Home
News

iPhone 15 Pro போனை வெறும் ரூ.40,000-திற்கு வாங்கலாமா? இப்படி செஞ்சா கண்டிப்பா வாங்கலாம்.! உண்மையை உடைத்த நபர்.

ஐபோன் 15 ப்ரோ போன்ற விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை நாம் வாங்க திட்டமிடும் போது, கொஞ்சம் ஸ்மார்ட்டாகவும், சமர்த்தியமாகவும் யோசிக்க வேண்டும் என்பதே உண்மையாகும். காரணம், கொஞ்சம் நேரம் செலவழித்து, சில வழிமுறையை பின்பற்றினால் இந்த போனை ரூ.40,000 விலைக்கு வாங்கலாம்.

எது ரூ.1,34,900 மதிப்பிலான புது ஐபோன் 15 ப்ரோ சாதனத்தை வெறும் ரூ,40,000 விலையில் வாங்கலாமா? இது உண்மை தானா? என்றால், இது உண்மையே. சில எளிய வழிமுறைகளை பின்பற்றி இதை உண்மை என்று நிரூபித்திருக்கிறார் ஒரு ஆப்பிள் ஐபோன் ரசிகர். இது இந்தியர்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

iPhone 15 Pro போனை வெறும் ரூ.40,000-திற்கு வாங்கலாமா? இதோ டிப்ஸ்..

இந்த பதிவில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களை நீங்கள் பின்பற்றினால் கட்டாயமாக ஐபோன் 15 ப்ரோவை (iPhone 15 Pro) வெறும் ரூ.40,000 விலையில் வாங்க சிலருக்கு வாய்ப்பு அதிகம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சரி, வாருங்கள் புது ஐபோன் 15 ப்ரோ மாடலை வெறும் ரூ.40,000 விலையில் வாங்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

1. கிரேடு கார்டு (Credit card) சலுகையை மிஸ் செய்யாதீர்கள்
முதலில் நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் உங்கள் கிரெடிட் கார்டு சலுகையை (credit card offers) பயன்படுத்துவதாகும். இந்த நபர் அவருடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.6000 உடனடி தள்ளுபடியை பெற்று, ஐபோன் 15 ப்ரோ போனின் விலையை ரூ.1,28,900 ஆக குறைத்திருக்கிறார்.

2. ஜிஎஸ்டி (GST) நன்மைகளை முழுமையாக பெறுவது
வணிக உரிமையாளர்கள், சேவை வழங்குநர்கள் அல்லது ஜிஎஸ்டி பதிவைக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த ஸ்டேப் ஒரு கேம்-சேஞ்சர் ஆகி மாறும். உங்களின் ஜிஎஸ்டி எண்ணைப் (GST Number) பயன்படுத்துவதன் மூலம், 18% உள்ளீட்டு வரிக் கிரெடிட்டைப் நீங்கள் பெற முடியும். அதாவது ரூ.19,663 வரை தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ஐபோன் 15 ப்ரோ விலையை ரூ.1,09,237 வரை குறைக்க முடியும்.

iPhone 15 Pro போனை வெறும் ரூ.40,000-திற்கு வாங்கலாமா? இதோ டிப்ஸ்..

3. எக்ஸ்சேஞ் போனஸை கட்டாயம் மறக்கவே கூடாது
ஐபோன் வாங்கும் போது உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் (Exchange offer) அல்லது டிரேட்-இன் (Trade-in offers) செய்வது அதிக லாபத்தை தரும் நண்பர்களே. பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள நபரிடம் ஐபோன் 14 ப்ரோ இருந்துள்ளது. இதை அவர் எக்ஸ்சேஞ் செய்த போது ரூ.60,000 வரை கூடுதலாக சேமிக்க முடிந்துள்ளது. இதன் மூலம் வெறும் ரூ.40,000 விலை புள்ளியில் இவரால் புது ஐபோன் 15 ப்ரோ மாடலை சொந்தமாக்க முடிந்துள்ளது.

இது தவிர, அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் தளங்கள் மூலம் இவருடைய பழைய ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro) சந்தானத்திற்கு கூடுதல் போனசாக ரூ..9000 தள்ளுபடியும் கிடைத்துள்ளது. இந்த 3 செயல்முறைகளை பின்பற்றி, அந்த நபர் புது ஐபோன் 15 ப்ரோ மாடலை வெறும் ரூ.40,000 செலவில் வாங்கி மகிழ்ந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மூன்று படிகளை கவனமாக பின்பற்றுவதன் மூலம், iPhone 15 Pro இன் நிகர விலை ரூ.1,34,900 இலிருந்து வியக்கத்தக்க ரூ.40,237 ஆக சரிந்தது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால், ரூ.40,000 விலைக்குக் கீழே கூட இதன் விலையை குறைந்திருக்க வாய்ப்புள்ளது என்று அந்த நபர் கூறியுள்ளார். இந்த குறிப்பிடத்தக்க ஷாப்பிங் டிப்ஸை எல்லோரும் பயன்படுத்தி, முடிந்த வரை ஐபோன் 15 ப்ரோ சாதனத்தின் விலையை கணிசமாக குறைக்கலாம் என்று அந்த நபர் கூறியுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Buy iPhone 15 Pro For Just Rs 40000 By Using This Secret Shopping Tips 2023 Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X