வெறும் ரூ.9840 க்கு புது பிரிட்ஜ்.. 223 லிட்டர்.. 5-ஸ்டார் ரேட்டிங்.. டபுள் டோர்னு Amazon-ன் டாப் 5 ஆஃபர்கள்!
"புது ஸ்மார்ட்போன் வாங்குற எந்த ஐடியாவும் இல்ல.. லேப்டாப், இயர்பட்ஸ், ஸ்மார்ட் டிவி மீது அறிவிக்கப்பட்டுள்ள எந்தவொரு ஆஃபரை பற்றியும் எனக்கு கவலை இல்லை.. ரூ.20000 க்குள் பிரிட்ஜ்களின் மீது ஏதேனும் நல்ல ஆஃபர் இருந்தால் சொல்லுங்களேன்!" என்று கூறுபவரா நீங்கள்?
ஆமென்றால்.. கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Indian Festival Sale) ரூ.20000க்குள் வாங்க கிடைக்கும் டாப் 6 பிரிட்ஜ்களின் (Top 6 Refrigerator Deals) பட்டியல் இதோ:

01. கோத்ரேஜ் இயான் 244பி (Godrej EON 244B) பிரிட்ஜ்: 223 லிட்டர் கொள்ளளவு மற்றும் 2 ஸ்டார் ரேட்டிங் கொண்ட இந்த கோத்ரேஜ் டபுள் டோர் பிரிட்ஜின் அசல் விலை ரூ.33,690 ஆகும். இருப்பினும் இது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது (கூப்பன்கள் மற்றும் வங்கி சலுகைகளின் கீழ்) வெறும் ரூ.13,990 க்கு வாங்க கிடைக்கிறது.
02. சாம்சங் ஆர்ஆர்24சி2823சியு (Samsung RR24C2823CU) பிரிட்ஜ்: 223 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த சாம்சங் பிரிட்ஜ் ஆனது 2 அல்லது 3 பேர் கொண்ட சிறிய குடும்பத்திற்கு மிகவும் ஏற்ற மாடல் ஆகும். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் ரூ.25,999 க்கு பதிலாக ரூ.19,694 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக ரூ.5,000 பேங்க் ஆபர் மற்றும் ரூ 3,282 முதல் நோ-காஸ்ட் இஎம்ஐ போன்ற சலுகைகளும் கிடைக்கிறது.
03. சாம்சங் ஆர்ஆர்24சி2ஒய்23எஸ்8 (Samsung RR24C2Y23S8) பிரிட்ஜ்: 223 லிட்டர் கொள்ளளவு, 3 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் கொண்ட இந்த சாம்சங் பிரிட்ஜ் ஆனது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது வெறும் ரூ.12,490 க்கு (அனைத்து வங்கி சலுகைகள் உட்பட) வாங்க கிடைக்கும். இதன் சாம்சங் பிரிட்ஜின் அசல் விலை ரூ.22,999 ஆகும்.
04. சாம்சங் ஆர்ஆர்21சி2எச்25சிஆர் (Samsung RR21C2H25CR) பிரிட்ஜ்: 223 லிட்டர் கொள்ளளவு, 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் உடன் வரும் இந்த சாம்சங் பிரிட்ஜ் ஆனது 31% தள்ளுபடியை பெற்று ரூ.17,290 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த சாம்சங் பிரிட்ஜின் அசல் விலை ரூ.24,999 ஆகும். இந்த பிரிட்ஜ் மீது கூடுதலாக சில பேங்க் மற்றும் கேஷ்பேக் ஆபர்களும் கிடைக்கின்றன.
05. ஹேயர் எச்இடி-240டிஸ்-பி (Haier HED-204DS-P) பிரிட்ஜ்: 190 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த ஹேயர் பிரிட்ஜ் ஆனது சிங்கிள் டோர் மாடல் ஆகும் மற்றும் இது 4-ஸ்டார் எனர்ஜி ரேட்டிங்கை பெற்று உள்ளது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, இது 31% தள்ளுபடியை பெற்று ரூ.14,490 க்கு வாங்க கிடைக்கும். இந்த ஹேயர் பிரிட்ஜின் அசல் விலை ரூ.20,990 ஆகும்.
06. வேர்ல்பூல் 215 விட்டமேஜிக் ப்ரோ பிஆர்எம் (Whirlpool 215 VITAMAGIC PRO PRM) பிரிட்ஜ்: 192 லிட்டர் கொள்ளளவு மற்றும் 3 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங்கை பெற்று உள்ள இந்த வேர்ல்பூல் பிரிட்ஜின் அசல் விலை ரூ.17600 ஆகும். இருப்பினும் இது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் பொது, இது வெறும் ரூ.9,840 க்கு வாங்க கிடைக்கிறது.
ஆகமொத்தம், அமேசானில் நடக்கும் பண்டிகை கால சிறப்பு விற்பனையானது உங்கள் வீட்டில் இருக்கும் பழைய பிரிட்ஜ் மாடலை, பட்ஜெட் விலையில் மாற்றுவதற்கான நல்ல-நல்ல வாய்ப்புகளை உங்களுக்கு வழங்குகிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையானது சரியாக எப்போது முடியும் என்கிற தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








