Home
News

Haier 190L சிங்கிள் டோர் 5 ஸ்டார் பிரிட்ஜை ரூ.4790 விலையில் வாங்கலாமா? Flipkart-ல் அதிரடி தள்ளுபடி!

கோடை காலம் துவங்கிவிட்டது. காற்றில் அனல் பறக்க துவங்கிவிட்டது. வெளியில் சென்று வீடு திரும்பினால் உடனே ஜில் என்று ஏதாவது சாப்பிட வேண்டும் அல்லது குடிக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இதற்கு நம் வீட்டில் ஒரு பிரிட்ஜ் இருப்பது அவசியமாகிறது.

கோடை காலத்தில் வீட்டில் ஒரு பிரிட்ஜ் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அந்தந்த வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளைக் கேட்டால் தான் விஷயம் புரியும். கோடை காலத்தில் வீட்டில் சமைக்கும் உணவுகள் வேகமாகப் பாழாகிவிடும். இவற்றை பக்குவப்படுத்தக் குளிர்சாதனப் பெட்டிகள் தேவைப்படுகின்றன. மறுபுறம், கோடை சூட்டை தணிக்க ஜீஸ், ஜில் தண்ணீர், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சேமிக்கவும் பிரிட்ஜ் அவசியமாகிறது.

Haier 190L சிங்கிள் டோர் 5 ஸ்டார் பிரிட்ஜை ரூ.4790 விலையில் வாங்கலாமா?

உங்கள் வீட்டில் பழைய பிரிட்ஜ் இருந்தாலும் சரி, அல்லது பிரிட்ஜ்ஜே இல்லாமல் புது பிரிட்ஜ்ஜை வாங்க நீங்கள் திட்டமிட்டாலும் சரி, இந்த பதிவு உங்களுக்கானது. புதிய 190L கொள்ளளவு கொண்ட பிரிட்ஜ்ஜை வெறும் ரூ. 4790 என்ற விலையில் வாங்க ஒரு சூப்பர் சான்ஸ் கிடைத்துள்ளது. இந்த சலுகையைப் பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கீழே பார்க்கலாம். வாங்க..

வெப்பநிலை அதிகரிப்பால் கோடை காலம் கடினமாகி வருகிறது, இதனால் மக்கள் தங்கள் அன்றாட பணிகளைச் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. கோடைக்கால பிரச்சனைகளை முழுமையாக நம்மால் சரி செய்ய முடியாவிட்டாலும், சிலவற்றை நாம் சாமர்த்தியமாகக் கடந்து செல்ல முடியும். புதிய Haier 190L Direct Cool Single Door 5 Star Fridge உங்களிடம் இருந்தால், இந்த கோடை காலத்தை கவலையின்றி கடக்க முடியும்.

இந்த ஹையர் 190L டைரக்ட் கூல் சிங்கிள் டோர் 5 ஸ்டார் ரெஃப்ரிஜிரேட்டர் இந்த கோடை காலத்தில், உங்களுக்குத் தேவையான குளிர்ந்த நீரையும் பானங்களையும் சில்லென்று வழங்குகிறது. இது உங்கள் வெப்பநிலையைக் குறைக்க உதவும். இந்த குளிர்சாதனப் பெட்டியை இப்போது நீங்கள் அட்டகாசமான தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த பிரிட்ஜ் இப்போது ஃப்ளிப்கார்ட் வழியாகச் சிறப்புத் தள்ளுபடி விலையில் வாங்கக் கிடைக்கிறது.

Haier 190L சிங்கிள் டோர் 5 ஸ்டார் பிரிட்ஜை ரூ.4790 விலையில் வாங்கலாமா?

இந்த டீலின் படி, உங்களுக்கு 31% தள்ளுபடி கிடைக்கிறது. இத்தகைய தள்ளுபடியை Flipkart மட்டுமே வழங்குகிறது. வேறு எங்கும் இப்படி ஒரு சலுகையை உங்களால் பார்க்க முடியாது. Haier பிராண்ட் பல காலமாகத் தனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல தயாரிப்புகளை வழங்கிய வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஹையர் ஒரு நம்பகமான பிராண்டாக மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ளது.

இந்த 5 ஸ்டார் பிரிட்ஜ்ஜின் அசல் விலை ரூ. 24,490 ஆகும். ஆனால், இப்போது கிடைக்கும் Flipkart Big Saving Days Sales இன் படி, இதை வெறும் ரூ. 16,790 என்ற விலையில் வாங்க முடியும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் உங்களுக்கு ரூ. 7,700 மிச்சம் ஆகிறது. இது ஒரு சிறந்த தள்ளுபடி தான், இருப்பினும், நிறுவனம் உங்களுக்கு இன்னும் சில கூடுதல் சலுகையை வழங்குகிறது.

இந்த ஹையர் 190L டைரக்ட் கூல் சிங்கிள் டோர் 5 ஸ்டார் ரெஃப்ரிஜிரேட்டர் வாங்கும் வாடிக்கையாளருக்கு, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் ரூ. 1,250 வரை 10% தள்ளுபடி கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் 10% தள்ளுபடி பெறலாம். Flipkart Axis Bank கார்டில் 5% கேஷ்பேக் பெறலாம். இது தவிர பிளிப்கார்ட் உங்களுக்கு எக்ஸ்சேஞ் சலுகையையும் வழங்குகிறது.

உங்கள் பழைய குளிர்சாதனப் பெட்டியை மாற்றினால், இந்த ஒப்பந்தத்தின் மூலம், உங்களுக்கு ரூ. 12,000 வரை கூடுதல் தள்ளுபடியைப் பெற முடியும் என்பது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் ஹையர் 190L டைரக்ட் கூல் சிங்கிள் டோர் 5 ஸ்டார் பிரிட்ஜ் இன் இறுதி விலை வெறும் ரூ. 4,790-க்கு கிடைக்கிறது. இது அதிகப்படியான எக்ஸ்சேஞ் வேல்யூ என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Buy Haier 190L Direct Cool Single Door 5 Star Fridge at Rs 4790 Hot Sale On Flipkart Big Saving Days Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X