Home
News

வோடோபோன் புதிய போஸ்ட்பெய்டு சிம் டோர்ஸ்டெப் டெலிவரி டைம் தெரியுமா?

உலகின் மிகப் பெரிய நெட்வக்களில் ஒன்றான வோடோபோன் நிறுவனம், தனது பயனர்களுக்கு புதிய சேவையை தொடங்கியுள்ளது. வோடோபோன் நிறுவனம் தனது பிளான்களில் அடிக்கடி மாற்றங்களைக் கொண்டுவந்து கொண்டே இருக்கிறது.

By Sharath

உலகின் மிகப் பெரிய நெட்வக்களில் ஒன்றான வோடோபோன் நிறுவனம், தனது பயனர்களுக்கு புதிய சேவையை தொடங்கியுள்ளது. வோடோபோன் நிறுவனம் தனது பிளான்களில் அடிக்கடி மாற்றங்களைக் கொண்டுவந்து கொண்டே இருக்கிறது.

வோடோபோன் புதிய போஸ்ட்பெய்டு சிம் டோர்ஸ்டெப் டெலிவரி டைம் தெரியுமா?

அப்படி தற்பொழுது வோடோபோன் நிறுவனம் பிரத்தியேக சேவையைத் தனது பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இனிமேல் நீங்கள் வோடோபோன் ஸ்டோர்களுக்கு சென்று புது சிம் வாங்க வேண்டிய அவசியமில்லை. இனி வோடோபோன் இணையத்தளத்திற்கே சென்று உங்கள் புதிய சிம் கார்டுகளை டோர்ஸ்டெப் டெலிவரி சேவைப்படி பெற்றுக்கொள்ளலாம்.

சிறப்பு சேவை

சிறப்பு சேவை

புதிய போஸ்ட்பெய்டு கனெக்க்ஷன் பெறுவதற்கு வோடோபோன் வலைத்தளத்திற்குச் சென்று உங்கள் தனிப்பட்ட விவரங்களை நிரப்புங்கள். பிறகு உங்களுக்குப் பிடித்த பிளான் ஐ தேர்வு செய்துகொள்ளுங்கள். வோடோபோன் உங்களுக்காகவே தனி சிறப்பு சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி உங்களுக்கு பிடித்தமான போன் எண்களை நீங்களே தேர்வு செய்யும் உரிமையை உங்களுக்கு வழங்கியிருக்கிறது வோடோபோன் நிறுவனம்.

எண்களை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம்

எண்களை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம்

உங்களுக்கு விருப்பமான எண்களை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம். உங்களுக்கான சிம் கார்டு மைக்ரோ மற்றும் நானோ சிம் வசதியுடன் உங்கள் வீட்டிற்கே வந்து தரப்படும் என வோடோபோன் உறுதியளித்துள்ளது.
உங்கள் புதிய போஸ்ட்பெய்டு கனெக்க்ஷன் பெற வெறும் 1 நிமிடம் மட்டுமே ஆகும் எனவும் வோடோபோன் தெரிவித்திருக்கிறது. இத்துடன் உங்கள் முதல் 6 மாத காலத்திற்கு 20% தள்ளுபடியையும் அறிவித்திருக்கிறது.

வோடோபோன் போஸ்ட்பெய்டு பிளான்

வோடோபோன் போஸ்ட்பெய்டு பிளான்

வோடோபோன்போஸ்ட்பெய்டு பிளான் பட்டியலில் 299,399,499,1299,1999 மற்றும் 2999 பிளான்களில் உங்களுக்குப் பிடித்த பிளான் ஐ தேர்வு செய்துகொள்ளுங்கள். ரூ.299 பிளான் தவிர்த்து மற்ற அணைத்து பிளான்களும் அமேசான் ப்ரைம் ஓராண்டு சந்தாவுடன் வருகிறது.

செயல்முறை:

செயல்முறை:

- shop.vodafone.in வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்
- ஷாப் ஆப்ஷன் செல்லுங்கள்
- புதிய போஸ்ட்பெய்டு கனெக்ட்ஷன் கிளிக் செய்யுங்கள்
- கெட் நியூ போஸ்ட்பெய்டு சிம் என்ற ஆப்ஷன் கிளிக் செய்யுங்கள்
- உங்கள் பெயர், மொபைல் எண், ஈமெயில் விவரம் மற்றும் உங்கள் லொகேஷன் விவரங்களை நிரப்புங்கள்
- உங்களுக்கு பிடித்தமான பிளான் ஐ தேர்வு செய்யுங்கள்
- உங்களுக்குப் பிடித்த புது போஸ்ட்பெய்டு எண்ணைத் தேர்வு செய்யுங்கள்
- உங்கள் விலாசத்தை நிரப்புங்கள்
அவ்வளவு தான் உங்களுடைய புதிய வோடோபோன் போஸ்ட்பெய்டு சிம் வீடு தேடி வரும்.

Best Mobiles in India

English summary
Buy New Vodofone Postpaid Connection & Get SIM Home Delivery : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X