முதல் முறை அறிமுகத்திற்கு முன்னதாகவே ரசிகர்களின் ஆர்வத்தை இவ்வளவு அதிகமாக காண்பதும் இதுவே முதல்முறையாகும். அப்படி நத்திங் போன் 1 டிவைஸில் என்ன இருக்கிறது? ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு? இந்த Nothing Phone 1 சாதனத்தின் அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் முக்கிய போட்டியாளராகக் கருதப்படும் OnePlus நிறுவனத்தின் புதிய OnePlus Nord 2T இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் OnePlus Nord 2T அறிமுகம்

பட்ஜெட் விலையில் OnePlus Nord 2T அறிமுகம்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் OnePlus நிறுவனத்திற்கும் ஏகபோக ரசிகர் பட்டாளம் இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. குறிப்பாக பட்ஜெட் விலை ரசிகர்களுக்காக நிறுவனம் அறிமுகம் செய்த, பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலான OnePlus Nord 2 சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய வெர்ஷன் மாடல் தான் இந்த புதிய OnePlus Nord 2T டிவைஸ். மிரட்டலான டிஸைனுடன் OnePlus Nord 2T இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு ஸ்மார்ட்போன் பயனர்களின் கவனத்தை இப்போது ஈர்த்துள்ளது.

TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!

இந்த இரண்டு போனில் எந்த போனை வாங்குவது என்ற குழப்பமா?

இந்த இரண்டு போனில் எந்த போனை வாங்குவது என்ற குழப்பமா?

OnePlus Nord 2T இப்போது ஒரு புறம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, மற்றொரு புறம் Nothing Phone 1 சாதனம் அறிமுகத்திற்கு முன்னதாகவே இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்போதே, இந்த இரண்டு மாடல்களுக்கும் இடையில் ஒரு போட்டி துவங்கிவிட்டது. சரி, இப்போது நாம் OnePlus Nord 2T வாங்குவது சிறந்ததா? அல்லது Nothing Phone 1 அறிமுகத்திற்காக நாம் காத்திருந்து, அதற்கு பின்னர் எந்த மாடலை வாங்குவது என்ற தீர்மானத்திற்கு வருவது சிறந்ததா? என்பதை பார்க்கலாம்.

Nothing Phone 1 மீது மக்களுக்கு ஏன் எவ்வளவு ஆர்வம்? அப்படி என்ன இருக்கிறது இதில்?

Nothing Phone 1 மீது மக்களுக்கு ஏன் எவ்வளவு ஆர்வம்? அப்படி என்ன இருக்கிறது இதில்?

நத்திங் நிறுவனம், ஸ்மார்ட்போன் சந்தைக்குள் இப்போது தான் முதல் முறையாக நுழைகிறது, இந்த நிறுவனத்தின் ஆகச்சிறந்த முதல் சாதனமே இந்த Nothing Phone 1 தான் என்பது கவனிக்கத்தக்கது. இந்த டிவைஸ் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்ததற்கான முக்கிய காரணம், இதன் டிசைன் தான். டிரான்ஸ்பரென்ட் லுக்கில் வைட் லைட் நுணுக்கங்களுடன், இது ஸ்மார்ட்போன்பிரியர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. மறுபுறம், இதன் அம்சங்களும் நம்பகமான முறையில் இருக்கிறது.

நத்திங் போன் 1 இல் இருக்கும் சிப்செட் எவ்வளவு சிறந்தது?

நத்திங் போன் 1 இல் இருக்கும் சிப்செட் எவ்வளவு சிறந்தது?

நமக்குத் தெரிந்த தகவலின் படி, நத்திங் போன் 1 கூலான டிஸைனுடன் Qualcomm Snapdragon 778G சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இந்த சிப்செட்டுடன் நத்திங் போன் சிறப்பாகச் செயல்படும் என்று நாம் கூறினாலும், இதில் அவ்வளவு சிறப்பாக எதுவுமில்லை. ஏனெனில் இந்த சிப்செட் நத்திங் போனின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் அதன் திறனைச் சிறப்பாக்குகிறது. உண்மையை சொன்னால், இந்த சிப்செட் ஸ்மார்ட்போனுக்கு தேவையான விஷயங்களை நன்கு சமநிலைப் படுத்துகிறது.

மீனவர் வலையில் சிக்கிய மர்மமான ஆழ்கடல் உயிரினம்.. இது அதிசய மீனா இல்ல அசிங்கமான மீனா?மீனவர் வலையில் சிக்கிய மர்மமான ஆழ்கடல் உயிரினம்.. இது அதிசய மீனா இல்ல அசிங்கமான மீனா?

ஒருவேளை இதை செய்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்

ஒருவேளை இதை செய்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்

இருப்பினும், Nothing நிறுவனம் இதற்குப் பதிலாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் உடன் சென்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். காரணம், இந்த சிப்செட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. நத்திங் போனின் பின்புறம் லைட் மற்றும் பிற மாற்றங்கள் எதுவும் இல்லாமல் முற்றிலும் சாதாரணமாக இருப்பதால் இந்த சிப்செட்டை பயன்படுத்தியிருந்தால் வயர்லெஸ் சார்ஜிங்கையும் போனுடன் சேர்த்திருக்கலாம்.

OnePlus Nord 2T ஏன் இப்போதைய பெஸ்ட் டிவைஸ்?

OnePlus Nord 2T ஏன் இப்போதைய பெஸ்ட் டிவைஸ்?

ஒருவேளை நத்திங் போன் 1 பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்படுவதினாலோ என்னவோ, நிறுவனம் 778G சிப்செட்டை பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. இப்போது, நத்திங் போன் 1 டிவைஸ், ஒன்பிளஸ் நார்ட் 2T இருக்கும் அதே இடைப்பட்ட பட்ஜெட் பிரிவில் இறங்க வாய்ப்புள்ளது என்பதால் இது இரண்டையும் நாம் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகச் சரியாக இருக்கும். OnePlus Nord 2T ஸ்மார்ட்போன் சாதனம் இன்று இந்தியாவில் மிரட்டல் தோற்றத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

OnePlus Nord 2T வாங்கலாமா? அல்லது Nothing Phone 1 வாங்கலாமா?

OnePlus Nord 2T வாங்கலாமா? அல்லது Nothing Phone 1 வாங்கலாமா?

இப்போது, பலருக்கும் இருக்கும் குழப்பம் என்னவென்றால், Nothing Phone 1 அறிமுகத்திற்காகக் காத்திருக்கலாமா? அல்லது OnePlus Nord 2T டிவைஸையே வாங்கலா என்பது தான். சரி, இப்போது இந்த குழப்பத்திற்கு விடை என்ன என்பதைப் பார்க்கலாம். OnePlus Nord 2T வாங்கலாமா? அல்லது Nothing Phone 1 வாங்கலாமா? என்ற குழப்பத்தில் உள்ள நபர்கள், கட்டாயம் உங்களின் நேரத்தைக் கொஞ்சம் செலவு செய்து, இந்த இரண்டு விருப்பங்களையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது முதலில் சிறந்தது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?

OnePlus Nord 2T இவர்களுக்கெல்லாம் சிறந்தது

OnePlus Nord 2T இவர்களுக்கெல்லாம் சிறந்தது

ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதனால் இதை நீங்கள் செய்வது சிறந்தது. OnePlus Nord 2T வடிவமைப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் அதன் முந்தைய மாடலான OnePlus Nord 2 டிவைஸை விடச் சிறிய மேம்படுத்தல்களைப் பெற்று, புது பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் OnePlus Nord 2 சாதனத்தைப் பயன்படுத்தியிருந்தால், நிச்சயமாக இந்த புதிய OnePlus Nord 2T சாதனம் உங்களுக்கான சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Nothing Phone 1-க்காக காத்திருக்க போறீங்களா?

Nothing Phone 1-க்காக காத்திருக்க போறீங்களா?

ஆனால், நத்திங் போன் 1 டிவைஸின் அறிமுகம் ஜூலை 12 ஆம் தேதி நிகழும். இந்த டிவைஸின் அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், உங்களின் காத்திருப்பிற்கும் அர்த்தம் உள்ளது. ஆனால், OnePlus Nord 2T ஐப் பெறுவதற்கு முன்பு நீங்கள் காத்திருக்க நினைத்தால், Nothing Phone 1 டிவைஸை விட OnePlus Nord 2T ஸ்மார்ட்போன் இப்போது பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த சாதனமாகும் என்பதை மறக்காதீர்கள். நத்திங் போன் 1 இன் அறிமுகம் விலை ரூ. 26,999 முதல் ரூ.30,000 விலைக்குள் எதிர்பார்க்கப்படுகிறது என்பதையும் மறக்காதீர்கள்.

நத்திங் இயர் 1 நிலைமை என்ன ஆனது என்று மறந்துவிடக்கூடாது

நத்திங் இயர் 1 நிலைமை என்ன ஆனது என்று மறந்துவிடக்கூடாது

Nothing Phone 1 டிவைஸின் அறிமுகம் ஜூலை 12, 2022 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை, நீங்கள் வேறு எந்த ஸ்மார்ட்போனிலும் கண்டிடாத சில விஷயங்களை நத்திங் போன் 1 மூலம் பார்க்க வாய்ப்புள்ளது. ஆனால், நிறுவனத்தின் நத்திங் இயர் 1 என்ற இயர்போன் சாதனம் கூட ஆரம்பத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, இறுதியில் அந்த சாதனத்தின் அம்சங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லாததால் மக்களிடம் வரவேற்கப்படவில்லை என்பதையும் நாம் இந்த இடத்தில் கவனிக்க வேண்டியதுள்ளது. ஆனால், நத்திங் போன் 1 அப்படி இருக்காது என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Buy OnePlus Nord 2T Now OR Wait For Nothing Phone 1 Which Phone Is a Best Choice

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X