ரூ.18,999 Fire-Boltt Rock வாட்ச் இப்போ வெறும் ரூ.3499 தானா? எங்கே வாங்கினால் இந்த ஆஃப்பர் ரேட்!
Fire-Boltt Rock ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தின் மீது நம்ப முடியாத சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் அதன் அசல் விளையான ரூ.18,999 என்ற விலையில் இருந்து சரசரவென கீழ் இறங்கி, இப்போது வெறும் ரூ.3,499 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.
இந்த விலையில் இந்த புதிய Fire-Boltt Rock ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை எங்கிருந்து வாங்குவதென்று பார்க்கலாம் வாங்க. Fire-Boltt Rock 1.3 AMOLED Display Bluetooth Calling Rotating Crown Voice Assistant Smartwatch ஐ நீங்கள் நிச்சயமாகப் வங்கியாக வேண்டும் மக்களே. இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் புளூடூத் காலிங் அம்சத்துடன் வருகிறது. இதில் வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சம் கூட உள்ளது.

இந்த Fire-Boltt Rock ஸ்மார்ட் வாட்ச்சின் மிக சிறந்த சிறப்பான விஷயம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் ரொடேட்டிங் கிரௌன் போன்ற அதிநவீன அம்சங்களுடன் வருகிறது. இது ஒரு பிரீமியம் ஸ்மார்ட் வாட்ச் சாதனமாகும். இது தரமான மற்றும் உறுதியான எலைட் உலோகத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது.
எப்போது ஒரு ஸ்மார்ட் வாட்சை வாங்கும் போது அதன் டிஸ்பிளேவை உன்னித்து கவனிப்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில், இந்த சாதனம் மிகவும் துல்லியமான கிளாரிட்டியை வழங்கும் AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே எல்லாவற்றையும் கூர்மையாகவும், தெளிவாகவும் தோற்றமளிக்கிறது. இது உங்கள் ஸ்மார்ட்போன் நோட்டிபிகேஷனை நேரடியாக ஸ்மார்ட்வாட்ச் டிஸ்பிளேவில் காண்பிக்கிறது.
Flipkart இல் இந்த Fire-Boltt Rock ஸ்மார்ட் வாட்ச் சாதனம் நம்பமுடியாத 81% தள்ளுபடியை இப்போது பெற்றுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடியை கட்டாயம் நீங்கள் தவறவிடக்கூடாது. இந்த அருமையான ஸ்மார்ட்வாட்சை உங்கள் சேகரிப்பில் சேர்த்து அதன் பல பயனுள்ள அம்சங்களிலிருந்து பயனடைய இனி காத்திருக்க வேண்டாம். அப்படி என்ன அம்சங்கள் இதில் இருக்கிறதென்று கேட்கிறீர்களா? இதோ சொல்கிறோம். ஃபயர்-போல்ட் ராக் ஸ்மார்ட்வாட்ச் 1.32' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இதை ஒரு ஸ்டைலான மற்றும் பயனுள்ள கேட்ஜெட்டாக நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அதன் டிஸ்பிளேவில் 390 x 390p போன்ற கூர்மையான மற்றும் தெளிவான படங்களைக் காண்பிக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அதிகபட்சமாக 550 நிட்ஸ் கொண்ட பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இது 100+ ஸ்போர்ட்ஸ் மோட் உடன் வருகிறது. அதேவேளையில், 100-க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ் அம்சத்தையும் ஆதரிக்கிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் 260 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. எனவே ரீசார்ஜ் செய்யாமல் ஒரு வாரம் செயல்பட முடியும். எனவே, பேட்டரி பற்றிய கவலை இல்லாமல் நீண்ட நேரம் அணியலாம். ஃபயர்-போல்ட் ராக் ஸ்மார்ட்வாட்சின் விலை என்ன? ஃபயர்-போல்ட் ராக் ஸ்மார்ட்வாட்ச் தற்போது Flipkart இல் 81% தள்ளுபடியில் உள்ளது. இதன் அசல் விலை ரூ.18,999 ஆகும். ஆனால் இப்போது ரூ.3499 விலைக்கு கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.15,500 சேமிக்க அனுமதிக்கிறது.


Click it and Unblock the Notifications








