நாளை ஓபன் சேல்ஸ்.. Nothing Phone (2a) போனை ரூ.19 ஆயிரம் விலைக்கு வாங்கலாமா? எப்படி? எங்கே? என்ன செய்யணும்?
நத்திங் (நத்திங்) நிறுவனத்தின் புதிய வரவான நத்திங் ஃபோன் (2a) - Nothing Phone 2a ஸ்மார்ட்போனின் விற்பனை நாளை மதியம் துவங்குகிறது. இந்த போனை வெறும் ரூ.19,000 விலை புள்ளியில் வாங்க ஒரு வாய்ப்புள்ளது. அதை பற்றி இப்போது பார்க்கலாம்.
Nothing Phone 2a: நத்திங் ஃபோன் (2a) கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனை நிறுவனம் ரூ. 23,999 விலையில் அறிமுகம் செய்தது. இந்த விலை வெளியீட்டு விழாவில் குறிப்பிடப்பட்ட விலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய போன் நத்திங் ஃபோன் (2a) சாதனத்தை அறிமுக விற்பனையின் போது வெறும் ரூ. 19,999 விலையில் வாங்க ஒரு வாய்ப்புள்ளது.

இதன் விற்பனை மார்ச் 12 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் துவங்குகிறது. இந்த விற்பனையின் போது, HDFC கார்டு பயனர்களுக்கு ரூ. 2000 உடனடி தள்ளுபடி மற்றும் கூடுதல் ரூ. 2000 எக்ஸ்சேஞ் தள்ளுபடி கிடைக்கிறது. HDFC கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு இந்த உடனடி தள்ளுபடியாக ரூ. 2,000 கிடைக்க போகிறது. இதன் மூலம் நத்திங் ஃபோன் (2a) போனின் விலை ரூ.21,999 வரை குறையும்.
இத்துடன் கூடுதல் சலுகையாக ரூ. 2,000 பஎக்ஸ்சேஞ் சலுகையுடன் நத்திங் ஃபோன் (2a) போனின் விலை ரூ.19,999 ஆக குறைகிறது. இத்துடன் நத்திங் ரசிகர்களுக்கு இன்னும் கூடுதல் சலுகைகளை நிறுவனம் வழங்கியுள்ளது. CMF பட்ஸ் ரூ. 1,999 மற்றும் CMF Power 65W GaN சார்ஜர் ரூ. 1,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 2499 ஆகும்.
இதற்கு மேல் கூடுதலாக பிளிப்கார்ட் (Flipkart) இல் 2000 கூப்பன் வழங்கப்படுகிறது. சில அதிர்ஷ்டசாலி பயனர்களுக்கு ரூ. 2000 கூப்பன் தள்ளுபடி கிடைக்கிறது. பிளிப்கார்ட் பயனர்கள் மார்ச் 12 முதல் பிளிப்கார்ட்டில் கூப்பனைப் பெறலாம். Flipkart பயன்பாட்டில் 'My Account' என்பதை கிளிக் செய்யவும். பிளிப்கார்ட் பயன்பாட்டின் மெனுவில் இந்த விருப்பத்தை நீங்கள் காணலாம்.

'கூப்பன்கள்' மெனுவிற்குச் சென்று உங்களின் தனிப்பட்ட 8 இலக்கக் குறியீட்டை உள்ளிடவும். அடுத்தபடியாக, நத்திங் ஃபோன் (2a) தயாரிப்புப் பக்கத்திற்குச் செல்லவும். உங்கள் தள்ளுபடி குறியீடு அடிப்படை விலையில் தானாகவே பயன்படுத்தப்படும். தள்ளுபடி கூப்பனை மற்ற எக்ஸ்சேஞ்ச் மற்றும் வங்கிச் சலுகைகளுடன் பயன்படுத்தலாம் என்பதை நத்திங் கூறியுள்ளது.
கூப்பன் 20 மார்ச் 2024 வரை செல்லுபடியாகும். ஆனால், ரூ. 2000 HDFC தள்ளுபடி மார்ச் 12 அன்று மட்டுமே கிடைக்கும். நத்திங் ஃபோன் (2a) மார்ச் 12 முதல் பிளிப்கார்ட், குரோமா மற்றும் விஜய் சேல்ஸ் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும். இந்த புதிய நத்திங் ஃபோன் (2a) மூன்று வேரியண்ட் மாடல்களில் வழங்குகிறது.
நத்திங் ஃபோன் (2a) ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 23,999 விலையில் வருகிறது. இந்த போனின் 8 ஜிபி + 256 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை முறையே - ரூ. 25,999 மற்றும் ரூ. 27,999 விலையில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








